எங்களை வாழவிடுங்கள், எங்களை அழிக்காதீர்கள்: கூடங்குளம் பகுதி குழந்தைகள் இரசிய தூதரகத்துக்கு மடல்
Tirunelveli
செவ்வாய்க்கிழமை,
ஆகஸ்ட் 07,
12:04 PM IST மாலை மலர்
வள்ளியூர், ஆக.7-
கூடங்குளம்
அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள்
கூட்டமைப்பினர் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அங்கு ஹிரோஷிமா
நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
இரண்டாம்
உலகப்போரின் போது ஹிரோஷிமாநகர் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இன்னும்
அந்தநகரத்தில் அணுகுண்டின் பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால் நாம்
கூடங்குளம் என்ற அணு குண்டை நமது அருகிலேயே வைத்திருக்கிறோம். அணு உலை
என்கிற பெயரில் அணுகுண்டை மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கிறோம். இதில்
விபத்து ஏற்பட்டால் தென் தமிழகமே காணாமல் போகிவிடும்.
காங்கிரஸ்
கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நான், இங்கேயும் பேசிக்கொண்டு வேஷம்
போடுவதாக நீங்கள் பேசலாம். வெளியில் இருந்துகொண்டு எதையும் பேசலாம். ஆனால்
கூட்டணியில் இருந்து கொண்டு அவர்கள் செய்யும் தவறை பேசுவதற்கு தைரியம்
வேண்டும். இன்று உலகம் முழுவதும் கூடங்குளத்தை பற்றி பேசி வருகிறார்கள்.
அதற்கு காரணம் உங்களது போராட்டம் தான். உலகம் முழுவதும் அணு உலைகளுக்கு
எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன. உங்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
இந்நிலையில்
கூடங்குளம், இடிந்தகரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி
குழந்தைகள், எங்களை வாழவிடுங்கள், எங்களை அழிக்காதீர்கள் என்று எழுதிய
500-க்கும் மேற்பட்ட கடிதங்களை டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு
அனுப்பினர். இதுபோன்ற கடிதங்கள் தொடர்ந்து அனுப்பப்படுவதாக
போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக