சொல்கிறார்கள்
அடிக்கடி அழுகை ப் பாதிப்பா?
மன நல மருத்துவர் ஹர்ஷ வர்தன்: உடலோ, மனமோ அழுத்தமான உணர்வுகளுக்கு ஆட்படும் போது, மூளை சந்திக்கும் நடவடிக்கைகளின் ஒரு எதிர்வினையே அழுகை. இந்த அழுத்த உணர்வுகள், சமூகம், கலாசாரம், வளர்ப்புச் சூழல் என, பல காரணங்களில் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். தன்னிச்சை செயல்பாடுகளை மேற்கொள்ளும் மூளை நரம்புகளே, அழுகைக்கு மருத்துவ ரீதியாகப் பொறுப்பு. வாய் உலர்வது, மூச்சு வாங்குவது, இதயத் துடிப்பு எகிறுவது போன்றவை பிற வெளிப்பாடுகள். இதுவும், தனி நபருக்கு ஏற்றவாறு வேறுபடும். அழுகை என்பது உயிரினங்களின் இயல்பு. அழுகையிலிருந்து தப்பிப்பது சிரமம். அதே சமயம், அளவுக்கு மீறிய அழுகையும் கூடாது. அப்படியான அழுகையை மன நல மருத்துவத்தில், "ஹிஸ்ட்ரியானிக் பர்சனாலிட்டி ட்ரை' என்கிறோம். அழுதால் ஆசுவாசமாகும் என்றால் சரி. ஒரு அழுகை, அடுத்த அழுகைக்கான காரணங்களை தந்தால், மருத்துவ ஆலோசனை அவர்களுக்கு அவசியம். ஆராய்ந்து, அலசிப் பார்த்து விழிப்புணர்வுடன் ஒவ்வொன்றையும் அணுகினால், எடுத்ததற்கெல்லாம் அழுகை முட்டாது. பொதுவாக அழுகையை நிறுத்துவது என்பது, அதன் ஆரம்ப நிலையில் மட்டுமே சாத்தியம். அதன் பின், அழுகையுடன் அவர்கள் பரஸ்பரம் பிணைந்து விடுவதால், பாதியில் விடுபட முடியாது. அப்படி வலிய நிறுத்தினால், அது தற்காலிக மானதாகவே இருக்கும். அழுகையை அடக்க முயற்சிப்பதை விட, தவிர்ப்பதற்கான முயற்சிகளே நடைமுறைக்குச் சாத்தியம். அழுகையை தூண்டும் மனிதர்கள், சூழல், செயல், இடம் போன்றவற்றை முன் கூட்டியே கணித்து, தவிர்க்க வேண்டும். மாறாக, அழுகை தான் பிரச்னைகளை தவிர்க்கவோ, தப்பிக்கவோ உதவும் என, மனதின் ஆழத்தில் தீவிர நம்பிக்கை வைத்திருந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு உளவியல் நிபுணரின் ஆலோசனை அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக