செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஆத்திகரும் நாத்திகரும்

ஆத்திகரும் நாத்திகரும்

ஓர் ஊரிலே கடும் வறட்சி. ஏரி, குளம், குட்டை, கிணறுகள் எல்லாம் வற்றி விட்டன.  மக்கள் நீரின்றித் தவித்தனர்.  குடங்களைத் தூக்கிக் கொண்டு பல காதம் கடந்து சென்று தண்ணீர் கொண்டு வந்தனர்.

அந்த ஊரில் இருந்த ஆத்திகர்கள் கோவிலில் கூடி, மழை வேண்டிப் பூசைகள் நடத்தினர்.  மழை கொட்டு கொட்டென்று கொட்டி எங்கும் வெள்ளம்.  வெள்ளத்திலே வீடுகள், உடைமைகள், கால் நடைகள் என்று எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன.
நாத்திகர்கள் கூடி ஆத்திகர்கள் மீது இழப்பீடு கோரி வழக்கு தொடுத்தனர். அவர்கள் செய்த பூசையால்தான் வெள்ளமும் பெருத்த சேதமும் தங்களுக்கு ஏற்பட்டது என்று.
ஆத்திகர்களின் எதிர் வாதமோ பேய் மழைக்கும் தாங்கள் நடத்திய பூசைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது.

தவித்தார் நீதிபதி, “வேடிக்கையான வழக்கு இது! பூசையின் ஆற்றலில் நம்பிக்கை உள்ள நாத்திகர்கள் ஒரு புறம். பூசையின் ஆற்றலில் நம்பிக்கை இல்லாத ஆத்திகர்கள் ஒரு புறம்.  ஆண்டவா! இந்த வழக்குக்கு எப்படி நான் தீர்ப்பு சொல்வேன்?”” என்று.

(இன்று அன்பர் பாலாசி இராமானுசம் அவர்கள் அனுப்பிய ஆங்கில மடலின் தமிழாக்கம் இது).

07-08-2012                           நடராசன் கல்பட்டு


தமிழ்ச்சிறகுகள் குழுவிற்கு வந்த மின்னஞ்சல் இது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக