77 தங்க ப் பதக்கம் வென்ற பெண் தொழிலாளி : தமிழக முதல்வரை ச் சந்திக்க விருப்பம்
வால்பாறை:விளையாட்டு போட்டியில், 77 தங்கப் பதக்கங்களை குவித்த பெண் தொழிலாளி, தமிழக முதல்வரை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ளது, சின்கோனா லாசன் டிவிஷன். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த தேயிலை எஸ்டேட்டில், தொழிலாளியாக பணிபுரிபவர், கணேசன். இவர் மனைவி ஜானகி, 36. இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.விளையாட்டில் ஆர்வமுள்ள ஜானகி, 2000ம் ஆண்டு முதல், வனத்துறை சார்பில், மாநில, தேசிய அளவில் நடத்தப்பட்ட தடகள போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றுள்ளார்.
தொடர்ந்து, 13 ஆண்டுகளாக விளையாட்டு போட்டியில், சாதனை படைத்து வருகிறார். இந்த ஆண்டு கோவையில், மாநில அளவில் நடந்த ஓட்டப் பந்தயத்தில், 8 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதுவரை, 77 தங்கப் பதக்கமும், 7 வெள்ளிப் பதக்கமும், 13 வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.ஜானகி கூறுகையில், ""படிக்கும் வயதிலேயே விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. திருமணத்திற்கு பிறகும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றுள்ளேன். வனத்துறையில், என் தகுதிக்கு ஏற்ப, ஏதாவது ஒரு வேலை கிடைத்தால், மேலும் உற்சாகமாக இருக்கும். தமிழக முதல்வரை, நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக