function லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
function லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 21 செப்டம்பர், 2013
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் - நூல்கள் வெளியீட்டு விழா
திருவள்ளுவர் வாழ்வியல்
மன்றம், சென்னை 600 115
பேசி 9962461632
வாழ்வியல்
பயிற்சி நிறைவு விழா
நூல்கள்
வெளியீட்டு விழா
ஆடி 26. 2044 / ஆக. 11.2013 காலை 9.00
மணி
இளைஞர்
விடுதி,
(அடையாறு பேருந்து பணிமனை அருகில்,
சென்னை
600
020
தலைவர் : : துரை.மதிவாணன், புதுக்கோட்டை
வரவேற்புரை :
அன்றில் பா.இறையெழிலன், பொதுச்செயலர்,
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்
நூல்கள் :
1. இன்றைய சமுதாயப் பிரச்சினைகளும் அவற்றிற்கான
தீர்வுகளும்
- திரு இலக்குவனார்
திருவள்ளுவன் நிறைவுரையுடன் கூடிய ஆய்வரங்கத் தொகுப்பு 5 பகுதிகள்
2. முனைவர் க.தமிழமல்லன் அவர்களின் பாச்சோலை
3. கவிஞர் செவ்வியனின் இடது சாரிகள் ஒன்றிணைதல்
வேண்டும். ஏன்? எதற்காக?
நூல்கள்
வெளியீடு : முனைவர் பொற்கோ
அனைவரும் வருக!
கவிஞர் செவ்வியன்,
தலைவர், திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம்
புதன், 30 ஜனவரி, 2013
செவ்வாய், 25 செப்டம்பர், 2012
கவிமுரசு வா .மு. சே .திருவள்ளுவரின் “யாதும் ஊரே ..” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
கவிமுரசு வா .மு. சே .திருவள்ளுவரின் “யாதும் ஊரே ..” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
இலக்குவனார் ஆய்வரங்க விழா (காணொளி) Ilakkuvanar aayvarangam video
புதன், 5 செப்டம்பர், 2012
சி.இலக்குவனார் நினைவரங்க விழா
சி.இலக்குவனார் நினைவரங்க விழா
தமிழறிஞர் திரு. சி. இலக்குவனாரின் 39ஆவது நினைவு நாள் விழா நேற்று
(04.09.2012) சென்னை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற அரங்கத்தில் நடைபெற்றது.
அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்ட இவ்விழாவில்
சென்னை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மருத்துவ அறிஞர்
வே.ப. நாராயணன் தலைமையுரையாற்றினார். ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலர்
பொறி. பக்தவத்சலம் வரவேற்புரை யாற்றினார்.ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு செயலர்
திரு பிரின்சு விசயகுமார் முன்னிலை வகித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின்
மேனாள்மொழியியல் துறைத்தலைவர் முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கு இலக்கிய வீதி
இனியவன் இலக்குவனார் விருது வழங்கிச் சிறப்பித்தார். முன்னதாகக்
கணித்தமிழில் சிறந்த தொண்டாற்றி வரும் முனைவர் தெய்வசுந்தரம் பற்றி,
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த.இராமலிங்கம் தகுதியுரை
வாசித்தார்.பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையாற்றினார்.
அனைத்துத் துறைகளிலும் தமிழை வளர்க்க வேண்டும் என்ற பேராசிரியரின் வழியில்
கணித் தமிழியல் துறையில் இணையதளத்தில் தமிழைப் பிழையின்றிப்
பயன்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்கிய பேராசிரியர் முனைவர்
தெய்வசுந்தரத்திற்கு விருது வழங்குவதன் பொருத்தத்தை எடுத்துரைத்தார்.
இலக்குவனார் விருதை பெற்றுக் கொண்ட முனைவர் தெய்வ சுந்தரம் ஏற்புரை
வழங்கினார். ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற இணைச் செயலர் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி நன்றி நவின்றார்..
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
குமரித்தமிழ் வானத்தில் தமிழறிஞர் சி.இலக்குவனார் படத்திறப்பு
குமரித்தமிழ் வானத்தில் தமிழறிஞர் சி.இலக்குவனார் படத்திறப்பு
குமரித்தமிழ்வானம்அமைப்பின்சார்
நிகழ்ச்சிக்குக்கவிஞர் நா.முத்திலவேனார் தலைமை தாங்கினார். திருவாளர்கள் இரா.முத்துசாமி, சோ .தமிழ்ச்செல்வன், மகேந்திரன், செல்லச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்கநர் சுரேசு வரவேற்புரை நல்கினார்.
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையப்பொதுச்செயலர் முனைவர் பத்மநாபன் பேராசிரியர் சி.இலக்குவனார் உருவப்படத்தைத் திறந்து வைத்து தமிழ்க்காப்புத் தளபதியாகப் பேராசிரியர் திகழ்ந்தமை குறித்துஉரையாற்றினார்.
கவிஞர் முருகானந்தம், “ பண்பாட்டின் காவலர் இலக்குவனார்” என்னும் தலைப்பில் கவிதை பாடினார்.
திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அனுப்பியிருந்த வாழ்த்துரை வாசிக்கப்பெற்றது. கவிஞர் தமிழ்க்குழவி ,இனியன் தம்பி, ஆபிரகாம் லிங்கன், சிவமுருகன், பிதலிசு, சிவனி சதீசு, மீராசா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழ்த்தேசியப் பேரவைத் தலைவர் ” மணிமாறன் இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி ” என்னும் தலைப்பில் தமிழ்க்காப்பில் தலைசிறந்த போராளியாகத் திகழ்ந்த பேராசிரியரைப்பற்றிச்சிறப்புரை ஆற்றினார்.
திரு மகாதேவன் நன்றிநவின்றார்.
நன்றி :தினத்தந்தி, தமிழ் முரசு
(படம் 1.ஆய்வறிஞர் சிவ.பத்மநாபன் அவர்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவிக்கிறார்.
படம் 2. தமிழ் வானம் இயக்குநர் திரு செ.சுரேசு உரையாற்றுகிறார்.
படம் 3. தமிழ்த்தேசியப் பேரவை த் த்லைவர் திரு மணிமாறன் சிறப்புரை ஆற்றுகிறார்.)
வெள்ளி, 20 ஜூலை, 2012
இணையவழிக் கல்வி - YMCA Pattimandram கருத்தரங்கம்
தொலைபேசி: 044 25396792
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
கிளை
24/223,என்.எஸ்.சி.போசு
சாலை
(உயர்நீதிமன்றம் எதிரில்)
சென்னை-600001
சிறப்புக் கருத்தரங்கம்
|
நாள்: ஆடி 9. 2043 **24-7-2012
செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
இடம்:
எசுபிளனேடு
ஒய்.எம்.சி.ஏ.அரங்கம
வரவேற்புரை:
மறைமலை இலக்குவனார்
(ஆசிரியர்,”செம்மொழிச்சுடர்”--மின்னிதழ்)
தலைமை:
முனைவர் ப.அர.நக்கீரன்
(இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.)
ஆய்வுரை:
காயாம்பூ இராமலிங்கம்
( இயக்குநர், தனியார் இணையவழிக் கல்வி நிறுவனம்)
இணையப் பெருமை உணர்ந்த அனைவரும்
வருக
முனைவர்
ஔவை நடராசன் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி பொறியாளர்
கெ.பக்தவத்சலம்
தலைவர் இணைச்செயலாளர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.
பட்டிமன்றம்
பி.ரவிக்குமார்
டேவிட் வி.பிரின்சு சி.விஜயகுமார்
தலைவர்
செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
பி.ஜே.வின்சென்ட் டேனியல் அழகேசன் ````தலைவர் பொதுச்செயலாளர்
சென்னை
ஒய்.எம்.சி.ஏ.
வியாழன், 19 ஜூலை, 2012
சிவகங்கை இராமச்சந்திரனார் வாழ்வியல் நூல் ஆய்வரங்கம்(ஒளிப்படங்கள்)
சிவகங்கை இராமச்சந்திரனார் வாழ்வியல் நூல் ஆய்வரங்கம்(ஒளிப்படங்கள்)
http://www.natpu.in/?p=27025
http://www.natpu.in/?p=27025&nggpage=2
சென்னையில் முத்தமிழ்ப்பேரவையின் திருவாடுதுறை இராசரெத்தினம் கலையரங்கத்தில் குடும்பநலத்தலைமைநீதிபதி மேன்மைமிகு நீதிபதி இராசா சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒளிப்படங்கள் சில:-
புதன், 18 ஏப்ரல், 2012
INIYAVAN 70 :இனியவன் எழுபது
‘இலக்கிய வீதி’ எனும் அமைப்பின் மூலம் பல இலக்கியவாதிகளை உருவாக்கியும் பல படைப்புகளை வெளியிட்டிருக்கும் இலக்கிய வீதி இனியவனுக்கு எழுபது வயது நிறைவடைவதற்கும் வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் இனியவனுக்கு வழங்கப்பட்ட ‘செம்மொழிச் செம்மல்’ எனும் விருது பெற்றமைக்கும் அவருக்கு பாராட்டரங்கம் நடத்தப்பெற்றது. சென்னை ஒய்.எம்.சி.எ (YMCA) கட்டிடத்தில் 17.04.2012 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த அறிஞர்களும் இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இனிமையான சொற்களால் அனைவரையும் வரவேற்றார்,தொடர்ந்து தென்காசிக் கவிஞரான ராஜா மரக்காயர் அவர்கள் கவிதையின் மூலம் இனியவனுக்கு வாழ்த்துமடல் வாசித்து பாராட்டினார் ,

அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளை வழங்கினார்.

கார் நாற்பது, களவழி நாற்பது, ஏர் எழுபது என இலக்கிய நூலகளுக்கு வழங்கும் தலைப்பைப் போன்று இனியவன் விழாவுக்கு தலைப்பு பொருத்தமாக அமைந்திருப்பதை சுட்டிக்காடினார். மேலும் இனியவனுடைய பண்பு நலன்களைப் பற்றி கூறும்போது சங்க இலக்கியப் பாடலகளில் வரும் தலைவனின் குணத்தோடு ஒப்பிட்டு அவர்களுக்கிடையிலான ஆழ்ந்த நட்பை வெளிப்படுத்தி பாராட்டினார்.

அடுத்து, ‘பாராட்டுபவர் எக்காலத்திலும் பாராட்டப்பெறுவார்’ எனும் பாராட்டுரையோடு தொடங்கிய முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் இனியவனுடைய இலக்கியத் திறனை பாராட்டிப் பேசினார். தாராபரதி, மலர்மகன், பல்லவன், ஐசுவர்யன், சொற்கேளான் போன்றோரை இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ‘இனியவனுடைய வீடு இலக்கியத் தொட்டி’ என்பதை விவரித்துப் பேசினார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பனும் இலக்கியவாதிகள் பலரை உருவாகியதாயுள்ளம் கொண்ட இனியவனை
பெருமிதத்தோடு பாராட்டினார். மலர்மகனின் கவித்துவமான வாழ்த்துமடல் அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றது,மேலும் இந்த பாராட்டரங்கத்திற்கு பேராசிரியர் அவ்வை நடராசன், இலக்குவனார் திருவள்ளுவன், கவிஞர் முத்துலிங்கம், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்ட பெருமக்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பக்த்வச்சலத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து அரங்க விழா நாயகன் இனியவனுடைய ஏற்புரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
http://www.natpu.in/?p=23700
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இனிமையான சொற்களால் அனைவரையும் வரவேற்றார்,தொடர்ந்து தென்காசிக் கவிஞரான ராஜா மரக்காயர் அவர்கள் கவிதையின் மூலம் இனியவனுக்கு வாழ்த்துமடல் வாசித்து பாராட்டினார் ,
அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளை வழங்கினார்.
கார் நாற்பது, களவழி நாற்பது, ஏர் எழுபது என இலக்கிய நூலகளுக்கு வழங்கும் தலைப்பைப் போன்று இனியவன் விழாவுக்கு தலைப்பு பொருத்தமாக அமைந்திருப்பதை சுட்டிக்காடினார். மேலும் இனியவனுடைய பண்பு நலன்களைப் பற்றி கூறும்போது சங்க இலக்கியப் பாடலகளில் வரும் தலைவனின் குணத்தோடு ஒப்பிட்டு அவர்களுக்கிடையிலான ஆழ்ந்த நட்பை வெளிப்படுத்தி பாராட்டினார்.
அடுத்து, ‘பாராட்டுபவர் எக்காலத்திலும் பாராட்டப்பெறுவார்’ எனும் பாராட்டுரையோடு தொடங்கிய முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் இனியவனுடைய இலக்கியத் திறனை பாராட்டிப் பேசினார். தாராபரதி, மலர்மகன், பல்லவன், ஐசுவர்யன், சொற்கேளான் போன்றோரை இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ‘இனியவனுடைய வீடு இலக்கியத் தொட்டி’ என்பதை விவரித்துப் பேசினார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பனும் இலக்கியவாதிகள் பலரை உருவாகியதாயுள்ளம் கொண்ட இனியவனை
பெருமிதத்தோடு பாராட்டினார். மலர்மகனின் கவித்துவமான வாழ்த்துமடல் அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றது,மேலும் இந்த பாராட்டரங்கத்திற்கு பேராசிரியர் அவ்வை நடராசன், இலக்குவனார் திருவள்ளுவன், கவிஞர் முத்துலிங்கம், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்ட பெருமக்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பக்த்வச்சலத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து அரங்க விழா நாயகன் இனியவனுடைய ஏற்புரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
http://www.natpu.in/?p=23700
ஞாயிறு, 15 ஏப்ரல், 2012
Ilakkiya Veeddhi Iniyavan Ezhupadhu - paaraattarnakam
அன்புடையீர் வணக்கம்..
நல - வளம் சூழ வேண்டுகிறேன்..
'இலக்கியவீதி இனியவன் - 70 ' தொடக்க நிகழ்வை, அணுக்கமான உறவு நட்புடன் கொண்டாட
ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற அன்பர்கள் முடிவு செய்துள்ளனர்.. அவ்விழா ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கில் (உயர்நீதி மன்றம் எதிரில் ) நிகழ இருக்கிறது..
நாள்.. 17 -4 -2012 .. செவ்வாய் ..
நேரம் .. மாலை 6 - மணி..
பிற,பின்னர்..
என்றென்றும் அன்புடன்..
வாசுகி..
வியாழன், 1 மார்ச், 2012
V.C. Meena function cancelled: மக்கள் எழுச்சியால் துணைவேந்தர் மீனா கூட்டம் நீக்கம்
மக்கள் எழுச்சியால்
துணைவேந்தர் மீனா கூட்டம் நீக்கம்
(திருச்சிராப்பள்ளி) பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீனாவின் மக்கள்நலனுக்கு எதிரான செயல்பாடுகளினாலும் தமிழ்ப்பகைச் செயல்பாடுகளாலும் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் உயராய்வு மையம் எனப் பகுத்தறிவு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடும் துறைகளுக்கு மூடுவிழா நடத்தியவர் திருமதி மீனா. மகளிரியல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த முனைவர் மணிமேகலை மீது காழ்ப்புணர்வு கொண்டு பணியிடை விலக்கம் செய்தார். பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாகத் தமிழக ஆளுநரே தலையிட்டு மீண்டும் அவரைப் பணியமர்த்துமாறு ஆணையிட்டார். இயக்குநராகவே அவரைப் பணியமர்த்தாமல் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் ஆணைக்கு மாறாக அவரைப் பொருளியல் துறைக்கு மாற்றி நியமித்தார் துணை வேந்தர். இவற்றால் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் துணைவேந்தருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.தமிழகமெங்கும் உள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் திருச்சிராப்பள்ளி வந்து போராடி வருகின்றனர். இச்சூழலில் திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தினர் அவரைச் சிறப்பு அழைப்பாளராகஅழைத்து நாளை முப்பெரும் விழா என நிகழ்ச்சி நடத்த இருந்தனர். பெரியார் தத்துவ மையம் சரவணன், பெரியார் பாசறை அன்பழகன் , தமிழ்நாடு திராவிடர் கழகம் குணசேகரன் முதலானவர்கள் தலைமையில் தமிழார்வ அமைப்புகளும் மகளிர் நல அமைப்புகளும் ஒன்று திரண்டனர். இவர்கள், குறுக்கு வழியில் பதவி பெற்று குறுக்குவழியில் செயல்பட்டு கல்வி நலனுக்கும் மகளிர் நலனுக்கும் தமிழ் நலனுக்கும் எதிராகச் செயல்படுபவரைத் தமிழ்ச்சங்கம் அழைப்பதைக் கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட திருவரங்கம் தமிழ்ச்சங்கத்தினர் திருமதி மீனா பங்கேற்க இருந்த கூட்டத்தை ஒத்தி வைத்துப் பிறிதொரு நாளில் வேறொருவரைக் கொண்டு கூட்டம் நடத்துவதாகத் தெரிவித்தனர்.
முந்தைய ஆளுநரால் முந்தைய அரசில் நியமிக்கப்பட்ட தன்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என அவர் பேசி வருவதாக அறிந்தாலும் மேதகு ஆளுநரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் திருமதி மீனா மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர். இச்சூழ்நிலையில் அவர் பங்கேற்கும் கூட்டம் நிறுத்தப்பட்டது நேர்மைக்குத் துணை இருக்கும் மக்களுக்கு வெற்றியாகும் என வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தெரிவிக்கிறார்.
வியாழன், 19 ஜனவரி, 2012
Ilakkuvanar award giving ceremony: தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது வழங்கும் விழா
தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது
வழங்கும் விழா
தகுதியுரை வழங்கல்:புலவர் த.இராமலிங்கம் அவர்கள்.
பாவலர் புரட்சிதாசன் * பாவலர் சாமி பழனியப்பன் * வழக்கறிஞர் காந்தி * அறிஞர் செங்கைப்பொதுவன் * அறிஞர் மு.ச.சிவம் * பாவலர் ஏர்வாடிஇராதாகிருட்டிணன் * ‘மக்கள் நெஞ்சம்’ கலசம் இராமலிங்கம் ஆகியோர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளனர்.
வண்டமிழ்த் தொண்டரை வாழ்த்திட வருக!
திங்கள், 26 செப்டம்பர், 2011
A.I.R. seminar on Dr.S.Ilakkuvanar: முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்
முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்
பதிவு செய்த நாள் : 25/09/2011
“இலக்குவனாரின் பன்முக ஆளுமை” இந்திய ஒலிபரப்பு நிறுவனம் – அகில இந்திய வானொலி நிலையம் – மாநிலக் கல்லூரி – இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்தும் முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



