First Published : 10 Aug 2012 01:17:39 PM IST
திருச்சி,
ஆக.10: இலங்கைத் தமிழர்களின் சுடுகாட்டின் மீதுதான் கருணாநிதி
நடத்துவதாகக் கூறும் டெஸோ மாநாடு நடக்கப்போகிறது என்று இந்துமக்கள் கட்சித்
தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம்
பேசிய அவர், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகவும் தனி ஈழம் கோரியும் வேலூரில்
இந்து மக்கள் கட்சி சார்பில் ஆக.12ம் தேதி மாநாடு நடக்கிறது.இந்த
வேலூர் மாநாட்டில், ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்களைப் பாதுகாக்க
வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும், தனித்தமிழ் ஈழம் உருவாக
வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவோம். கருணாநிதி நடத்துவதாகக் கூறும் டெஸோ
மாநாடு தமிழர்களின் சுடுகாட்டின் மீது நடத்தப்படும் மாநாடு. காங்கிரஸையும்
ராஜபட்சேவையும் திருப்திப் படுத்து ஒரு மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி.இலங்கைத்
தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எனில், அது தனித் தமிழ் ஒன்றுதான்.
அது ஒன்றே வழியாக அமையும். எனவே இலங்கையைப் பிரித்தளிக்க நாங்கள்
வரவேற்கிறோம். போர்க்குற்றங்களில் ஈடுபட்டு இன அழிப்பில் ஈடுபட்ட
இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு விதித்தால் அதை
வரவேற்கிறோம். இந்தியாவும் தங்களது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ள
வேண்டும். இந்தியாவுக்கு இயைந்த நாடாக இலங்கை என்றுமே இருந்ததில்லை.
எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை திகழப் போவதில்லை.
எனவே,தனித் தமிழ் ஈழமே இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ ஒரே வழி.- இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக