வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

India request ilangai to release 136 fishermen: 136 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கைக்கு இந்தியா கோரிக்கை

தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவரை நடத்திய படுகொலைகளுக்கு எல்லாம் எரி குண்டுகளும் படைக்கலன்களும் ஏவுகணைகளும் வானூர்திகளும் தளபதிகளையும் வீரர்களையும் வல்லுநர்களையும் வழங்கவில்லையா? எனவே மீண்டும் மீண்டும் மீண்டும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். சனியன் பிடித்த தேர்தல் தமிழ் நாட்டில் நடக்கப் போகிறது. என் செய்வது? எனவே, அம்மா உங்களுக்கு உதவ முடியாமல் தவிக்கிறார்கள். வாக்குப் பதிவு அன்றைக்கே கூட நீங்கள்வழக்கம் போல் ஆட்டம் போடலாம். நாங்களும்- உங்கள் அடிமையான நாங்களும் - வேடிக்கை பார்ப்போம் . ஏன் மீண்டும் உதவுவோம். எனவே விட்டு விடுங்கள். தமிழர்கள் மீது பழி போடுவதற்கான நாடகம்தானே ௧௦௬ பேர் கைது! விட்டு விடுங்கள். அப்புறம் அந்தப் பதினான்கு பேர்.இப்பொழுது வேண்டா. முதலில் வந்து உயிரை விடாத  ௬ பேர் வேறு கழுத்தறுக்கிறார்கள். விட்டுத் தள்ளுங்கள். தேர்தலுக்குப்பின் ௧௩௬ என்ன? ௧௧௩௬ பேரைக்கூடப்  பிடிக்க்லாமே! வதைக்கலாமே! நாங்கள் என்ன சொல்லப் போகிறோம்! என்று பேசியிருப்பாரோ??? 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


136 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கைக்கு இந்தியா கோரிக்கை


புதுதில்லி, பிப்.17: யாழ்ப்பாணத்தில் பிடித்துவைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இந்தியா, அவர்களை விடுவிக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பெரிஸுடன் இதுகுறித்து தொலைபேசியில் உரையாடினேன். யாழ்ப்பாணத்தில் 136 மீனவர்கள் பிடித்துவைக்கப்பட்டுள்ளது குறித்து இந்தியாவின் கவலையை அப்போது தெரிவித்தேன் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தில்லியில் தெரிவித்தார்.இந்தியா, இலங்கை இடையேயான இருதரப்பு உறவின்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் எழுந்துள்ள பதற்றத்தைத் தணிக்க இருவரும் உதவ வேண்டியது அவசியம். மீனவர்களை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என கிருஷ்ணா தெரிவித்தார்.இலங்கையில் வியாழக்கிழமை விடுமுறைதினம், அன்றைய தினம் நீதிமன்றம் செயல்படாது. வெள்ளிக்கிழமை நீதிமன்றம் திறந்ததும், 136 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துகள்

இந்திய பேரரசு மீது இலங்கை அவிழ்த்துவிடும் அராஜகத்தை தட்டிக் கேட்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது மத்திய அரசு... சொந்த நாட்டு மக்களை அடுத்த நாட்டு ராணுவத்திடம் பலி கொடுக்கும் கொடுமை இந்தியாவை தவிர வேற எந்த நாட்டிலும் நடக்காது
By ரவி
2/17/2011 8:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக