சொல்கிறார்கள்
வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்!
பிரின்ட் புடவை ÷ஷாரூம் நடத்தும்
அருணா: நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். என் கணவர்
விஜயகுமார், புடவை, சுடிதார், படுக்கை விரிப்புகளுக்கு "பிரின்ட்' போடும்
வேலையைத் தான் செய்து கொண்டிருந்தார். வீட்டில் இருப்பது போரடிக்கவே,
நானும் இந்த தொழிலில் இறங்கினேன். ஒரு வாரத்திலேயே, இதைக் கற்றுக்
கொண்டேன். இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவெல்லாம் வேண்டாம். கடந்த மூன்று
ஆண்டாக, வீட்டிலிருந்தே, "ஆர்டர்' எடுத்து, "பிரின்ட்' செய்து
கொடுக்கிறேன். நல்ல லாபம் வரவே, வீட்டிலேயே, "÷ஷாரூம்' அமைத்துள்ளேன். என்
கணவர், பக்கபலமாக இருந்து கடையைக் கவனிக்க, நான், "பிரின்ட்' போட்டுக்
கொடுத்துக் கொண்டிருக்கிறேன். சாதாரண புடவையில், நாம் விரும்புவது போல்,
பிடித்த நிறத்தில், "டிசைன்' செய்து கொள்ளலாம். சாயம் போகவே போகாது;
விலையும் அதிகமில்லை. ஐதராபாத், ஜெய்ப்பூர், கோல்கட்டா என, ஒவ்வொரு
ஊரிலும், ஒவ்வொரு மாதிரியான டிசைன்கள் கிடைக்கும். ரசாயன டையிங் எல்லாம்,
ஆந்திராவில் இருந்து வாங்கிக் கொள்கிறோம். இந்த தொழில், பெண்களுக்கு
ஏற்றது. பலர், ஆர்வமாக கற்றுக் கொடுக்கச் சொல்லி கேட்பதால், ஓராண்டாக
பயிற்சி கொடுக்கிறேன். ஒரே நாளில் இந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கு, 700 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கிறேன். குறைந்தபட்சம் நான்கு
பேராக சேர்ந்து வந்தால், கற்றுக் கொடுப்பது சுலபம். பயிற்சி கொடுப்பதுடன்,
"பிரின்டிங் ப்ளாக்' மற்றும் "டை' எங்கு வாங்கலாம் என்பது போன்ற
விவரங்களையும் தருகிறோம். 5,000 ரூபாயும், நான்கு அடி மேஜை போட இடம்
இருந்தால் போதும், இந்தத் தொழிலை அனைத்து தரப்பு மக்களும் வெற்றிகரமாகச்
செய்யலாம். இந்தத் தொழிலில் கஷ்டம் என்று எதுவும் இல்லை. ஆனால், அக்கம்
பக்கத்தில் நன்றாக பேசி, "ஆர்டர்' எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதில்
தான் உள்ளது, இந்த தொழிலின் வெற்றி.
வணக்கம் ஐயா... நல்ல பல தகவல்களைத் தந்து கொண்டுள்ளீர்கள்... நன்றி. ஆனால் இவர்களையெல்லாம் எந்த விதத்தில் தொடர்பு கொண்டு பயனடைவது என்று தெரியவில்லையே.. எந்தத் தகவல் தொடர்பும் இல்லையே...
பதிலளிநீக்குஅன்புடன்
இளங்குமரன்
ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்க புதிய வழி : இங்கே கிளிக் பண்ணவும்
பதிலளிநீக்கு