வியாழன், 9 ஆகஸ்ட், 2012

புற்றுநோய் : தொடக்கத்தில் கண்டறிந்தால் சிக்கல் இல்லை



சொல்கிறார்கள்



"ஆரம்பத்தில் கண்டறிந்தால் பிரச்னையில்லை' 

நோய் மற்றும் கீபுற்று மோதெரபி நிபுணர் அருண் சேஷாசலம்: மார்பகத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்ட அனைவருக்குமே, அதை அகற்றுதல் அவசியமில்லை. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்ட மார்பகப் புற்று நோய்க்கு பல, கூட்டு சிகிச்சை முறைகளின் மூலம், முழு நிவாரணம் பெற, நவீன மருத்துவத்தில் வழி உள்ளது. அலட்சியம், அறியாமை என, வளர விடப்பட்ட, நாட்பட்ட புற்று நோய் மட்டுமே, நிலைமையை சிக்கலாக்கும். மார்பகப் புற்று நோயில், மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. கட்டியின் அளவு, 2 செ.மீ.,க்கு குறைவாக இருப்பது முதல் நிலை; 2 முதல், 5 செ.மீ.,க்குள் இருப்பது இரண்டாவது நிலை; 5 செ.மீ.,க்கும் மேலாக நெறிக் கட்டியுடன் தலைகாட்டுவது மூன்றாவது நிலை; இந்த நிலையுடன் கூடுதலாக கல்லீரல், நுரையீரல், எலும்பு, மூளை போன்ற உள் உறுப்புகள் ஏதேனுக்கும், புற்று நோய் பரவுவது, நான்காவது நிலை. முதல் இரண்டு நிலைகளில், மார்பக அகற்றத்திற்கு அவசியம் ஏற்படாது; அடுத்த இரண்டு நிலைகளில், பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து, சிகிச்சைக்காக அகற்றப்படலாம். எனவே, ஆரம்ப நிலையில் சுதாரித்து, மருத்துவ சிகிச்சையை நாடினால், இழப்புகளைத் தவிர்க்கலாம். இந்தியப் பாரம்பரியத்தில், ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களில், எட்டு பேரில் ஒருவருக்கு, மார்பகப் புற்று கண்டறியப்படுவதாக, புள்ளி விவரம் கூறுகிறது. ரத்த உறவுகளில் புற்று கண்டறியப்பட்டால், வயதைப் பொறுத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக, "மேமோகிராம்' எனும், மார்பக, "ஸ்கிரீனிங்' அவசியம். 40 வயதைத் தொட்ட பெண்கள், இந்த பரிசோதனையை ஆண்டுதோறும் செய்து கொள்ளலாம். சுய பரிசோதனையை முதல் முறை, மருத்துவ ஆலோசனைப் படியும், பின் அவ்வப்போது தொடர்ச்சியாகவும் செய்து, சோதித்துக் கொள்ளலாம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக