செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

மூன்று தங்கப் பதக்கம் வென்ற, அனுராதா:


பளு தூக்கும் மாணவி!

21  அகவையில், தில்லி தேசிய  இளவர்  பளுதூக்கும் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற, அனுராதா

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூருக்கு அருகில் நெம்மேலிப்பட்டி என்ற குக்கிராமத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். ஜே.ஜே., கலை அறிவியல் கல்லூரி யில், முதுகலை யில் கணினி அறிவியல் படிக்கிறேன். என், 12 வயதிலேயே, அப்பா இறந்துவிட, அண்ணன் தான், குடும் பத்தை கவனிக்கிறார். பெருங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, குடும்ப நண்பர் ஒருவர், பளுதூக்கும் விளையாட்டில் கவனம் செலுத்தினால், நீ சாதிக்கலாம் என, ஊக்கப்படுத்தினார். பள்ளியிலும், ஊரிலும் பளுதூக்கும் பயிற்சிக்கான வசதிகள் இல்லாததால், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் பயிற்சியளிக்க, பள்ளியின் விளையாட்டு ஆசிரியரும் முன்வந்தார். பேருந்து வசதி இல்லாததால், பயிற்சிக்காக தினமும், 4 கி.மீ., நடந்து, பெருங்களூரிலிருந்து பேருந்தில் புதுக்கோட்டைக்கு செல்வேன். "பொம்பளப் புள்ள இப்படி வெளியே சுத்துவது சரியில்லை' என, ஊர்க்காரங்க அண்ணனிடம் சொன்னாலும், கண்டுக்காமல், பயிற்சிக்கு உதவினார். கடந்த, 2009ம் ஆண்டு, தஞ்சையில் கல்லூரிகளுக்கு இடையிலான, பளுதூக்கும் போட்டியிலும், சேலத்தில் நடந்த ஜூனியர் பிரிவிலும், கன்னியாகுமரியில் நடந்த சீனியர் பிரிவிலும், மாநில அளவில் முதலிடம் பெற்றேன். சென்னையில் நடைபெற்ற, ஊரக விளையாட்டு பைக்கா போட்டியிலும், கேரளா மற்றும் பஞ்சாப் அமிர்தசரசில் நடைபெற்ற போட்டியிலும், முதல் பரிசு வென்றேன். சமீபத்தில், டில்லியில் நடந்த, தேசிய ஜூனியர் பளுதூக்கும் போட்டியில், தமிழகம் சார்பில், "ஸ்னாட்ச்' பிரிவில், 73 கிலோ எடையை தூக்கி, ஒரு தங்கமும், "க்ளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் ஒரு தங்கமும், ஒட்டுமொத்த செயல்பாடுகள் பிரிவில் ஒரு தங்கம் என, மொத்தம், மூன்று பதக்கங்கள் வென்றேன். ஒலிம்பிக்கில் பங்கேற்பதே, என் அடுத்த இலக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக