திங்கள், 6 ஆகஸ்ட், 2012

தமிழக மீனவர்கள் ஆகசுட்டு 8 முதல் ஐந்து நாட்கள் தொடர் உண்ணா நோன்பு

தமிழக மீனவர்கள் ஆகசுட்டு  8 முதல் ஐந்து நாட்கள் தொடர் உண்ணா  நோன்பு
தி
தமிழக மீனவர்கள் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரதம்
மாலை மலர் : இராமேசுவரம்,ஆகஸ்ட்.5-


கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி, ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொள்வார்கள் என ராமேஸ்வரம் பகுதி இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் பேசிய அவர், 'தமிழக மீனவர்கள் 5 பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு இலங்கையில் வாடுகின்றனர். அவர்களை விடுவிப்பதற்காக தமிழக அரசு ரூ.2 லட்சம் உதவித்தொகை அளித்தபின்பும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை’ என்றார்.

போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக