வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கரு வளர் நிலைகள்

கரு வளர் நிலைகள்

கரு வளர் நிலைகள்

- இலக்குவனார் திருவள்ளுவன் 




கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்க வாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடை யூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார்.

மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து

ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

தக்க தசமதி தாயொடு தான்படும்

துக்க சாகரத் துயர்இடைப் பிழைத்தும்


என்னும் பாடலடிகள் மூலம் கரு உருவாவதில் இருந்து மகப்பேறுவரை நேரும் இடர்களை எடுத்துரைக்கின்றார்.

தொடர்ச்சிக்கு : 

அல்லது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக