செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

வெளிநாட்டுப் பெயர்களை ப் பயன்படுத்த பள்ளிகளுக்கு த் தடை: நேபாள அரசு உத்தரவு

வெளிநாட்டுப் பெயர்களை ப் பயன்படுத்த பள்ளிகளுக்கு த் தடை: நேபாள அரசு உத்தரவு


வெளிநாட்டுப் பெயர்களை பயன்படுத்த பள்ளிகளுக்கு தடை: நேபாள அரசு உத்தரவு
காத்மண்டு, ஆக. 7 -
 
நேபாளத்தில் டெல்லி பப்ளிக் ஸ்கூல், ஆக்ஸ்போர்ட் ஸ்கூல் மற்றும் ஒயிட் ஹவுஸ் என்னும் வெளிநாட்டு பெயர்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதனால் நேபாளத்தின் கல்வி திட்டத்தின் தனித்தன்மை இழந்து வருவதாக கூறி, அப்பெயர்களை மாற்ற அரசு வேண்டுகோள் விடுத்தது.
 
இதற்கிடையே இப்பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசின் வேண்டுகோளை ஏற்று காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கிய பள்ளிகள் கல்லூரிகள் தங்கள் பெயர்களை மாற்றிவிட்டன.
 
பெயரை மாற்ற நேரம் கொடுத்தும், அதனை பொருட்ப்படுத்தாமல் இயங்கிய பள்ளிகளை கண்டு கொதிப்படைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.  இதனால் பள்ளிகள் இயங்காமல் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நேபாள அரசு பெயர்களை மாற்றாத பள்ளிகள் செயல்பட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இச்சம்பவத்தை கவனித்த ஐ.நா. நிர்வாகத்தினர், மாணவர்களின் நலனை உரிமையை கருத்தில் கொண்டு மாணவர்கள் உடனடியாக அமைதியான சூழலில் தங்கள் படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக