சனி, 11 ஆகஸ்ட், 2012

நெஞ்சுரம் கொண்ட மான மிகு மனிதரின் அறிக்கை-தனி த் தமிழ் ஈழம் தீர்மானம்: அர்ச்சுன் சம்பத் தகவல்

திருச்சி, ஆக.11-

வேலூரில் நாளை நடைபெற உள்ள இந்து ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டில் தனித்தமிழ் ஈழம் அமைய கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து மக்கள் கட்சி சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்து, ஈழ ஆதரவாளர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் தனித்தமிழ் ஈழம் அமையக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும். தி.மு.க. நடத்த உள்ள டெசோ மாநாடு காங்கிரஸ் கட்சிக்கும், ராஜபக்சேவுக்கும் ஆதரவாகவே நடத்தப்படுகிறது.

எங்களுக்கு எந்த தடை விதித்தாலும் தனித்தமிழ் ஈழம் தீர்மானத்தை நிறைவேற்றுவோம். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

இலங்கையை இரண்டாக பிரித்து தனி தமிழ் நாடு உருவாக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக