தமிழ் மொழியில் பண்டிதராக விளங்கும் சப்பான் பேராசிரியர் (இ)யமசித்தா ||thainaadu.com
தாய்மொழி அல்லாத பிற மொழியை கற்கின்றமையும், அதை எழுதி, வாசிக்கின்ற அளவுக்கு தேர்ச்சி பெறுகின்றமையும் மிக மிக கடினமான காரியம்தான். ஆனால் தமிழ் மொழியை கற்று, திறம்பட பேசுகின்றார், எழுதுகின்றார் ஜப்பானிய பேராசிரியர் ஒருவர். தமிழ் மொழி, தமிழர் சமயம், தமிழர் கலாசாரம், தமிழர் சினிமா ஆகியவற்றின் மீது இவருக்கு அளவு இல்லாத ஈடுபாடு. இவை குறித்த ஆய்வுகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தமிழ் மொழியின் பெருமை குறித்து இவர் கூறி இருக்கின்ற விடயங்களை கட்டாயம் நம் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். இவர் தமிழ் மொழியில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கி இருக்கின்ற காணொளிப் பேட்டியை நீங்கள் பார்க்கின்றமைக்கும், கேட்கின்றமைக்கும் தருகின்றோம். | |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக