இதன் மூலம் மரு.இராமதாசு கொடுங்கோலன் இனப்படுகொலையாளி பக்சேவை இந்தியா வரவேற்க ஒத்துக் கொண்டார் என்பது புரிகிறது. வரும் தேர்தலில் கூட்டணிக்கான அச்சாரமா? வழக்கு விடுவிப்பிற்கான அடையாளப்பேரமா? இந்நிலையை மாற்றி பக்வேசே வருகையைக் கண்டித்து வரவிடாமல் செய்ய முன்வர வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
இலங்கையில் தமிழ் ப் பெண்கள் சீரழிப்பு; இராசபட்சவை இந்தியா எச்சரிக்க வேண்டும்: இராமதாசு
Last Updated :
02 Sep 2012 05:53:32 PM IST
சென்னை,
செப். 2: தமிழ்ப்பெண்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் பாலியில்
அத்துமீறல்களையும், தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களையும் உடனடியாக
தடுத்து நிறுத்தும்படி ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க
வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:இலங்கையின்
வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும்
சுயமரியாதையுடனும், அரசியல் அதிகாரத்துடனும் வாழ்வதற்கு தனித் தமிழீழம்
அமைப்பது தான் ஒர் தீர்வு என்ற முழக்கம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து
வருகிறது. இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து
சிங்களப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட
இலங்கை அரசு, அண்மைக் காலமாக போரில் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பெண்களையும்,
போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பெண்
போராளிகளையும் விசாரணை என்ற பெயரில் முகாம்களுக்கு அழைத்துச் செல்லும்
சிங்களப் படையினர் அவர்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவதாகவும்,
இதையெல்லாம் எதிர்த்து கேட்க முடியாத தமிழ்ப்பெண்கள் நடைபிணங்களாக வாழ்ந்து
வருவதாகவும், நூற்றுக்கணக்கான பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை
செய்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.தமிழ் இனத்தை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு இத்தகைய கொடுமைகளைஅரங்கேற்றி வருகின்றது இலங்கை அரசு. தமிழகத்
தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ்ப்பெண்களுக்கு இழைக்கப்படும்
இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய
அரசுக்கு உண்டு. எனவே வரும் 21ம் தேதி இந்தியா வரும் இலங்கை அதிபர் இராஜபக்சேவை கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி
இம்மாதம் 10ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 21வது கூட்டத்திலும் இதுகுறித்து பிரச்சினை
எழுப்பி இலங்கையை உலக நாடுகள் கண்டிக்கவும், எச்சரிக்கவும் மத்திய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள்
By
ப.kasi
9/2/2012 7:45:00 PM
9/2/2012 7:45:00 PM
By
பழனிசாமி T
9/2/2012 7:30:00 PM
9/2/2012 7:30:00 PM
By
பழனிசாமி T
9/2/2012 7:09:00 PM
9/2/2012 7:09:00 PM
By
mohan
9/2/2012 7:01:00 PM
9/2/2012 7:01:00 PM
By
pillai
9/2/2012 1:00:00 PM
9/2/2012 1:00:00 PM
By
KOOPU
9/2/2012 12:58:00 PM
9/2/2012 12:58:00 PM
By
ர.Krishanmurthy
9/2/2012 12:35:00 PM
9/2/2012 12:35:00 PM