ஞாயிறு, 13 மார்ச், 2011

confusion continues in d.m.k.-cong. sharing: திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு: நீடிக்கும் குழப்பம்

குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க அதிமுக காத்திருக்கிறது. என்றாலும் குழப்பம் நீட்டிப்பது தமிழ்நாட்டிற்கு நன்மை. குழப்பத்தின் விளைவு தேர்தல் பணியில் எதிரொலிக்கும்.  அதன் விளைவு முடிவில் எதிரொலிக்கும். காங்.துடைத்தெறியப்பட்ட செய்தி உலகெங்கும் எதிரொலிக்கும். அன்புடன் 
இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி/ 

திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு: நீடிக்கும் குழப்பம்

First Published : 12 Mar 2011 01:09:02 PM IST


சென்னை, மார்ச் 12: தொகுதிப் பங்கீடு விஷயமாக காங்கிரஸ்-திமுக இடையே நிலவும் குழப்ப நிலை நீடித்து வருகிறது. இன்று காலை நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை தொடராமல் போனது.காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் என்று முடிவாகிவிட்ட நிலையில், தொகுதிகளை அடையாளம் காண்பதில் திமுக-காங்கிரஸ் இருதரப்புக்கும் இடையே குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு தொகுதிப் பங்கீடு விஷயமாக திமுக தரப்புடன் பேசி வருகிறது. அறிவாலயத்தில் நடந்து வரும் பல கட்டப் பேச்சுகளில் காங்கிரஸின் ஐவர் குழுவால் இன்னும் இறுதி நிலையை எட்ட முடியவில்லை என்று தெரிகிறது. இன்று காலை பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டதால், அறிவாலயத்தில் திமுக தரப்பில் கூடியிருந்தவர்கள் காங்கிரஸின் ஐவர் குழுவுக்காகக் காத்திருந்தனர். அதே நேரம், காங்கிரஸின் ஐவர் குழு மற்றும் சில நிர்வாகிகள் காங்கிரஸின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலையில் கூடி ஆலோசனை நடத்தினர். இதிலும் எந்த முடிவும் எடுக்கப்படாததால், அந்தக் குழுவினர் அறிவாலயம் பக்கம் செல்லாமல் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை மீண்டும் மாலையில் தொடரும் என்று காங்கிரஸின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 63 தொகுதிகளை பல்வேறு இன்னல்களுக்கு இடையில் பெற்றுவிட்டு இன்னும் தொகுதி முடிவு செய்யப்படாமல் பேச்சுவார்த்தை இழுத்தடித்துக்  கொண்டு வருவது இருதரப்பு தொண்டர்களிடையேயும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்

சட்டு புட்டுன்னு தொகுதிய வாங்கிட்டு பணத்தை ரிலீஸ் பன்னுகப்பா சரக்கு வாங்க கையில காசு இல்லாமல் தொண்டர்கள் வேற கட்சி வேலபக்க போயர போரனுவோ! அப்புறம் காங்கிரஸின் ஜாமீன்தர்கள் போஸ்டர் ஓட்டவேண்டிவந்துடும்! enga போட்டியிட்டாலும் தோல்வி உறுதின்னு தெரிஞ்சு தைரியமா கூட்டணி வக்கிர உங்க நேர்மை எனக்கு புடுச்சிருக்கு
By பரகத் அலி
3/12/2011 1:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக