சனி, 10 நவம்பர், 2012

விழிப்புணர்வு இல்லாத "விழி'கள் பதிவு!: திறன் அட்‌டைப் பணிகள் தொய்வு

விழிப்புணர்வு இல்லாத "விழி'கள்‌ பதிவு!:
"ஸ்மார்ட் கார்டு' பணிகள் தொய்வு

கோவை:உடற்கூறு அடிப்படையிலான இருப்பிட அடையாளஅட்டை வழங்குவதற்கான,விரல் மற்றும் கருவிழி பதிவுவிபரங்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வுஇல்லை. இது தொடர்பாக,உரிய விளம்பரங்கள் செய்யப்படாததால், திட்டப் பணிகளில்தொய்வு ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு உடற்கூறு அடிப்படையிலான (பயோ மெட்ரிக்) இருப்பிட அடையாள அட்டைகள் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன்படி, பொதுமக்களின்அடிப்படை விபரங்கள், உடற்கூறு அடையாளங்களுடன்பதிவு செய்யப்படுகின்றன.இதற்காக கண்ணின் கருவிழிமற்றும் கைகளின் 10 விரல்ரேகைகள் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

எதிர்காலத்தில் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும், உடற்கூறுபதிவுகளின் அடிப்படை யிலானஅடையாள ஆவணத்தின்படிவழங்க அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கார்டுகளை புதுப்பித்து வழங்கும்போதும், உடற்கூறு பதிவுகள்கொண்ட "ஸ்மார்ட்' ரேஷன் கார்டாக வழங்கவும், அரசு பரிசீலனை செய்து வருகிறது. இப்பணிகள் தேசிய மக்கள் தொகைபதிவேடு அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரின் விரல் ரேகைகள்,கண் கருவிழிகள், புகைப்படங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

அக்., 3 முதல் கோவைமாவட்டத்தில் கோவை (தெற்கு)மற்றும் பொள்ளாச்சி தாலுகாக்களுக்கு உட்பட்ட சில இடங்களில்,இதற்கான முகாம்கள்நடந்தன. ஆனால், இது குறித்துபோதிய பிரசாரமோ, விளம்பரமோ இல்லாததால், பொதுமக்கள்இடையே விழிப்புணர்வுஇல்லை. பதிவு விபரங்கள்குறித்தோ, இதன் அவசியம்என்ன என்பது குறித்தோ பொதுமக்கள் பலரும் அறிந்தவர்களாக இல்லை. இதனால்,பதிவு செய்வோர் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது.

பொதுமக்கள் கூறுகையில்,"எங்கு முகாம் நடக்கிறது என்பதே எங்களுக்கு தெரியவில்லை. வீடுகள் தோறும் அலுவலர்கள் வந்து பதிவு செய்துக்கொள்வார்களா? வாக்காளர்அடையாள அட்டை பதிவு,விலையில்லா பொருட்கள்வழங்கும்போது சரியான தகவல்களை முன்கூட்டியே தருகின்றனர்; அரசியல் கட்சியினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால். ஸ்மார்ட் கார்டுவிஷயத்தில் அப்படி இல்லை.வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இதற்கு யாரும்அளிப்பதில்லை. இது நல்ல திட்டம்; ஆனால், செயல்படுத்துவதில் இருக்கும் குளறுபடிகளால், திட்டத்தின் நோக்கம்நிறைவேறாமல் போய்விடுகிறது.எங்களுக்கு விருப்பம்இருந்தும், பதிவு செய்ய முடியவில்லை' என்றனர்.

கோவை மாவட்டத்தில் ஆறுதாலுகாக்களில் இரண்டில் மட்டுமே பணிகள் துவங்கியுள்ளன. அதுவும் சில கிராமங்கள் மட்டும், தேர்வு செய்யப்பட்டுள்ளன. கோவை தெற்குதாலுகாவுக்கு உட்பட்ட குறிச்சிஹவுசிங் யூனிட் உட்பட்ட சிலபகுதிகளில், உடற்கூறு பதிவுக்குபொதுமக்களுக்கு டோக்கன்வழங்கப்பட்டது. ஆனால்,"மின்சாரம் இல்லை; வீடியோகேமராமேன் வரவில்லை'எனக் கூறி, பதிவுப்பணிகள்பாதியில் நிறுத்தப்பட்டன. ஆபரேட்டர், கேமராமேன் பற்றாக்குறையும், பணிகளில் தொய்வுஏற்பட முக்கிய காரணம்.

தமிழகத்தில் கடந்த 2011ம்ஆண்டு ஜூன் மாதம் இப்பணிகள் துவங்கின. அரியலூர்,பெரும்பலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்டமாவட்டங்களில் பணிகள் ஓரளவு முடிந்துள்ளன. 2013மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்க மத்திய உள்துறைஅமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.ஆனால், இந்தஇலக்கை எட்டுவது சிரமம் எனஅதிகாரிகள் கூறுகின்றனர்.

இன்னொரு "ஆதார்?':கடந்த சில மாதங்களுக்குமுன்பு, "ஆதார் அடையாளஅட்டை' பெயர் பதிவுப்பணிகள் தீவிரமாக நடந்தன.பிப்., 6ம் தேதியுடன் இந்தபணிகள் நிறுத்தப்பட்டன. மாவட்டத்தில் றைந்தஅளவிலான மக்களே"ஆதார் அட்டை' பெற்றுக்கொண்டனர். அதே போல்,ஸ்மார்ட் கார்டு திட்டமும்அனைத்து தரப்பு மக்களையும் எட்டாமல் செல்லும்நிலை உள்ளது. எங்கெங்கு, எப்போது பெயர்பதிவு மற்றும் உடல்கூறுபதிவு நடக்கிறது; என்னென்னஆவணங்கள்தேவை என்பது குறித்து,உரிய அதிகாரிகள் அவ்வப்போது தகவல்களை வெளியிட்டால், பொதுமக்கள்பங்கேற்பை அதிகப்படுத்தமுடியும்; திட்டத்தின் நோக்கமும் நிறைவேறும்.

தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக