திங்கள், 19 டிசம்பர், 2011


பாவம் நெடுமாறன்!அப்பாவியாக இருக்கிறாரே. தன் சிக்கல்களில் இருந்து திசை மாற்ற  ஏதோ உளறினார்.  உடனே திரும்பவும் பெற்றுக்  கொண்டார். உளறலை உண்மை என நம்பி அறிக்கை விடுத்து விட்டார். ஏதோ பழையக் கட்சிப் பாசத்தில்  இப்படிச் சொல்லி விட்டார் போலும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

சிதம்பரத்துக்கு கேரள அரசியல்வாதிகள் மிரட்டல்: நெடுமாறன் கண்டனம்

First Published : 18 Dec 2011 12:27:25 PM IST


சென்னை, டிச.18: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை கேரள அரசியல்வாதிகள் மிரட்டுவதாக பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலை மனதில் கொண்டு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையை கேரள அரசியல்வாதிகள் ஊதி பெரிதாக்குகிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளதை கண்டித்து கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் உட்பட பல கட்சித்தலைவர்களும் சிதம்பரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கூக்குரலிட்டுள்ளனர்.மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் எவ்வாறு இப்படி கூறலாம் என்றும் கண்டித்துள்ளனர்.மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் ஏ. கே. அந்தோணி கடற்படை நீர்மூழ்கி வீரர்களை பெரியாறு அணைக்கு அனுப்பி அணையை சோதனை செய்ய ஆணையிட்டு அவர்களும் தமிழக அரசின் அனுமதியின்றி அவ்வாறு செய்தார்கள். உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் பெரியாறு அணைப் பிரச்னை இருக்கும் போது இவ்வாறு ஏ. கே. அந்தோணி அத்துமீறி செயல்பட்ட போது அதை கேரள அரசியல்தலைவர்கள் உற்சாகமாகப் பாராட்டி வரவேற்றார்கள். ஆனால் இப்போது ஒரு பொதுக் கூட்டத்தில் மூத்த காங்கிரசு தலைவர் என்ற முறையில் ப. சிதம்பரம் பேசியதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.கேரளத்தின் சார்பில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் ஏ. கே. அந்தோணி, வயலார் ரவி போன்றவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை சம்பந்தமாக பிரதமரை சந்தித்து தங்கள் தரப்பை வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சர் பதவி வகிப்பவர்கள் பிரதமரைச் சந்தித்து நமது தரப்பை நியாயங்களை எடுத்துக் கூற முன்வரவில்லை.ஆனால் மூத்த காங்கிரசு தலைவர் என்ற முறையில் ப. சிதம்பரம் இப்போதாவது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை குறித்து தமிழ்நாட்டின் நிலைக்கு ஆதரவு தெரிவித்துப் பொதுக்கூட்டத்திலேயாவது பேசியிருப்பதை நான் பாராட்டுகிறேன். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மற்ற தமிழர்களும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முன் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
கருத்துகள்

தமிழகத்தை காப்பாற்ற தமிழகத் தலைவர்கள் தேவையில்லை தமிழக மக்களே போதும் என்பது இந்த முல்லைப் பெரியார் பிரச்சினையில் தெல்லத் தெளிவாக தெரிகின்றது.
By அப்துல் ரஹ்மான் துபாய்
12/18/2011 9:22:00 PM
நெடுமாறன் அண்ணாச்சி நீங்க இதுவரை வாயே திறக்கலையே? முல்லை பெரியார் அணை இலங்கையில் இல்லை என்பதாலா?............. அல்ல நண்பரே !... அவர் புலிப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுக்க போய்விட்டார் !! இப்போதுதான் ஞாபகம் வந்திருக்கிறது....
By Jey
12/18/2011 8:09:00 PM
ஆடு நனையுதேன்னு ஓநாய் அலுவுதாம்
By ram
12/18/2011 7:28:00 PM
தமிழ்நாட்டை சேர்ந்த மற்ற அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் எம்பிக்கள்கூட பேட்டி கொடுக்கும்போது தனித்தனியாக பேட்டி கொடுப்பதும், ஒன்றுசேர்ந்து பிரதமரை சந்திக்காததும் உண்மையில் வெட்கப்படவேண்டியது.
By நா.சிவலிங்கம்
12/18/2011 3:29:00 PM
சமீப காலத்தில் மௌனம் சாதிக்கும் அல்லது உண்மை பேச மறுக்கும் ப. சி. பொதுக் கூட்டத்தில் ஒரு உண்மையைப் பேசி விட்டார் என்று நினைத்தால் .... அப்படிப் பேசி சாண்டியை கோபப்படுத்தி விட்டோம் என்று இன்று வருத்தம் தெரிவித்து விட்டாரே... பாவம் நெடுமாறன். ப. சி. மட்டும் அல்ல. காங்கிரஸ் மாறாது. தேசியம் இல்லாத தேசியக் கட்சிகளுக்கு முன்னோடி...
By கே. பி. பாஸ்கர்
12/18/2011 3:07:00 PM
மதிப்பிற்குரிய நெடுமாறன் அவர்களே! சாமியா இருந்தாலும், ஆசாமியா இருந்தாலும் அண்டைமாநில கவர்ச்சியை நாடும் பகுத்தறிவு தமிழர்களை சத்தியமாக நீங்கள் திருத்தமுடியாது. ஆகவே வலைவிரிக்கும் கூட்டத்தினரை ஒழிக்க, அவர்களே தன் மீது தானே வெட்கப்படவைக்கும் செயல்களில், நாம் இறங்கினால் ஒழிய மாற்றம் ஏற்படாது. அடி மேல் அடி வைத்தால்.. சீ... இதுவும் ஒரு பொழப்பான்னு மனம் திருந்த வாய்ப்புள்ளது. ..ஹி... ஹி....ஹி யாரு திருந்த வாய்பிருக்கு சாரே?
By கடலூர் சித்தன்.ஆர்
12/18/2011 2:12:00 PM
அவ்வாறு பேசியதையும் நடுங்கி கொண்டு வாபஸ் வாங்கி விட்டார் சிதம்பரம் என்பது லேட்டஸ்ட் நியூஸ்.சேலை கட்டிய சீமான்.தொடை நடுங்கி.கேவலப்படுத்திவிட்டார்.பேசாம ராஜினாமா செஞ்சுடலாம்.மானமாவது தேறும்.
By கே சுகவனம்
12/18/2011 1:59:00 PM
நெடுமாறன் அண்ணாச்சி நீங்க இதுவரை வாயே திறக்கலையே? முல்லை பெரியார் அணை இலங்கையில் இல்லை என்பதாலா?
By Nawaz
12/18/2011 1:56:00 PM
அய்யா சிதம்பரம் போன்றவர்கள் சின்ய அம்மையாரின் சாட்டைக்கு சுழலும் பம்பரம் போன்றவர் இவருடைய அரசியல் திறமையை காங்கிரஸ்க்கு அடிமையாக்கியவர் கல்வியறிவில் மலையாளி சிறந்தவன் என்றால் தமிழன் முட்டாளா தமிழக முதல்வர் தமிழக மக்களை முட்டாளாக்க பார்கிறார் சிதம்பரம் சோனியா அம்மையாள் முட்டாளக்கபடுகிறார் மூப்பனாரின் வாரிசு GK வாசன் வாயை துறக்கமருக்கிறார் முப்பனார் காங்கிரசையே துறந்து தன்மானமுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கண்டார் இன்று காங்கிரசில் தன்மானமுள்ள தமிழர்கள் இல்லை ஆகவே உம்மஞ்சண்டி அந்தோனி வயலார் ரவி இவர்களுக்கு உள்ள உணர்வோடு நம் தமிழ் காங்கிரஸ் மந்திரிகளை தலைவர்களிடம் எதிர் பார்க்காதீர்கள் நீங்கள் காங்கிரசையும் காங்கிரஸ் தலைமையும் நம்பி தமிழனுக்கு நல்ல தீர்வு காணப்படும் என எண்ணாதீர்கள் அதனையும் நாம் நம் வழியில் அணைக்கான இடம் தமிழகத்திற்கு சொந்தமானதாக தரவேண்டும் இல்லையேல் தமிழகத்தில் இருந்து கிடைக்கபெறும் அணைத்து பொருள்களும் தடுத்த நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள் மலையாளி கொலையாளியானால் தமிழன் தடிஎடுப்பதில் தப்பே இல்லை என்று போராட்டத்தை முன்னின்று நடத்துங்கள்
By ஆ ராஜேசு கண்ணன்
12/18/2011 1:51:00 PM
கையாலாகாத காங்கிரஸ் அரசும் ஒண்ட வந்த பிடாரி சோனியாவும், பேசா மடந்தை சிங்கும் தமிழ் இன எதிரிகள்.
By jallikattu
12/18/2011 1:45:00 PM
இந்த சீ-தம்பரம் தப்புவதற்கு கடைசியாக எடுத்துள்ள ஆயுதம் இந்த அணை பிரச்னை ..இப்பொது தான் இந்த சீ-தாம்பரம் இகு தமிழ் உணர்வு வந்து உள்ளது .நெடுமாறன் இந்த அரசியல் வியாபாரிக்கு வக்காலத்து வாங்கவேண்டியதில்லை
By KOOPU
12/18/2011 1:30:00 PM
நெடுமாறன் குடிபோதையில் கனவு காண்பவர் !!
By ஜெ
12/18/2011 12:31:00 PM
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக