புதன், 8 ஆகஸ்ட், 2012

அம்மா கையால் பரிசு பெற்றேன்

சொல்கிறார்கள்
"அம்மா கையால் பரிசு வென்றேன்!' 
 ஓகாவில், தேசிய அளவிலான சாம்பியன் பட்டம் வென்றுள்ள திவ்ய நந்தினி: என் அம்மா ஜோதி, ஒய்.எம். சி.ஏ., கல்லூரியில், யோகா ஆசிரியராக வேலை செய்கிறார். ஆனாலும், சிறு வயதில் என்னை யோகா கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதில்லை; எனக்கும், யோகா மேல், ஈர்ப்பு வந்ததில்லை. நான் எட்டாம் வகுப்பு படித்த போது தான், எனக்கு யோகாவில் ஈடுபாடு வந்தது; அதற்குக் காரணம் என் அம்மா தான். யோகாவில் அவர் காட்டிய ஈடுபாடு, என்னை ஆச்சரியப்படுத்த, "எனக்கும் யோகா கற்றுக் கொடுங்க' என்று, என் அம்மாவிடம் போய் நின்றேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். தினமும் யோகா பயிற்சி செய்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், போகப் போக, வில்லாக வளைந்த என் கை, கால்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்த அந்த ஆண்டே, மாநில அளவிலான எட்டாவது யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன். அது தான், என் முதல் போட்டியும் கூட. எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்காக, கொஞ்சம் இடைவெளி விட்டு, மீண்டும் போட்டிகளில் பங்கேற்றேன். 2008ல், தாய்லாந்தில் நடந்த முதல் ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு, இந்தியா சார்பில் பங்கேற்று, மூன்றாம் பரிசு வென்றேன். கடந்த, 2011ல், ராமநாதபுரத்தில் நடந்த, தேசிய அளவிலான யோகா சாம்பியன் ஷிப் போட்டியில் எல்லா மாநிலத்தில் இருந்தும் பங்கேற்ற, 25 "டாப்பர்'களுடன் மோதி, முதல் பரிசு வாங்கினேன். சென்னை வேலம்மாள் பள்ளியில், பிளஸ் 1 படித்த போது, மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று, வெண்கலப் பதக்கம் வென்றேன். பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக என் அம்மா வந்திருந்தார். அவர் கையால் பரிசு பெற்றது, என் வாழ்வில் மறக்க முடியாதது.

> தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக