சி.இலக்குவனார் நினைவரங்க விழா
தமிழறிஞர் திரு. சி. இலக்குவனாரின் 39ஆவது நினைவு நாள் விழா நேற்று
(04.09.2012) சென்னை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற அரங்கத்தில் நடைபெற்றது.
அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்ட இவ்விழாவில்
சென்னை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மருத்துவ அறிஞர்
வே.ப. நாராயணன் தலைமையுரையாற்றினார். ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலர்
பொறி. பக்தவத்சலம் வரவேற்புரை யாற்றினார்.ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு செயலர்
திரு பிரின்சு விசயகுமார் முன்னிலை வகித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின்
மேனாள்மொழியியல் துறைத்தலைவர் முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கு இலக்கிய வீதி
இனியவன் இலக்குவனார் விருது வழங்கிச் சிறப்பித்தார். முன்னதாகக்
கணித்தமிழில் சிறந்த தொண்டாற்றி வரும் முனைவர் தெய்வசுந்தரம் பற்றி,
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த.இராமலிங்கம் தகுதியுரை
வாசித்தார்.பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையாற்றினார்.
அனைத்துத் துறைகளிலும் தமிழை வளர்க்க வேண்டும் என்ற பேராசிரியரின் வழியில்
கணித் தமிழியல் துறையில் இணையதளத்தில் தமிழைப் பிழையின்றிப்
பயன்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்கிய பேராசிரியர் முனைவர்
தெய்வசுந்தரத்திற்கு விருது வழங்குவதன் பொருத்தத்தை எடுத்துரைத்தார்.
இலக்குவனார் விருதை பெற்றுக் கொண்ட முனைவர் தெய்வ சுந்தரம் ஏற்புரை
வழங்கினார். ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற இணைச் செயலர் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி நன்றி நவின்றார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக