தி.மு.க.தொண்டர்களில் பெரும்பான்மையர்க்குத் தமிழ்ப்பற்று இருப்பினும் பிற கட்சியினர் போல் தலைமைக்குக் கொத்தடிமைகளாக உள்ளதால் அமைதி காப்பர். தலைமைக்கு எதிர்க்கட்சியாக இருந்தால்தான் தமிழ்ப்பற்று வரும் என்பது பலர் கூறும் கூற்று. எனவே, இந்த ஆர்ப்பாட்டம் தேர்தல் தந்திரம் என்றாவது எதிர்க்கட்சியாக மாறுவதற்கான ஒத்திகை என்றாவது கருதப்படும். வேறு வகையில் பார்த்தால் கையால்ஆகாத அரசு என்ற பெயர் வரும். ஆளுங் கட்சி இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை நிறுத்த வேண்டும். அலைக்கற்றை ஊழலை மறைப்பதற்கான நாடகம் எனச் சொல்வார்கள் என அறிந்தும் திடீர்ப்பாசத்தைக் காட்டுவதைவிடச் சோனியாவின் இல்லத்தின் முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றுகை யிடலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++
சென்னை, பிப். 15: நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை சிறைபிடிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்தும், மீனவர்களை விடுவிக்கக் கோரியும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருக்கிறது. சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பும், மாநிலத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மீன்பிடி வலைகளை அறுப்பது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீன்களை அள்ளிச் செல்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது என இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமாரை இலங்கைக் கடற்படையினர் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, அத்துமீறி நடந்துகொள்ளும் இலங்கைக் கடற்படையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பினார். இந்த விஷயத்தில் பிரதமரின் தனிப்பட்ட தலையீடு அவசியம் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உத்தரவின்பேரில் வெளியுறவு செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தினார்.மீண்டும் அத்துமீறல்: இந்த நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 18 மீன்பிடிப் படகுகளும், இந்தப் படகுகளிலிருந்த மீனவர்கள் 106 பேரும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது. சிறைபிடிக்கப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தொலைபேசி மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் இலங்கை மீனவர்கள் சிறைபிடித்து, இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்ததாகவும், இலங்கைக் கடற்படையே நேரடியாக தமிழக மீனவர்களைச் சிறைபிடித்துச் சென்றதாகவும் மாறுபட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.இலங்கைத் தூதரகம், துறைமுகங்கள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்: இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 106 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை அருகே சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது என்றும் அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.மீனவர்கள் வேலைநிறுத்தம்:இந்நிலையில், மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நாகப்பட்டினம், காரைக்கால் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள்


By sarath
2/16/2011 9:37:00 AM
2/16/2011 9:37:00 AM


By அய்யன்பேட்டை தனசேகரன்
2/16/2011 9:31:00 AM
2/16/2011 9:31:00 AM


By madhuraikkaaran
2/16/2011 9:25:00 AM
2/16/2011 9:25:00 AM


By ***முமசு***
2/16/2011 9:15:00 AM
2/16/2011 9:15:00 AM


By மதுரைக்காரன்
2/16/2011 9:07:00 AM
2/16/2011 9:07:00 AM


By ரா.சேகர்
2/16/2011 7:58:00 AM
2/16/2011 7:58:00 AM


By கமலக்கண்ணன்.ம
2/16/2011 7:53:00 AM
2/16/2011 7:53:00 AM


By Jeyam
2/16/2011 7:39:00 AM
2/16/2011 7:39:00 AM


By கென்னடி
2/16/2011 7:17:00 AM
2/16/2011 7:17:00 AM


By ramana
2/16/2011 7:17:00 AM
2/16/2011 7:17:00 AM


By esan
2/16/2011 6:50:00 AM
2/16/2011 6:50:00 AM


By ஜெயராஜ் வி.சி.
2/16/2011 6:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்2/16/2011 6:07:00 AM
ஆர்ப்பாட்டம்: கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது
First Published : 16 Feb 2011 10:55:03 AM IST