திங்கள், 26 ஜூலை, 2010

பிரபாகரனே என் தலைவர்: இராமசாமி

rama1
உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார்.
இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் உறுதுணையாக இருந்தவர்கள். இந்திய அரசாங்கமும, தமிழ்நாட்டு அரசாங்கமும் தான் இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று அவர் சொன்னார்.
இலங்கை நாட்டு அதிபர் இராஜபக்சே இந்தியாவிற்கு துணிச்சலாக வருவதற்கு இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் கொடுத்த ஆதரவினால் அந்த இன படுகொலையாளி இந்தியாவிற்க்கு துணிச்சலாக வருகிறார் இலங்கை தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்தியாவை குறை சொன்ன எனக்கு தடை விதித்தாலும் சரி அனுமதி வழங்கினாலும் மாவீரன் பிரபாகரனே என் தலைவர் என்று பேராசிரியர் கூறினார்.
நேற்று மரியாதை நிமித்தமாக மலேசியாவிற்க்கான இந்தியர் தூதர் விஜய்கோகுலே பினாங்கு மாநில முதலமைச்சரை சந்திக்க வந்திருந்தார் அந்த சந்திப்பு கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டிர்களா என்று டாக்டர் இராமசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது. என்னை தங்கள் நாட்டிற்குள் (இந்தியா) நுழையக் கூடாதென கூறியவர்களை நான் எதற்காக சந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஏந்த இந்திய அதிகாரிகளுக்கும் பினாங்கு மாநிலத்தில் அவர்களுக்கு மரியாதை அல்லது வரவேற்பு கிடையாது என்று அவர் சொன்னார். இலங்கை தமிழர்களை படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ் நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கையைச் சேர்ந்த கோத்தாபாய ராஜபக்ச ஆகிய இந்த ஜவரையும் ஜ.நாவிற்க்கான சிறப்பு குழு விசாரணை செய்ய வேண்டுமென பேராசிரியர் இராமசாமி கேட்டுக் கொண்டார்.
இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர். அவர்களது உடைமைகளை சிங்கள இனத்தவர்கள் சூறையாடி வருகின்றனா. இத்தனை கொடுமைகளை இலங்கைத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதப் போகிறாராம். ஆனால் அவரது பிள்ளைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வாராம் இலங்கை தமிழர்களுக்கு பலவகையில் கொடுமைகளை செய்து வரும் இலங்கை அரசாங்கத்துடன் உறவு வைத்துக் கொள்வது உலக தமிழர்களை முட்டாளாக்கும் செயலாகும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியை அவர் சாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக