வியாழன், 16 ஜூன், 2011

Brittan shocked about genocide activities of srilanga: இலங்கைப் போர்க்குற்றக் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது: பிரிட்டன் அமைச்சர்

அதிர்ச்சி அடைந்தாலும் குற்றஅரசையே விசாரிக்கச் சொல்லும் அறியாமை பற்றி என்ன சொல்வது? அரசிற்குத் தெரியாமல் படைத்துறையினர் செய்யும் எல்லை மீறல்களை அரசு விசாரிக்கலாம். அரசே தலைமை தாங்கி நடத்தும் இனப்படுகொலைகளை அந்த அரசையே கொண்டு விசாரிப்பது எந்த வகையில் நியாயம்? போர்க்குற்றம் என்று குறிப்பிடாமல்  இனப்படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். துயரத்துடன் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை போர்க்குற்ற காட்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது: பிரிட்டன் அமைச்சர்
First Published : 15 Jun 2011 05:11:15 PM IST

Last Updated : 15 Jun 2011 05:16:05 PM IST
லண்டன், ஜூன் 15- இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறியுள்ளார்.இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ காட்சிகளின் முழு தொகுப்பை "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற பெயரில் "சேனல் 4" ஒளிபரப்பியது. இதில், பெண்களின் கைகளை கட்டி அவர்களது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, முன்னாள் புலி ஒருவரை கத்தியை வைத்து மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் பெண் புலிகள் கொல்லப்பட்டு கிடப்பது உட்பட பல கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த காட்சிகளை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரிட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கருத்து தெரிவித்தார்.இதனிடையே, சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் "யு டியூப்" உட்பட பல்வேறு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை இலங்கை மீறியிருப்பதற்கு, சேனல் 4 முன்பு ஒளிபரப்பிய காட்சிகள் ஆதாரமாக உள்ளது என்று ஏற்கெனவே ஐநா நிபுணர் குழு கூறியிருந்தது. இந்நிலையில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து முழுமையான விடியோ வெளியாகியுள்ளதால், அதிபர் ராஜபட்ச அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்

பிரிட்டன் அமைச்சருக்கு தெரிந்தது இந்திய அமைச்சர்களுக்கும் , பிரதமர் , குடியரசுத் தலைவர் மற்றும் தமிழகத்தின் மதிப்பிற்குரியவர்கள் என்று கூறப்படும் தமிழகத்தின் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும் தெரியவில்லையே.....
By உதயம்
6/15/2011 7:07:00 PM
சோனியாவிற்க்கு காட்டுங்கள் ஐயா. புலிகள் கணவரை கொன்றதற்காக நாற்பதாயிரம் பேரின் உயிர் அவரிட்க்கு தேவைபட்டதா? குழந்தைகளுமா? இவர்களில் எத்தனை பேர் புலிகள்? பாரத நாட்டில் பிறந்திருந்தால் இந்த கொலை வெறி வந்திருக்குமா? முசோலினி பரம்பரை அல்லவா?
By Sriram
6/15/2011 7:06:00 PM
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தாக்குதலை விட 1000 மடங்கு கொடூரம் நிறைந்தது
By Raj
6/15/2011 7:05:00 PM
இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சிகளை கண்டு, ''போர்க் குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கைஅரசு உரிய விசாரணை நடத்தவேண்டும்'' என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறி உள்ளார். விசாரணை நடத்தப்பட வேண்டும்! ஆனால் இலங்கையோ இந்தியாவோ, பாகிஸ்தானோ, இரஷ்யாவோ, சீனாவோ போர் குற்றம் குறித்து விசாரணை நடத்தி பயன் இல்லை! இந்நாடுகள் தவிர்த்த ஒரு சர்வதேச குழு விசாரணை நடத்த வேண்டும்! அப்பொழுதுதான் உண்மைகள் வெளிவரும்! குற்றவாளிகளை தண்டிக்க முடியும்!
By பொன்மலை ராஜா
6/15/2011 7:03:00 PM
எங்க நாட்டு தலைவர்களுக்கு அதிர்ச்சியே வரமாட்டுது கொலையாளிக்கு உள்ள தண்டனை உடன்தையானவனும்க்கும் உண்டு
By raja
6/15/2011 6:57:00 PM
உலகமே கண்டனம் செய்யும் போது இந்திய இலங்கைக்கு கப்பல் விடுவது கேவலமானது ! வெட்கபவேண்டியது !!
By M.Gunasekaran
6/15/2011 6:42:00 PM
THE BUTCHERS WHO CARRIED OUT KILLINGS OF TAMIL PEOPLE SHOULD BE PUNISHED. THE INTERNATIONAL COURT OF JUSTICE SHOULD BRING ALL TO TRIAL AND PUNISH THEM. TO PREVENT TAMILS BEEING KILLED IN THE FUTUT A SEPRATE NATION TAMIL ELLAM SHOULD CREATED.
By Paris EJILAN
6/15/2011 6:24:00 PM
வேடிக்கை பாருங்கள் இந்தியரே தமிழரே நீங்கள் எந்த அளவில் அளக்கிறீர்களோ அதே அளவை உங்களுக்கு காத்திருக்கிறது
By பிரவீன்
6/15/2011 6:23:00 PM
இந்தியா திரும்பவும் ராசபக்ச அரசுக்கு முண்டு கொடுக்கும், ஏனெனில் சர்வ தேச விசாரணை நடந்தால், சிங் அரசின் உதவி தெரியவரும்.
By Suresh M
6/15/2011 6:12:00 PM
மூடர்கள்கள் ஆளும் நாட்டில் நேர்மை,ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
By வேந்தன்
6/15/2011 5:58:00 PM
sonia gandhi and karunanithi is responsible for the human rights violation
By v.sampathu
6/15/2011 5:31:00 PM

1 கருத்து:

  1. இக்கருத்தைத் தினமணி வெளியிடவில்லை. குற்றவாளியை நீதிபதியாக்கும் அவலததைச் சுட்டிக்காட்டுவதைப் பண்பற்ற கருத்தாகக் கண்டுபிடித்துள்ள தினமணி வாழ்க!

    பதிலளிநீக்கு