சனி, 11 ஆகஸ்ட், 2012

நாடு எங்கே போகிறது? வெறி பிடித்த மாணாக்கர்களும் பிற இளைஞர்களும்

மாணவி அடித்துக் கொலை:மாணவர்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்

தினமணி  First Published : 11 Aug 2012 02:15:39 PM IST

Last Updated : 11 Aug 2012 03:47:06 PM IST

ஹிசார், ஆக., 11 : ஹரியானா மாநிலம் ஹிசரில் உள்ள ஜிஜஸ்ட் கல்லூரி வளாகத்தில் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவி வர்ஷா யாதவ், அவளது ஆண் நண்பரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் நடந்துள்ளது என்பதுதான் கவலைக்குரிய விஷயமாகும்.தன்னை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டதால் கொலை செய்தேன் என்று இந்த படுபாதக செயலைச் செய்த 19 வயதாகும் பிடெக் மாணவன் சேட்டன் ஷியோரன் கூறியுள்ளான். மேலும், தான் கொலை செய்ததை மறுக்கவில்லை என்றும் காவல்துறையிடம் கூறியுள்ளான்.  கொலை நடந்த இடத்தில் ஏராளமான மாணவர்கள் இருந்துள்ளனர் என்றும், ஒருவர் கூட அந்த பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வளரும் இளைஞர்களுக்கு சமுதாய நோக்கே இல்லாமல் இருப்பது குறித்தும் கவலை தெரிவித்தனர்.
கருத்துகள்

வளரும் தலைமுறைனர் காதல் ,சினிமா இவற்றை பார்த்து கெடுகின்றனர்.பண்பாடு இல்லாத பாட முறைகளே காரணம்
By venkatasubramanian

8/11/2012 2:46:00 PM
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தில்லியில் இளம்பெண்ணை க் கடத்தி 8 பேர் கற்பழித்த கொடூரம்
டெல்லியில் இளம்பெண்ணை கடத்தி 8 பேர் கற்பழித்த கொடூரம்
புதுடெல்லி, ஆக.11-
 
டெல்லியில் உள்ள டெல்லி ஜல்போர்டு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் சுஜாதா 22 வயது (பெயர் மாற்றப்பட்டள்ளது). அவரது தோழியின் காதலர் இந்திரஜித். இவர் 55-வது செக்டார் அருகே உள்ள ஜர்சைடலி பகுதியில் வசித்து வருகிறார். இந்திரஜித்துக்கு தன் காதலியின் தோழியான சுஜாதா மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.
 
டெல்லியில் பதர்பூர் பகுதியில் வசித்து வரும் சுஜாதாவிடம் இந்திரஜித் போனில் தொடர்பு கொண்டு பேசினார். எனக்கும், என் காதலிக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவளை பிரிட்டானியா தொழிற்சாலை அருகே வரச்சொல்லி உள்ளேன். நீங்கள் வந்து பேசி எங்கள் தகராறை தீர்த்து வைக்க வேண்டும் என்று இந்திரஜித் கூறினார்.
 
இதை உண்மை என்று நம்பி சுஜாதா இரவு 8 மணி அளவில் அங்கு சென்றார். அங்கு இந்திரஜித் தன் நண்பர்கள் ஜாகா, நவீன், சிந்து ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் சுஜாதாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். ஓடும் காரிலேயே சுஜாதாவை இந்திரஜித் கற்பழித்தான். பிறகு அவனது நண்பர்களும் அவரை கற்பழித்தனர். இதற்கிடையே இந்திரஜித்தின்  நண்பர்கள் மேலும் 4 பேர் மற்றொரு காரில் அங்கு வந்தனர்.
 
அவர்கள் அந்த பெண்ணை டெல்லி- ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கும் வெட்டவெளியில் அந்த பெண்ணை நண்பர்கள் 8 பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் கற்பழித்தனர். நள்ளிரவு 1 மணி வரை 8 பேரிடமும் சிக்கி அந்த பெண் படாதபாடு பட்டார்.
 
2 மணி அளவில் அந்த பெண்ணை காரில் ஏற்றி வந்த இந்திரஜித் பல்லாப்கர் மேம்பாலம் பகுதியில் தள்ளி விட்டு சென்றான். உடனே அந்த பெண் டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்திரஜித் கைது செய்யப்பட்டான். மற்ற 7 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக