கண்கள் - Eyes
கண்கள்
- இலக்குவனார் திருவள்ளுவன்
செப்டெம்பர் 2, 2012 13:41 இந்தியத் திட்ட நேரம்
கண்களுக்குத்
திட்டி, விழி, அம்பகம், நாட்டம், நோக்கு, பார்வை முதலிய பல பெயர்கள்
உண்டு. பெரிய கதவிற்குள் அமையும் சிறிய கதவு திட்டிஎனப்படும்.
கோயில்களிலும் சிறைச்சாலைகளிலும் இவ்வாறு இப்பொழுது காணப்பெறும் இத்தகைய
உட்கதவுகள் திட்டிவாசல் என்றே அழைக்கப்பெறும். கண்கள் இத்தகைய அமைப்பைக்
கொண்டுள்ளமையால் திட்டி எனப்படுகிறது. (திட்டி என்பதே பிறமொழிகளில்
திஃசுட்டி என்றும் திருஃசுடிஎன்றும் மாறியது.) பார்வை, நாட்டம், நோக்கு
முதலியவற்றிற்குக் காரணமான உறுப்பு ஆகு பெயர்களாக அவ்வப் பெயர்களிலேயே
அழைக்கப்பெறுகிறது. அம்பு போன்ற பார்வையின் அடிப்படையில் அம்பகம்
எனப்படுகிறது.
கண்மணிக்குத் தாரை என்றும் கண்ணிமைக்கு விளிம்பு என்றும் புருவத்திற்குப் புதல், புகுடி என்றும் பெயர்கள் உள்ளன.
காண்க :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக