First Published : 21 Dec 2011 02:27:27 PM IST
Last Updated : 21 Dec 2011 03:58:36 PM IST
செங்கோட்டை, டிச.21: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து, செங்கோட்டையில் கேரளா செல்லும் பாதையில் முற்றுகையிட்ட நாஞ்சில் சம்பத் உள்பட 1357 பேர் கைது செய்ப்பட்டனர்.தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் 13 வழிச் சாலைகளிலும் மதிமுக சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார்.முன்னதாக அவர் பேசுகையில், தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்டது. ஆனால் அங்கே லட்சணக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் கேரள அரசோ, 119 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொண்டு வந்து, அங்கு குடியேற்றியது. மலையாளிகளுக்கும், கேரளர்களுக்கும் என்ன வித்தியாசம்?இந்தியாவின் கட்டுமானத்தையே அசைக்க நினைத்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சிந்து நதிநீர் பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.சபரிமலை சாஸ்தாவை பிரபலப்படுத்தியவரே பிடிஆர் ராஜன் என்கிற தமிழர்தான். தமிழகத்தில் 30 லட்சம் கேரள மலையாளிகள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அந்த தண்ணீர் அளவையாவது கொடுங்கள். நாங்கள் கேட்பது எங்கள் உரிமையைத்தான் என்றார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
<மலையாளிகளுக்கும், கேரளர்களுக்கும் என்ன வித்தியாசம்? >சரியாகச் செய்தியைக் குறிப்பிடுக. சொன்னாலும் கேட்கப் போவதில்லை. இருப்பினும் என் வலைப்பூவில் படிப்பவர்களுக்காகக் குறிக்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக