செவ்வாய், 27 ஜூலை, 2010

பெரியார் பல்கலை. பதிவாளருக்கு சிறந்த விஞ்ஞானி விருது


ஓமலூர், ஜூலை 26: இயற்பியல் துறையில் சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கியதற்காக பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் சேது.குணசேகரனுக்கு சிறந்த விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.÷சென்னை பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரான சேது.குணசேகரன், சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளராக 2008-ல் பதவியேற்றார். இவர் இயற்பியல் துறையில் 42 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். ÷இயற்பியல் துறையில் சிறந்த கண்டுபிடிப்புக்காக, அவருக்கு காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பவள விழாவின் ஒரு பகுதியாக சிறந்த விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.  ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தலைமையில் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், சிறந்த விஞ்ஞானி விருதை சேது.குணசேகரனுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் வழங்கினார்.
கருத்துக்கள்

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமையில் நடைபெ றும் விழாவில் அரசின் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்கலாமா? அவர் வழங்கும் விருதினை வழங்கலாமா? நீதி மன்றத்தில் வழக்கு இருக்கும் பொழுது அரசின் செல்வாக்கு குற்றவாளி பக்கம் இரு்ப்பதாகக் காட்டுவதற்கு உதவாதா? அ.தி.மு.க. ஆட்சியில் குற்றவாளி என்றால் தி.மு.க. ஆட்சியில் குற்றமற்றவர் என்னும் இலக்கணம் சரியாக இல்லை.தீர்ப்பு வரும் வரை அவரை ஒதுக்கியே வைத்திருப்பதுதான் அறநெறிக்கு நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 3:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக