Y.M.C.A.pattimandram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Y.M.C.A.pattimandram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
புதன், 5 செப்டம்பர், 2012
சி.இலக்குவனார் நினைவரங்க விழா
சி.இலக்குவனார் நினைவரங்க விழா
தமிழறிஞர் திரு. சி. இலக்குவனாரின் 39ஆவது நினைவு நாள் விழா நேற்று
(04.09.2012) சென்னை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற அரங்கத்தில் நடைபெற்றது.
அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்ட இவ்விழாவில்
சென்னை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மருத்துவ அறிஞர்
வே.ப. நாராயணன் தலைமையுரையாற்றினார். ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலர்
பொறி. பக்தவத்சலம் வரவேற்புரை யாற்றினார்.ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு செயலர்
திரு பிரின்சு விசயகுமார் முன்னிலை வகித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின்
மேனாள்மொழியியல் துறைத்தலைவர் முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கு இலக்கிய வீதி
இனியவன் இலக்குவனார் விருது வழங்கிச் சிறப்பித்தார். முன்னதாகக்
கணித்தமிழில் சிறந்த தொண்டாற்றி வரும் முனைவர் தெய்வசுந்தரம் பற்றி,
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த.இராமலிங்கம் தகுதியுரை
வாசித்தார்.பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையாற்றினார்.
அனைத்துத் துறைகளிலும் தமிழை வளர்க்க வேண்டும் என்ற பேராசிரியரின் வழியில்
கணித் தமிழியல் துறையில் இணையதளத்தில் தமிழைப் பிழையின்றிப்
பயன்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்கிய பேராசிரியர் முனைவர்
தெய்வசுந்தரத்திற்கு விருது வழங்குவதன் பொருத்தத்தை எடுத்துரைத்தார்.
இலக்குவனார் விருதை பெற்றுக் கொண்ட முனைவர் தெய்வ சுந்தரம் ஏற்புரை
வழங்கினார். ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற இணைச் செயலர் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி நன்றி நவின்றார்..
வெள்ளி, 20 ஜூலை, 2012
இணையவழிக் கல்வி - YMCA Pattimandram கருத்தரங்கம்
தொலைபேசி: 044 25396792
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
கிளை
24/223,என்.எஸ்.சி.போசு
சாலை
(உயர்நீதிமன்றம் எதிரில்)
சென்னை-600001
சிறப்புக் கருத்தரங்கம்
|
நாள்: ஆடி 9. 2043 **24-7-2012
செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
இடம்:
எசுபிளனேடு
ஒய்.எம்.சி.ஏ.அரங்கம
வரவேற்புரை:
மறைமலை இலக்குவனார்
(ஆசிரியர்,”செம்மொழிச்சுடர்”--மின்னிதழ்)
தலைமை:
முனைவர் ப.அர.நக்கீரன்
(இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.)
ஆய்வுரை:
காயாம்பூ இராமலிங்கம்
( இயக்குநர், தனியார் இணையவழிக் கல்வி நிறுவனம்)
இணையப் பெருமை உணர்ந்த அனைவரும்
வருக
முனைவர்
ஔவை நடராசன் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி பொறியாளர்
கெ.பக்தவத்சலம்
தலைவர் இணைச்செயலாளர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.
பட்டிமன்றம்
பி.ரவிக்குமார்
டேவிட் வி.பிரின்சு சி.விஜயகுமார்
தலைவர்
செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
பி.ஜே.வின்சென்ட் டேனியல் அழகேசன் ````தலைவர் பொதுச்செயலாளர்
சென்னை
ஒய்.எம்.சி.ஏ.
வியாழன், 19 ஜனவரி, 2012
Ilakkuvanar award giving ceremony: தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது வழங்கும் விழா
தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது
வழங்கும் விழா
தகுதியுரை வழங்கல்:புலவர் த.இராமலிங்கம் அவர்கள்.
பாவலர் புரட்சிதாசன் * பாவலர் சாமி பழனியப்பன் * வழக்கறிஞர் காந்தி * அறிஞர் செங்கைப்பொதுவன் * அறிஞர் மு.ச.சிவம் * பாவலர் ஏர்வாடிஇராதாகிருட்டிணன் * ‘மக்கள் நெஞ்சம்’ கலசம் இராமலிங்கம் ஆகியோர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளனர்.
வண்டமிழ்த் தொண்டரை வாழ்த்திட வருக!
திங்கள், 12 செப்டம்பர், 2011
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
Photos of Ilakkuvanar ninaivarankam: பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க ஒளிப்படங்கள்
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் ஒளிப்படங்கள்
செவ்வாய், 14 டிசம்பர், 2010
செவ்வாய், 23 நவம்பர், 2010
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம், மணிப் பிரவாளத்திற்கு மறுவாழ்வா?
| தொலைபேசி: 2539 6792 |
| ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் |
| ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு கிளை, |
| 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, |
| சென்னை – 600 001. |
| மணிப் பிரவாளத்திற்கு மறுவாழ்வா? |
தொலைபேசி: 2539 6792 | ||||||
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் | ||||||
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு கிளை, | ||||||
24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை – 600 001. | ||||||
மணிப் பிரவாளத்திற்கு மறுவாழ்வா? | ||||||
| நாள் | : | 23.11.2010 செவ்வாய்க்கிழமை, மாலை 6-00 மணி | ||||
| இடம் | : | எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் (சென்னை உயர்நீதிமன்ற்ம் எதிரில்) | ||||
| தலைமை | : | பேராசிரியர் பா. இறையரசன் | ||||
| சிறப்புரை | : | தமிழ்த்திரு. இலக்குவனார் திருவள்ளுவன், (ஒருங்கிணைப்பாளர், தமிழ்க்காப்பு அமைப்புகள்)‘ | ||||
உங்கள் வருகை எங்கள் உவகை | ||||||
| முனைவர் ஔவை நடராசன் தலைவர் | புலவர் பு.சீ. கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர் | கெ. பக்தவத்சலம் செயலாளர் | ||||
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் | ||||||
| பி. இரவிக்குமார் டேவிட் கிளைத் தலைவர் | சுரேந்தர் கிதியோன் செயலாளர் | |||||
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு | ||||||
| என்.சி.வில்லியம்ஸ் தலைவர் | ஆர். பெர்னார்டு ராஜ்குமார் பொதுச்செயலாளர் | |||||
சென்னை ஒய்.எம்.சி.ஏ. | ||||||
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
தமிழ்க்காப்புத் தளபதி பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்
'சிலர் தமிழால் வளர்ந்தார்கள். சிலர் தமிழை வளர்த்தார்கள்''
விழாவில் வரவேற்புரை ஆற்றியவர் இலக்குவனாரின் புதல்வரான மறைமலை. '' இலக்குவனார் தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பணியை முடித்துக் கொண்டிருந்த போது அது வெளியே வர வேண்டும் என்று விரும்பியவர் திரைப்பட இயக்குநரான ஏ.கே.வேலன்.மற்றொரு திரைப்பட இயக்குநரான கே.சுப்பிரமணியத்திடம் அதற்கான விழாவை நடத்தும் பொறுப்பு விடப்பட்டிருந்தது.
அப்போது குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனைக் கொண்டு இதை வெளியிடத்திட்டமிட்டிருந்தார் சுப்பிரமணியம். அண்ணாவும் கலந்துகொள்ள இருந்த அந்த விழாவில் ராதாகிருஷ்ணன் கலந்துகொள்வதை இலக்குவனார் சிறிதும் விரும்ப
வில்லை.அதை இயக்குநர் சுப்பிரமணியத்திடம் சொல்லிவிட்டார்.1962 ல் குடியரசுத் தலைவர் இசைவு கொடுத்தும் அதை விரும்பாமல் இலக்குவனார் மறுத்ததை மாநிலங்களவையில் அண்ணா பேசி அது பதிவாகியிருக்கிறது.
அந்த நூலுக்கான முன்னுரையில் இலங்கையைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே பார்த்திருக்கிறார் இலக்குவனார்.அவருடைய ஆய்வேடு கூட அவருடைய போர்க்குணத்தைக் காட்டுகிறது.63 ஆண்டுகள் வாழ்ந்த அவர் தமிழுணர்வுடனேயே வாழ்ந்திருக்கிறார் '' என்று பேசினார்.
அடுத்துப் பேச வந்த பாஸ்கரன் இலக்குவனாரைப்பற்றிய ஒரு சம்பவத்தை நினைவு படுத்தினார். '' கோவையில் நடந்த ஒரு மாநாட்டில் நாவலர் நெடுஞ்செழியன் பேசும் போது ஆங்கிலத்திற்கு இணையாகத்தமிழை உயர்த்த வேண்டும் ' என்று பேசிய போது இலக்குவனார் அதற்கு உடனே மறுப்புத் தெரிவித்து ''நீங்கள் என்ன நாவலரா? ஆங்கிலத்திற்குக் காவலரா?''என்று எதிர்ப்பைத் தெரிவித்தார். இங்குள்ள சிலர் தமிழால் வளர்ந்திருக்கிறார்கள். இவரோ தமிழை வளர்த்தவர்'' என்றார்.
சிறப்புரை ஆற்றியவர் பேராசிரியர் சாகுல்ஹமீது .'' இலக்குவனாரையும் மாணவர்களையும் பிரிக்க முடியாது. தமிழையும் பிரிக்க முடியாது.மதுரை தியாகராஜர் கல்லூரியில் நான் சேர்ந்தபோது அப்போது அங்கு தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் இலக்குவனார்.அப்போது நடந்த இந்தி மொழித்திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக இலக்குவனார் தேசியப்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.1963 ஆம் ஆண்டில் அண்ணா முன்னிலையில் இந்தி எதிர்ப்பைப் பற்றிப் பேசியவர் அவர்.அதன் பிறகே இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்தது.நாளிதழ்களில் விஜயம் என்று இருந்ததை வருகை என்றும் ஸ்ரீயை திரு என்றும் மாற்றி எழுத வைத்ததில் அவருக்கு முக்கியப்பங்குண்டு.அப்போது மாணவராக இருந்த கா.காளிமுத்து '' ஸ்ரீஸ்ரீ என்று சிரித்தவர்கள் இப்போது திருதிருவென்று விழிக்கிறார்கள்'' என்று பேசினார்.1967ல் மாணவர்கள் முழுவதுமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியை மாற்றினார்கள். அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகும் பணியிடங்களில் எங்கே தன்மானம் குறைகிறதோ அப்போதெல்லாம் இலக்குவனார் அவற்றிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
சுயநலத்தை மட்டும் அவர் கடைப்பிடித்திருந்தால் எத்தனையோ பதவிகளுக்கு வந்திருக்க முடியும்.ஆனால் அவர் அப்படி இறங்க வில்லை. உஸ்மானியப் பல்கலைக் கழகத்திற்கு அவர் மாற்றப்பட்டபோது அதற்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்த போது சொன்னார் '' நான் மாற்று மாநிலத்தில் மொழியைப் பரப்புவதற்காகச் செல்கிறேன் '.' அது இலக்குவனாரின் தனித்த பண்பைக்காட்டுகிறது''.
மொழியுணர்வைத் தன்வாழ்வில் பிரதிபலித்து வாழ்ந்த இலக்குவனாரைப் போன்றவர்கள் - இன்றைய வறண்ட சூழலில் நினைவுகூரப்படுவதே அபூர்வமாகத்தான் நிகழ்கிறது..
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2010,00:00 IST
சென்னை: "கவிஞர்கள் தங்களுக்காக அல்லாமல், மக்களுக்காகவும், வருங்கால சமூகத்திற்காகவும் சிந்திக்கின்றனர்' என, கவியோகி பேகன் (பி.பாண்டியன்) கவிதைகள் குறித்த ஆய்வரங்கத்தில், முனைவர் மறைமலை இலக்குவனார் பேசினார். சென்னை எஸ்பிளனேடு ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில், வாழும் தமிழ்க் கவிஞர்கள் மற்றும் அவர்களது படைப்புகள் குறித்த 113 வது ஆய்வரங்கம் நடந்தது. ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற தலைவர் கிருஷ்ணசந்த் சோர்டியா தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், செயலர் பெ.பக்தவச்சலம் வரவேற்றார். பேராசிரியர்கள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.பாண்டியனின் கவியோகி பேகன் கவிதைகள் குறித்து, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் துணைத்தலைவர் மறைமலை இலக்குவனார் ஆய்வுரை வழங்கினார். அதில் அவர் கூறியதாவது: கவிதைகளை கவிஞர்கள் தொடர் முயற்சியாக செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் கவிதை சிந்தனையை முழுமையாகவும், பழக்க வழக்கமாகவும் கவியோகி பேகன் கொண்டுள்ளார். 60 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அவர் தமிழ் கீதாஞ்சலி, காதல்பரிசு உள்ளிட்ட பல கவிதை நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். பேகன் கவிதைகள், குறளைப் போன்று எளிமையாக உள்ளன. "தமிழ்த்தாய் பிள்ளைத் தமிழ்' என்ற இவரது நூலில் தமிழை பிள்ளையாகக் கருதி கவிதை படைத்துள்ளார். சிறந்த கவிஞர்கள் தங்களுக்காக அல்லாமல் மக்களுக்காகவும், வருங்கால சமூகத்திற்காகவும் சிந்திக்கிறார்கள். கவிஞர் பேகன் நமக்கும் தமிழுக்கும் கிடைத்த விருது. இவ்வாறு மறைமலை இலக்குவனார் பேசினார்.
கவியோகி பேகன் பேசிய தாவது: எனக்கு சிந்தனையை கவிதையாக எழுதுவதும், பாடுவதும் இயல்பாகி விட்டது. கவிஞன் படைக்கும் போது உணர்ச்சியின் <உச்சத்திற்கு செல்ல வேண்டும். சமகால சிந்தனையில் சொற்கள் வெளிப்பட வேண்டும். இவ்வாறு பேகன் பேசினார். ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் இணை செயலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.பாண்டியனின் கவியோகி பேகன் கவிதைகள் குறித்து, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் துணைத்தலைவர் மறைமலை இலக்குவனார் ஆய்வுரை வழங்கினார். அதில் அவர் கூறியதாவது: கவிதைகளை கவிஞர்கள் தொடர் முயற்சியாக செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் கவிதை சிந்தனையை முழுமையாகவும், பழக்க வழக்கமாகவும் கவியோகி பேகன் கொண்டுள்ளார். 60 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அவர் தமிழ் கீதாஞ்சலி, காதல்பரிசு உள்ளிட்ட பல கவிதை நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். பேகன் கவிதைகள், குறளைப் போன்று எளிமையாக உள்ளன. "தமிழ்த்தாய் பிள்ளைத் தமிழ்' என்ற இவரது நூலில் தமிழை பிள்ளையாகக் கருதி கவிதை படைத்துள்ளார். சிறந்த கவிஞர்கள் தங்களுக்காக அல்லாமல் மக்களுக்காகவும், வருங்கால சமூகத்திற்காகவும் சிந்திக்கிறார்கள். கவிஞர் பேகன் நமக்கும் தமிழுக்கும் கிடைத்த விருது. இவ்வாறு மறைமலை இலக்குவனார் பேசினார்.
கவியோகி பேகன் பேசிய தாவது: எனக்கு சிந்தனையை கவிதையாக எழுதுவதும், பாடுவதும் இயல்பாகி விட்டது. கவிஞன் படைக்கும் போது உணர்ச்சியின் <உச்சத்திற்கு செல்ல வேண்டும். சமகால சிந்தனையில் சொற்கள் வெளிப்பட வேண்டும். இவ்வாறு பேகன் பேசினார். ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் இணை செயலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)