செவ்வாய், 4 செப்டம்பர், 2012

மரணத்திற்கு மரணம் வருவது எப்போது? தண்ணீர் ஊர்தி மோதி மாணவி சாவு:

தண்ணீர்  ஊர்தி மோதி மாணவி சாவு: பொதுமக்கள் சாலை மறியல்



உயிரிழந்த பெரியநாயகியின் தாய் சித்ராவுக்கு ஆறுதல் கூறும் போலீஸார் (இடது). சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்ட லாரி. மே
சென்னை, செப். 3: சென்னை அம்பத்தூர் அருகே தண்ணீர் லாரி மோதி பள்ளிச் சென்ற பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள் லாரியை அடித்து உடைத்தனர். அவர்கள் அப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:ஆவடி அன்னனூர் காமதேனுநகரைச் சேர்ந்தவர் முத்துவீரப்பன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். இவரது மனைவி சித்ராதேவி. இத் தம்பதியின் மகள் பெரியநாயகி (17), மகன் சுப்பையா (15).பெரியநாயகி அம்பத்தூர் செல்லியம்மன் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில் சுப்பையா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் திங்கள்கிழமை காலை தங்களது சைக்கிள்களில் பள்ளிக்குப் புறப்பட்டனர். இருவரும் எம்.ஜி.ஆர்.புரம் அயப்பாக்கம் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி திடீரென இருவரது சைக்கிள்களின் மீதும் மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த பெரியநாயகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சுப்பையா, அப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அந்த லாரியின் டிரைவர் ராஜேந்திரன் (52) அங்கிருந்து தப்பியோடி விட்டார். அதேவேளையில் தண்ணீர் லாரி மோதி, பள்ளி மாணவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். லாரியின் டயர் காற்றை இறக்கிவிட்டனர்.சாலை மறியல்: அப் பகுதியில் தண்ணீர் லாரி செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ்குமார், உதவி ஆணையர் நந்தகுமார் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, பொதுமக்களிடம் சமாதானம் பேசினர்.ஆனால், தங்களது போராட்டத்தை திரும்ப பெற முடியாது எனவும், மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர் வரும்வரை மறியலைக் கைவிட மாட்டோம் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சண்முகம் வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசினார். அவர், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்று நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதையடுத்து போலீஸார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப் போராட்டத்தால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தடுமாறும் தண்ணீர் லாரிகள்அம்பத்தூர் அயப்பாக்கத்தில் தண்ணீர் லாரிகள் அதிவேகத்தில் கட்டுப்பாடின்றி தடுமாறி செல்வதால் அடிக்கடி சாலை விபத்துகள் நேரிடுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.வணிக நோக்கத்துக்காக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அண்மைக்காலமாக சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், வயல்வெளிகளிலும் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வணிக நோக்கத்துக்காக விற்பனை செய்யப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரியும் அத்தகைய குடிநீர் வியாபாரத்துக்காக நிலத்தடி நீரை எடுத்துச் சென்றுள்ளது. அயப்பாக்கம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களிலும், விவசாய நிலங்களிலும் அரசின் தடையை மீறி ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான லாரிகள் தினமும் தண்ணீரை எடுத்துச் செல்கின்றன. இந்த லாரிகள், கட்டுப்பாட்டு இல்லாமல் வேகமாக தடுமாறியப்படி செல்வதாக வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.லாரிகள் அதிவேகமாக செல்வதால் அப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. தடையை மீறி தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் தடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் உயிர் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செல்லும் லாரியின் வேகத்தையாவது அதிகாரிகளும், காவல்துறையினரும் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.போதையில் லாரி டிரைவர்அம்பத்தூர் அருகே தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிரைவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த லாரியின் டிரைவர் ராஜேந்திரனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேந்திரன், சம்பவம் நடக்கும்போது மதுபோதையில் இருந்ததும், அதன் காரணமாக லாரியை கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதும் தெரியவந்துள்ளதாம். இருப்பினும் போலீஸார், அவர் மீது ஒரு சட்டப்பிரிவின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் ராஜேந்திரன் போதையில் லாரி ஓட்டியது குறிப்பிடப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக