திங்கள், 6 ஆகஸ்ட், 2012

வாடகை கொடுக்காததால் மூதாட்டியைக் காட்டில் விட்டவர்

நெல்லையில் வாடகை ப் பணம் கொடுக்காததால் மூட்டை முடிச்சுகளுடன் மூதாட்டியை க் காட்டில் விட்ட வீட்டு உரிமையாளர்
நெல்லையில் வாடகை பணம் கொடுக்காததால் மூட்டை முடிச்சுகளுடன் மூதாட்டியை காட்டில் விட்ட வீட்டு உரிமையாளர்
 
மாலை மலர் நெல்லை,ஆக.5

நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). அப்பகுதியை சேர்ந்த ஒருவரது காம்பவுண்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

வயதான காலத்தில் லட்சுமியால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் அன்றாடம் சாப்பாட்டுக்கே அவதிப்பட்டு வந்தார். போதிய பணம் இல்லாததால் வாடகை செலுத்த முடியவில்லையாம். வீட்டு உரிமையாளர் லட்சுமியிடம் அடிக்கடி வாடகை கேட்டு வந்தார். லட்சுமி தன்னிடம் பணம் இல்லாததால் வாடகை கொடுப்பதை காலம் கடத்தி வந்தார்.

இது வீட்டு உரிமையாளருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இன்று காலை அவர் லட்சுமியிடம் மீண்டும் வாடகை பணம் கேட்டார். அவர் கொடுக்காததால் லட்சுமியையும் அவரது வீட்டு பொருட்கள் பீரோ, கட்டில் மற்றும் உடைகளையும் ஒரு காரில் ஏற்றினார்.

பின்னர் லட்சுமியை தளவாட பொருட்களோடு வி.எம். சத்திரம் அருகே ஒரு காட்டு பகுதியில் இறக்கி விட்டு சென்றார். எங்கு செல்வது என வழி தெரியாமல் லட்சுமி அங்கேயே திகைத்தபடி நின்றார். அந்த வழியாக வருவோர், போவோரிடம் தனது நிலைமையை அழுதபடி கூறியபடி உள்ளார். இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற இந்த செயலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொண்டு அமைப்புகள் மூதாட்டி லட்சுமியை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக