murder லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
murder லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2013

Rape and murder of Tamil women by Sri Lankan forces aims at genocide: NZ Tamils

Rape and murder of Tamil women by Sri Lankan forces aims at genocide: NZ Tamils

[TamilNet, Monday, 18 March 2013, 23:56 GMT]
In a letter addressed to Ms. Navaneetham Pillay, UN High Commissioner for Human Rights, on Sunday, the Tamil Action Front of New Zealand (TAFNZ), citing established cases of the rape and murder of Tamil Women by the Sinhala military of Sri Lanka, said that there is a pattern of structural genocide being meticulously executed by Sri Lanka, irrespective of who is in power. What is new is the openly declared policy of the Rajapaksa regime to complete the genocide with tacit international support and by calculated false propaganda materialized through wine, women, diamonds and dollars, the TAFNZ letter signed by its coordinator, Mr. A. Theva Rajan, accused.

Besides listing some of the known cases, TAFNAZ, has cited the following statements of the World Organization Against Torture and the Asian Human Rights Commission:

“Sri Lankan soldiers have raped both women and young girls on a massive scale, and often with impunity, since reporting often leads to reprisals against the victims and their families.." : World Organization Against Torture

"The Sri Lankan security forces are using systematic rape and murder of Tamil women to subjugate the Tamil population... Impunity continues to reign as rape is used as a weapon of war in Sri Lanka." : Asian Human Rights Commission

Chronology:


திங்கள், 8 அக்டோபர், 2012

குழந்தை பிறந்ததும் கொல்லும் கொடுமை என்று முடியுமோ?

பிறந்து 24 மணி நேரத்தில் சாக்கு மூட்டையில் கட்டி ஆண் குழந்தை கிணற்றில் வீச்சு
பிறந்து 24 மணி நேரத்தில் சாக்கு மூட்டையில் கட்டி ஆண் குழந்தை கிணற்றில் வீச்சு
சரவணம்பட்டி, அக்.7-


கோவை காளப்பட்டி அசோக் நகர் பாச்சா தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன். ஓய்வு பெற்ற என்ஜீனியர். இவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு நடைபயிற்சிக்காக சென்றார்.

அப்போது அங்குள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே கிணற்றை கோவிந்தன் எட்டிப் பார்த்தார். கிணறு 40 அடி ஆளமுள்ளது என்பதால் சரியாக தெரியவில்லை. உடனடியாக அருகிலிருந்தவர்களை அவர் அழைத்தார். அப்போது கோவிந்தனின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் கோபியும், ஊர்பொதுமக்களும் விரைந்து வந்தனர்.

கிணற்றுக்குள் வாலிபர் கோபி இறங்கினார். அழுகை சத்தம் வந்த சாக்கு பையை எடுத்துக் கொண்டு மேலே வந்தார். அங்கு சாக்குபையை பிரித்து பார்த்த போது அதற்குள் பிறந்த 24 மணி நேரமே ஆன அழகான ஆண் குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர். டாக்டர்கள் குழந்தையை ஐ.சி.யூ.வில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவில் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்தனர். தவறான உறவால் பிறந்த குழந்தை என்று அதன் தாய் கிணற்றில் வீசிச்சென்றாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

புதன், 22 ஆகஸ்ட், 2012

Tamil trader narrowly escapes murder in Vanni

Tamil trader narrowly escapes murder in Vanni

[TamilNet, Friday, 17 August 2012, 23:16 GMT]
A 44-year-old Tamil trader narrowly escaped from a killer squad that came in motorbikes and fired at him after calling him to come out of his residence at Tha'n'neer-oottu in Mu'l'liyava'lai Thursday around 9:30 p.m. The attackers escaped through the military checkposts manned by the occupying Sri Lanka Army soldiers as the people from the area gathered at the site after hearing the shouting of the victim.

The victim, P. Giritharan, managed to run away from the killers after receiving a gunshot wound in one of his thighs, news sources in Mullaiththeevu said.

Mr Giritharan is admitted at Mullaiththeevu government hospital.

Residents of Tha'n'neer-oottu suspect that the SL military has begun deploying killer squads in the district.

சனி, 11 ஆகஸ்ட், 2012

நாடு எங்கே போகிறது? வெறி பிடித்த மாணாக்கர்களும் பிற இளைஞர்களும்

மாணவி அடித்துக் கொலை:மாணவர்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்

தினமணி  First Published : 11 Aug 2012 02:15:39 PM IST

Last Updated : 11 Aug 2012 03:47:06 PM IST

ஹிசார், ஆக., 11 : ஹரியானா மாநிலம் ஹிசரில் உள்ள ஜிஜஸ்ட் கல்லூரி வளாகத்தில் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவி வர்ஷா யாதவ், அவளது ஆண் நண்பரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் நடந்துள்ளது என்பதுதான் கவலைக்குரிய விஷயமாகும்.தன்னை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டதால் கொலை செய்தேன் என்று இந்த படுபாதக செயலைச் செய்த 19 வயதாகும் பிடெக் மாணவன் சேட்டன் ஷியோரன் கூறியுள்ளான். மேலும், தான் கொலை செய்ததை மறுக்கவில்லை என்றும் காவல்துறையிடம் கூறியுள்ளான்.  கொலை நடந்த இடத்தில் ஏராளமான மாணவர்கள் இருந்துள்ளனர் என்றும், ஒருவர் கூட அந்த பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வளரும் இளைஞர்களுக்கு சமுதாய நோக்கே இல்லாமல் இருப்பது குறித்தும் கவலை தெரிவித்தனர்.
கருத்துகள்

வளரும் தலைமுறைனர் காதல் ,சினிமா இவற்றை பார்த்து கெடுகின்றனர்.பண்பாடு இல்லாத பாட முறைகளே காரணம்
By venkatasubramanian

8/11/2012 2:46:00 PM
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தில்லியில் இளம்பெண்ணை க் கடத்தி 8 பேர் கற்பழித்த கொடூரம்
டெல்லியில் இளம்பெண்ணை கடத்தி 8 பேர் கற்பழித்த கொடூரம்
புதுடெல்லி, ஆக.11-
 
டெல்லியில் உள்ள டெல்லி ஜல்போர்டு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் சுஜாதா 22 வயது (பெயர் மாற்றப்பட்டள்ளது). அவரது தோழியின் காதலர் இந்திரஜித். இவர் 55-வது செக்டார் அருகே உள்ள ஜர்சைடலி பகுதியில் வசித்து வருகிறார். இந்திரஜித்துக்கு தன் காதலியின் தோழியான சுஜாதா மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.
 
டெல்லியில் பதர்பூர் பகுதியில் வசித்து வரும் சுஜாதாவிடம் இந்திரஜித் போனில் தொடர்பு கொண்டு பேசினார். எனக்கும், என் காதலிக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவளை பிரிட்டானியா தொழிற்சாலை அருகே வரச்சொல்லி உள்ளேன். நீங்கள் வந்து பேசி எங்கள் தகராறை தீர்த்து வைக்க வேண்டும் என்று இந்திரஜித் கூறினார்.
 
இதை உண்மை என்று நம்பி சுஜாதா இரவு 8 மணி அளவில் அங்கு சென்றார். அங்கு இந்திரஜித் தன் நண்பர்கள் ஜாகா, நவீன், சிந்து ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் சுஜாதாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். ஓடும் காரிலேயே சுஜாதாவை இந்திரஜித் கற்பழித்தான். பிறகு அவனது நண்பர்களும் அவரை கற்பழித்தனர். இதற்கிடையே இந்திரஜித்தின்  நண்பர்கள் மேலும் 4 பேர் மற்றொரு காரில் அங்கு வந்தனர்.
 
அவர்கள் அந்த பெண்ணை டெல்லி- ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கும் வெட்டவெளியில் அந்த பெண்ணை நண்பர்கள் 8 பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் கற்பழித்தனர். நள்ளிரவு 1 மணி வரை 8 பேரிடமும் சிக்கி அந்த பெண் படாதபாடு பட்டார்.
 
2 மணி அளவில் அந்த பெண்ணை காரில் ஏற்றி வந்த இந்திரஜித் பல்லாப்கர் மேம்பாலம் பகுதியில் தள்ளி விட்டு சென்றான். உடனே அந்த பெண் டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்திரஜித் கைது செய்யப்பட்டான். மற்ற 7 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

புதன், 18 ஜூலை, 2012

தமிழக மீனவர் சுட்டுக் கொலை

தமிழக மீனவர் சுட்டுக் கொலை: விரிவான விசாரணை தேவை-  தலைமையருக்கு முதல்வர் மடல்

தினமணி First Published : 18 Jul 2012 03:16:58 AM IST

Last Updated : 18 Jul 2012 03:37:38 AM IST

சென்னை, ஜூலை 17: துபையில் அமெரிக்க கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து, பிரதமருக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தின் விவரம்:  துபை கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையால் கடந்த 16-ம் தேதி சுடப்பட்டு தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்த துயரமான சம்பவத்தை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சேகர் (25), எம். பாண்டுவநாதன் (22), கே.முத்துக்கண்ணன் (32), ஆர்.முத்துமணிராஜ் (27) ஆகிய நான்கு பேரும் மீன்பிடித் தொழிலுக்காக துபை சென்றனர். அங்கு தினக்கூலி அடிப்படையில் மீன்பிடித் தொழில் செய்து வந்தனர்.  சம்பவத்தன்று அவர்கள் ஜபேல் அலி துறைமுகம் என்ற இடத்துக்கு அருகே 30 அடி நீளம் கொண்ட பயணிகள் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இது அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கப்பல் அடிக்கடி நங்கூரமிடும் இடமாகும். இந்த நிலையில் "ரப்பான்நாக்' என்ற அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர், மீனவர்கள் நான்கு பேரை நோக்கிச் சுட்டுள்ளனர்.  இந்திய நேரப்படி கடந்த 16-ம் தேதி மாலை 6 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க கடற்படை வீரர்களின் எச்சரிக்கையை மீறியதாகவும், வீரர்களின் கப்பலை நோக்கி மீனவர்கள் முன்னேறி வந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.  இந்தச் சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தோப்புவலசை கிராமத்தைச் சேர்ந்த ஏ.சேகர் என்ற மீனவர் உயிரிழந்தார் என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் இருந்த மீனவர்கள் 3 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  முன்பு நடந்த சம்பவம்: இதேபோன்ற சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கொச்சி கடல் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜீஸ் பின்கோவும், கேரளத்தைச் சேர்ந்த மற்றொருவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது, இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் மீனவர்களை நோக்கிச் சுட்டனர். இந்தச் சம்பவத்தில் தலையிட்ட மத்திய அரசு, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கான நிவாரண நிதியை சம்பந்தப்பட்ட இத்தாலிய கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தந்தது.  எனவே, துபையில் இப்போது நடைபெற்ற சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அமெரிக்கா, துபை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று விரிவான விசாரணை நடத்த உதவிடும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  உயிரிழந்த மற்றும் காயமடைந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு போதிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தங்களை கேட்டுக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள்  கிடைப்பதற்கு அங்குள்ள இந்தியத் தூதரகத்தை தாங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.  மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன்பிடித் தொழிலை செய்கின்றனர். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.  ரூ. 5 லட்சம் நிவாரண நிதி: உயிரிழந்த மீனவர் சேகரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்




வெள்ளி, 6 ஜூலை, 2012

கொலைவெறி தொட ரும் சிங்களம்! வேடிக்கை பார்க்கும் இந்தியம்!

இலங்கை ச்சிறையில் விடுதலைப் புலி அடித்துக் கொலை



கொழும்பு, ஜூலை 5: இலங்கை அனுராதபுரம் சிறையில் கைதியாக உள்ள விடுதலைப் புலி ஒருவர் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இவர் நெடுங்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன் ஆவர். கவலைக்கிடமான நிலையில் ரகமா மருத்துவமனைக்கு புதன்கிழமை நிமலரூபன் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.  இவர் தவிர அனுராதபுரம் சிறையில் உள்ள 6 கைதிகள் மஹாரா சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  காயமடைந்த சிறைக் கைதிகளை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக் கூட்டணியின் எம்.பி.க்கள், நிமலரூபன் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.  அதேநேரத்தில், மாரடைப்பு காரணமாக நிமலரூபன் இறந்ததாக சிறைத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரா கூறியுள்ளார்.  இலங்கையில் உள்ள வவுனியா சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை கைதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகள் 38 பேர் சிறைக் காவலர்கள் மூவரை 18 மணிநேரம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பின்னர் அங்கு வந்த போலீஸôரும் அதிரடிப் படையினரும் கண்ணீர்ப் புகை குண்டு வீசி காவலர்களை விடுவித்தனர். பின்னர் அந்தக் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் போலீஸôரால் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.  இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு செய்தித் தொடர்பாளருமான மைத்திரிபால சிறிசேன, வவுனியா சிறைச் சம்பவத்தை "புலிகளின் உறுமல்' என்று கூறியுள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று கூறிக்கொள்ளும் உருத்திரகுமாரன் இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருப்பதாகவும் அவர் கூறினார். மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க 500 புலிகள் முயன்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Murder, rape dog Sri Lanka tourist sector

Murder, rape dog Sri Lanka tourist sector

[TamilNet, Saturday, 31 December 2011, 04:13 GMT]
Reports from the Sri Lanka media state that the southern tourist town of Tangalle near Hambantota "is now all but deserted after foreign visitors fled" following the murder of a 32-year old British tourist after a bar brawl at the resort. Prosthetic expert Khuram Shaikh, from Milnrow, Rochdale, was taking a break from his Red Cross assignment in Middle-east, when he was killed, and his Russian girlfriend was severely injured during the altercation. The alleged killer, Vidanapathirana, 24, the chairman of Tangalle village council, a close associate of Rajapaksas, surrendered after absconding for a day, according to reports. Meanwhile, BBC reported five youths were arrested attempting to rape a swedish tourist Friday in Negombo, where tourists guides have complained to Police that incidents of sexual harassment of tourists occur regularly in the resorts.

Shaikh's friend, Victoria Alexandrovna, 23, is being treated in Karapitiya hospital, Galle at the intensive care unit, reports said.

While media reports said that the Ms. Alexandrovna was sexually assaulted, Sri Lanka's deputy economic development minister, Lakshman Abeywardene, said these reports were false.

BBC also reported that journalists have received death threats following their coverage of the murder and attack on a tourist couple.

All planned events and festivities for tourists in the southern Sri Lankan resort of Tangalle has been cancelled following the killing of a holiday maker, local tourism promoters said.

“Normally, tourists move around and visit other venues in the area, but now they are afraid to go out in the night” President of the Tangalle Tourist Hoteliers Association told BBC.

Local media also reported that "[a] group of persons identifying themselves as law abiding citizens of Tangalle, have complained to the Inspector General of Police (IGP) in writing that there are attempts by some elements with vested interests to undermine investigations into the killing."

The attacks on tourists are reported amidst other ominous statistics related to escalation in rape cases in Sri Lanka. Daily Mirror reported Thursday that a total of 1,637 rape cases had been reported to the police during this year,

External Links:
DM: 1,637 rape cases reported in 2011: Police
BBC: Red Cross grieves loss of Briton killed in Sri Lanka
BBC: British tourist killed on Christmas eve
SkyNews: Sri Lankan MP held over Briton's death
UK: Sri Lanka holidaymakers tell of horror slaying of Red Cross hero from Rochdale
BBC: 'Attempted rape' of Swedish tourist
BBC: Call to eradicate fear from Tangalle tourists

சனி, 26 நவம்பர், 2011

Moothoor villagers demand their security ensured after teacher murder


Moothoor villagers demand their security ensured after teacher murder

[TamilNet, Friday, 25 November 2011, 16:27 GMT]
Students, teachers, education officials and members of public in large numbers went in a procession Friday morning from Cheanaiyoor Central College to Champoor Police Station in the Moothoor East in Trincomalee district demanding that the culprits behind the brutal killing of a young unmarried Tamil teacher Miss Kurukulasingham Srivathani that took place on Thursday should be arrested. Srivathani left home Wednesday as usual in her scooter to Paaddaa'li-puram Government Tamil Mixed School in the Moothoor education zone, about seven km away from her place Cheanaiyoor-Kaddaipa'richchaan, which is located between two Sri Lanka Army camps, one at Paaddaa'li-puram and the other at Chanthosa-puram. Moothoor East, previously a part of the de facto Tamil Eelam administration by the LTTE is now fully occupied by the SL military.

A delegation of the civil groups at the conclusion of the procession met the Officer-in-Charge of the Champoor Police Station and put forward a demand to ensure the security of teachers and students and public in the Moothoor East.

Miss Srivathani
Miss Srivathani with garland at World Teachers Day event in her school two months ago
Later in the afternoon a condolence meeting was held in the Kaddaipa'richchaan residence of the murdered teacher Miss Kurukulasingham Srivathani who was born on 20 February 1978.

Her body was kept at the residence for the public to pay their last respects.

Moothoor Zonal Director of Education Mr.A.Vijeyanandamoorthy, former Trincomalee district parliamentarian Mr.K.Thurairatnasingham and several others spoke at the condolence meeting.

They said the death of Miss Srivathani was an irreparable loss to the educational development of Moothoor at a time student community needed dedicated teachers. Mr.S.Suntharamoorthy, Principal of the Paaddaa'lipuram Government Tamil Mixed School presided.

Later in the afternoon around three p.m. the remains of Srivathani were buried in the Hindu Cemetery at Kaddaipa'richchaan amid cries from students, teachers and people of Moothoor East.

Miss Srivathani passed out as a trained teacher from the Batticaloa Teacher Training College in 2006 and got her first appointment at Paaddaa'lipuram School.

She was honored at her school at an event held two months back on the World Teachers Day for her dedicated service.

She met her tragic death while she was on her way to school in her scooter on Thursday. Later her body was recovered from a shrub, three miles off Cheanaiyoor with cut injuries on her head.

Except her ear-ring all jewelry she was wearing and her handbag with the salary for the month of November had been reported missing. Her scooter was found lying near her body.

Related Articles:
24.11.11   Young female Tamil teacher killed in Moothoor East

வியாழன், 3 நவம்பர், 2011

இலண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் படுகொலை! வைகோ வேதனை !










தமிழர் தகவல்  
View profile  
 More options Nov 3, 3:00 pm

3 நவம்பர் 2011
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் படுகொலை: மதிமுக செயலாளர் வைகோ இரங்கல் !

புலம் பெயர்ந்து, தாய் மண்ணை விட்டு வெளியேறி, துயரங்களைச் சுமந்து,
புவியெங்கும் வாழும் என் தமிழ் ஈழ உறவுகளே, லண்டன் மாநகரில், கடந்த அக்டோபர்
22 ஆம் தேதியன்று, கந்தசாமி அகிலக்குமார் எனும், ஈழத்தமிழ் இளைஞர், காரணம்
ஏதும் இன்றி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை, இன்று
நான் அறிந்தபோது, உள்ளம் பதறியது.
29 வயதுள்ள தம்பி அகிலன்,  ஒரு கருப்பின ஆப்பிரிக்க நாட்டவரால் கத்தியால்
குத்திக் கொல்லப்பட்டு உள்ளார். முன்பகை ஏதும் இல்லை. அகிலனின் இளம் மனைவி,
கணவனை இழந்து, வாழ்வின் நம்பிக்கைகள் அனைத்தும் நாசமாகி, துயர வெள்ளத்தில்
தவிக்கின்றார். கைக்குழந்தையும் உள்ளது.

இந்தக் கொலை, லண்டன் வாழ் தமிழர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை, நியாயமான
ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், அவர்கள் தங்களைக்
கட்டுப்படுத்திக் கொண்டு அமைதி காக்கின்றனர். ஏனெனில், சில வாரங்களுக்கு
முன்பு, ஒரு கருப்பு இன இளைஞர், பிரித்தானியக் காவல்துறையினரால் சுட்டுக்
கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவி, பெரும் கலவரம் மூண்டபோது, நான் அங்கு வாழும்
தமிழர்களைப் பற்றித்தான் மிகுந்த கவலை அடைந்தேன். ஆனால், இங்கிலாந்து நாட்டின்
சட்டம், ஒழுங்குக்கு, ஈழத்தமிழர்கள் கட்டுப்பட்டு
வாழ்கின்றார்கள் என்பதும், பிரித்தானிய வெள்ளையர்கள், ஈழத்தமிழர்கள் மீது,
அனுதாபமும் அக்கறையும் கொண்டு உள்ளார்கள் என்பதும், ஆறுதல் அளிக்கின்ற
ஒன்றாகும்.

இந்த நிலையில், துன்பத்துக்கும், துயரத்துக்கும் ஆளாகி உள்ள ஈழத்தமிழர்கள்,
தொடர்ந்து எந்தச் சூழ்நிலையிலும் ஆத்திரத்துக்கு இடம் கொடுத்து விடாமல் அமைதி
காப்பதே, மிகவும் அவசியமாகும். அகிலனை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது
துணைவியாருக்கும், லண்டன் வாழ் ஈழத்தமிழர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத்
தெரிவிக்கின்றேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8       பொதுச் செயலாளர்,
03.11.2011         மறுமலர்ச்சி தி.மு.க


  ahilan.pdf
82K View Download

  vaiko-nov2.jpg
8K View Download

  aklian.jpg
81K View Download

   

புதன், 21 செப்டம்பர், 2011

Indira Gandhi assasination: conspiracy of cong.











Muthamizh Vendhan  
 
 
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமல்ல, இக்கொலை
பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டிலும் பல மர்ம
முடிச்சுகள் காணப்படுகின்றன. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக்
கண்டறிவதில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு உண்மையான கவலை இருக்கவே இல்லை
என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

எப்படியாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும், அந்த இயக்கத்தின்
இலட்சியத்துக்காக தமிழின உணர்வோடு செயல்பட முன் வந்த தமிழின இளைஞர்களையும்
தண்டித்தாக வேண்டும் என்ற ‘ஒற்றைப் பார்வை’யோடு, காங்கிரஸ் ஆட்சி
செயல்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய
முடியாமல், அது தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்கவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பது ராஜீவ் மரணத்துக்கு இழைத்த மிகப்
பெரும் அநீதியாகும்.

<http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/sanjayindira.jpg>ராஜீவ்
கொலையில் சதித் திட்டம் தீட்டியவர்கள் மற்றும் ராஜீவ் பாதுகாப்புக்கு உரிய
ஏற்பாடு செய்யாதவர்களைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் ஆட்சி துடிப்புடன்
செயல்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர்
தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியை கவிழ்த்த காங்கிரஸ், தனது
ஆதரவோடு சந்திரசேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கி யிருந்தது.
சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை
நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற
உச்சநீதிமன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை
அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ்
காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா
என்பது குறித்து ஆராய்வதே இந்த ஆணையத்தின் பணி என்று உள்துறை அமைச்சகம்
அறிவித்தது. இதை அப்போது காங்கிரஸ் எதிர்த்தது. ராஜீவ் கொலையின் சதித்
திட்டங்கள் பற்றியும், விசாரணை வரம்பு விரிவாக்கப்பட வேண்டும் என்று அப்போது
காங்கிரஸ் தலைவராக இருந்த பி.வி. நரசிம்மராவ், பிரதமர் சந்திரசேகருக்கு கடிதம்
எழுதினார். ஆனால், ஜெ.எஸ். வர்மா பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளை
மட்டுமே தம்மால் விசாரிக்க முடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார். அதன்
காரணமாகவே ஜெ.எஸ். வர்மா விசாரணை வரம்பிலிருந்து ஒதுக்கப்பட்ட அயல்நாட்டு சதி
தொடர்புகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி. ஜெயின்
தலைமையில் மற்றொரு விசாரணை ஆணையம் 1991 ஆக. 23 இல் அமைக்கப்பட்டது.

சந்திரசேகர் ஆட்சியின்போதும் அடுத்த சில மாதங்களில் அமைந்த நரசிம்மராவ்
தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போதும் நீதிபதி வர்மா ஆணையம் செயல்படுவதற்கான
நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அலுவலக செயலாளரோ,
பணியாளர்களோ நியமிக்கப்பட வில்லை. மனம் குமுறிய ஜெ.எஸ். வர்மா, வெளிப்
படையாகவே, “இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சி, எந்த அளவுக்கு உள்ளது என்பதையே இது
காட்டு கிறது. இது இந்தியாவின் கவுரவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. உலக மக்கள்
இதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்” (2.5.1991 ‘இந்து’ நாளேடு) என்று கூறினார்.
ஒரு வழியாக நீதிபதி சர்மா, 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிக்கையை மத்திய அரசிடம்
சமர்ப்பித்தார். 5 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் தான் நரசிம்மராவ் ஆட்சி,
அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்தது. உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் சர்மா
அறிக்கையின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்தார். ஆனால், காங்கிரஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்களே, இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்ததால், பிரதமர்
நரசிம்மராவ், அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது. அதன்
பிறகும், இரண்டு ஆண்டுகாலம் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. பிறகு
எதிர்கட்சிகள் வற்புறுத்தலைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு
ஒன்று அறிக்கையை பரிசீலித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டது.

வர்மாவின் அறிக்கை மத்திய மாநில ஆட்சிகளின் காவல்துறை, உளவுத் துறையைக்
கடுமையாகக் குறை கூறியது. ராஜீவ் கொலை நடந்தபோது மத்தியில் நடந்த சந்திரசேகர்
ஆட்சியும், தமிழ்நாட்டில் நடந்த ஆளுநர் ஆட்சியும் காங்கிரசின் ‘பினாமி’
ஆட்சிகள் தான் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். ராஜீவுக்கு பாதுகாப்பு
வழங்குவதில் தமிழக காவல்துறை, தமிழக அரசு, இந்திய உளவுத் துறை மற்றும் ராஜீவ்
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த காங்கிரசார் தங்கள் கடமையிலிருந்து நழுவி விட்டனர்
என்று குற்றம்சாட்டியது வர்மா அறிக்கை, இவர்கள் ஒழுங்காக செயல்பட்டிருந்தால்
ராஜீவ் கொலையைத் தடுத்திருக்க முடியும் என்று கூறியது.

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்கும், தமிழ்நாடு
காங்கிரசுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததால், மரகதம் சந்திரசேகர்,
தமிழக காங்கிரசார் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, தானே ஏற்பாடு
செய்தார் என்றும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தியும், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல்
ஒதுங்கி நின்றார் என்றும் ஆணையம் குற்றம் சாட்டியது. வர்மா விசாரணை
ஆணையத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எவ்வித ஒத்துழைப்பையும் தரவில்லை
என்று கூறிய அந்த பரிந்துரை, “ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டம் நடந்த இடத்தில்
காங்கிரஸ் கட்சிக் காரர்களின் செயல்பாடுகள் எந்தவிதமான ஒழுக்கமும் இல்லாமல்
பொது இடத்துக்குரிய பொறுப்பு இன்றி இருந்தது” என்று கடுமையாக காங்கிரசாரை
இடித்துரைத்தது.

வர்மா அறிக்கை பற்றி பரிசீலிக்க அமைக்கப் பட்ட அமைச்சர்கள் குழு, கடமை தவறிய
சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
கடமை தவறிய நான்கு மூத்த அதிகாரிகளிடம் அமைச்சரவைக் குழு நேரில் விசாரணை நடத்தி
விளக்கம் கேட்டது. உளவுத் துறை தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறை செயலாளர்
ஜி.எஸ். மணிசர்மா, பாதுகாப்புச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய், அமைச்சரவை செயலாளர்
வினோத் பாண்டே ஆகியோர் தான், விசாரணை நடத்தப்பட்ட அதிகாரிகள். ஆனால், இவை
எல்லாமே கண் துடைப்பு நாடகம் தான். வர்மா, பரிந்துரையை சமர்ப்பித்தபோது, இந்த
அதிகாரிகள் பதவியில் இருந்தார்கள். ஆனால், அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற
பிறகே, விசாரணை நடத்தி விளக்கம் கேட்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற பிறகு,
நடவடிக்கை எடுக்க இயலாது என்பதைத் தெரிந்தே, காங்கிரஸ் ஆட்சியினர், இப்படி ஒரு
விசாரணை நாடகத்தை நடத்தினர். உடனடியாக, அந்த நான்கு அதிகாரிகளும், தங்களிடம்
விளக்கம் கேட்கப்பட்டதை எதிர்த்து, மத்திய நிர்வாக மன்றத்திடம் முறையீடு
செய்தனர். ஓய்வு பெற்ற பிறகு, இவர்களிடம் விளக்கம் கேட்பது, முறையற்றது என்று
நிர்வாக மன்றம் தீர்ப்பளித்து விட்டது. ராஜீவ் கொலையில் கடமையை செய்யாமல்
தவறிழைத்த அதிகாரிகளை காங்கிரஸ் ஆட்சியே இப்படி திட்டமிட்டு காப்பாற்றியது.
வர்மா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படை யில் எந்த ஒரு நடவடிக்கையையும்
காங்கிரசாரோ, காங்கிரஸ் ஆட்சியோ இதுவரை எடுக்கவில்லை என்பதோடு
குற்றம்சாட்டப்பட்டவர்களையும் காப்பாற்றி விட்டார்கள்.

ராஜீவ் கொலை நடந்தபோது, இந்தியாவின் உளவுத் துறை இயக்குனராக இருந்தவர் எம்.கே.
நாராயணன். ஜெ.எஸ். வர்மா ஆணையம், தனது அறிக்கையில் எம்.கே. நாராயணன் ‘நம்பகத்
தன்மை’ குறித்து கேள்விகளை எழுப்பியது.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் மீது குண்டு வெடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ
படத்தின் மூலப் பதிவு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இருந்தது போலவே, உளவுத்
துறை இயக்குனர் எம்கே. நாராயணனிடமும் இருந்தது. ஆனால், இந்த வீடியோ மூலப் பதிவை
சிறப்புப் புலனாய்வுக் குழுவும் எம்.கே. நாராயணனும், வர்மா ஆணையத்திடம்
தரவில்லை. தங்களிடம் அப்படி எந்த ஒரு ‘வீடியோ கேசட்டும்’ இல்லை என்றே சிறப்புப்
புலனாய்வுக் குழுத் தலைவர் கார்த்திகேயன், ஆணையத்திடம் கூறி விட்டார் என்று
அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதன் பிறகு, இந்த வீடியோ காட்சிகளில் ஏதேனும்
அழிக்கப்பட் டுள்ளதா என்று வெளிநாட்டு நிபுணர்கள் ஆய்வு செய்து கொண்டிருப்பதாக
கார்த்திகேயன் வர்மா ஆணையத்தில் தெரிவித்து விட்டார். கடைசி வரை அந்த படப்பதிவு
ஆணையத்திடம் தரப்படவில்லை. விசாரணையின் கடைசி அமர்வில்கூட இது பற்றி நீதிபதி
வர்மா கேட்டார். அப்போதும்கூட ஆய்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவே,
ஆணையத் திடம் கார்த்திகேயன் சார்பில் கூறப்பட்டது.

வர்மா ஆணையத்திடம் வழங்கப்பட்ட பிரதி எடுக்கப்பட்ட அந்த வீடியோ பதிவுகளில்
வெடிகுண்டுப் பெண் ராஜீவுக்கு மாலையிட முயன்று வெடிகுண்டை வெடிக்கச் செய்யும்
காட்சிகள் தெளிவின்றி திட்டமிட்டே மங்கலாக்கப்பட் டிருந்தன என்று வர்மா, தனது
பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமான இந்தக் காட்சிகள் மட்டும்
ஏன் மங்கலாக்கப்பட்டன என்ற கேள்வியை நீதிபதி வர்மா எழுப்புகிறார். பாதுகாப்பு
குறைபாடுகள் பற்றி விசாரணை நடத்திய வர்மா, ஆணையத்திடம் வீடியோ கேசட் மூலப்பதிவை
தர மறுத்த அதே சிறப்புப் புலனாய்வுக் குழு, அன்னிய சதி பற்றி விசாரணை நடத்திய
ஜெயின் ஆணை யத்திடம் நான்கு வீடியோ கேசட்டுகளை வழங்கியது. காரணம், பாதுகாப்பு
ஏற்பாடுகளை செய்யத் தவறிய அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள் நோக்கம்
தான். இது தவிர, ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து இறங்கி,
ஸ்ரீபெரும்புதூர் சென்றது வரை எடுக்கப்பட்ட வீடியோ கேசட், தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டியிடம் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப் பாளர்கள், அந்த
வீடியோ பதிவு தங்களிடம் இல்லை என்றும், அதை காவல்துறை கைப்பற்றியிருக்கலாம்
என்றும், வர்மா ஆணையத்திடம் கூறி விட்டனர். ராஜீவுடன் வந்த காங்கிரஸ்காரர்கள்
ஏன் ஸ்ரீபெரும் புதூர் போகவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என்ற
அச்சம்தான் இதற்குக் காரணம். இது குறித்து வர்மா தனது வருத்தத்தைப் பதிவு
செய்துள்ளார். ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ நூலில் அதன் ஆசிரியர் ராஜீவ்
சர்மாவும் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்.

ராஜீவ் படுகொலையில் இறுதி வினாடி வரை, அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு
செய்யப் பட்டதா? கொலை சதிக்கு திட்டமிட்டவர்கள் மீது கேமிரா பார்வை விழுந்ததா?
தாணு மற்றும் சிவராசன் அருகில் யார் யார் நின்றார்கள்? அல்லது அமர்ந்தார்கள்?
கேமிராவில் உள்ள சில பதிவுகளை திட்டமிட்டு மங்கலாக்கியது யார்? இதற்கு ஆணை
யிட்டது யார்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எம்.கே. நாராயணன் பற்றி வர்மா ஆணையம் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும்
குறிப்பிடப்பட வேண்டியதாகும். “ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட் டிருந்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் எம்.கே. நாராயண னுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை
இந்த ஆணையம் உணருகிறது. ஆனால் வெளியே சொல்ல முடியாத காரணங்களால், அவரால் இதற்கு
எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது பற்றி, இன்றைய நாள்வரை எம்.கே.
நாராயணன் வாயை மூடி மவுனம் சாதிக்கிறார். உயர்மட்டத்தில் நடக்கும் இந்தக்
குறைபாடு களுக்கான காரணங்களை கண்டறிந்து, உடனே களைய வேண்டும்” என்று வர்மா
ஆணையம் குறிப்பிடுகிறது. இது குறித்து ராஜிவ் சர்மா, தனது நூலில் பல கேள்விகளை
எழுப்பியுள்ளார்.

“ராஜீவ் உயிருக்கு திட்டவட்டமான அச்சுறுத்தல் உள்ளது என்பதை எம்.கே. நாராயணன்
முன்கூட்டியே தெரிந்திருந்தாரா? அல்லது ராஜீவ் பாதுகாப்புக் குறைபாடுகளை சரி
செய்ய விரும்பினாலும், ‘அதிகார பலம் கொண்ட மேலிட உத்தரவினால்’ அவரால் செயல்பட
முடியாமல் போனதா? ராஜீவ் மரணத்தால், அரசியல் ரீதியாக பயனடைந்தவர்கள் யார்?
ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் மே 20 அன்று அப்போதைய உளவுத் துறையின்
இணை இயக்குனர் எஸ்.கே. தாக்கூர் அனைத்து மாநில காவல்துறை தலைமை
அதிகாரிகளுக்கும், ராஜீவ் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி, ஒரு கடிதம்
எழுதியிருந்தார். அப்படியானால், அடுத்த நாள் ராஜீவ் கொலை நடக்கப் போகிறது
என்பது முன்கூட்டியே தெரியுமா? ஏன் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற
கேள்விகளை அவர் முன் வைக்கிறார்.

1991 இல் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் உள்துறை
செயலாளர் பார்கவா தலைமையில், உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடந்தது. அதில்
உளவுத் துறைத் தலைவர் எம்.கே. நாராயணனும் கலந்து கொண்டார். அப்போது ராஜீவுக்கு
தரப்படும் பாதுகாப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. எனவே எம்.கே. நாராயண னுக்கு,
ராஜீவுக்கு தரப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த எல்லா விவரங்களும் தெரியும்
என்று கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த உள்துறை அமைச்ச கத்தின் இணைச் செயலாளர்
என்.கே. சிங், என்பவர் வர்மா ஆணையத்தின் முன் தெரிவித்தார். ஆனால், அதுபற்றி
தனக்கு எதுவுமே தெரியாது, அப்படி ஒரு கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவே இல்லை
என்று எம்.கே. நாராயணன் மறுத்தார். நீதிபதி வர்மா விடவில்லை. இருவரையும்
எழுத்துப் பூர்வமாக தங்கள் கருத்துகளைக் கூற முடியுமா என்று கேட்டபோது, என்.கே.
சிங், எழுத்துபூர்வமாக அக்கூட்டத்தில் பங்கேற்றது உண்மையே என்று எழுதிக்
கொடுத்தார். எம்.கே. நாராயணன் எழுத்துப் பூர்வமாக தர முன்வரவில்லை. எம்.கே.
நாராயணன், ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு
தனக்குக் கிடைத்த உயர்மட்ட கூட்டத்தின் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வில்லை
என்ற முடிவுக்கு தாம் வந்ததாக வர்மா, தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எம்.கே. நாராயணன், பொய் கூறுவதற்கும் தயங்காத ஒரு மனிதர் என்பதையே, இது
காட்டுகிறது.

இந்திய உளவுத் துறையை கடுமையாக விமர்ச்சிக்கிறது வர்மா அறிக்கை. “உளவுத்
துறையில் அரசியல் தலையீடுகள் மிக சாதுர்யமாக நடக் கின்றன. அதன் செயல்பாடுகள்
புரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு கறை படிந்து கிடக்கின்றன. அதன் நம்பகத்
தன்மை நடைமுறையானாலும், கற்பனையானாலும் மோசமான பாதிப்புக்குள்ளாகி விட்டது.
அரசியல் சார்பு, அடியாட்கள் அச்சுறுத்தல் இல்லாமல், சுதந்திரமான, நேர்மையான
அதிகாரிகளைக் கொண்ட புதிய அமைப்பாக உளவு அமைப்புகள் உருவெடுக்க வேண்டும்” –
என்று வர்மா நெத்தியடியாகக் கூறுகிறார்.

ராஜீவ் கொலையில் ‘அன்னிய சதி’ பற்றி விசாரிக்க காங்கிரஸ் ஆட்சி நியமித்த ஜெயின்
விசாரணை ஆணையத்தின் கதையோ, இதைவிட மிக மோசம்!

1991 ஆகஸ்டு மாதம் இந்த விசாரணை ஆணை யத்தை அமைத்ததே நரசிம்மராவ் தலைமையில்
நடந்த காங்கிரஸ் ஆட்சி தான். காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர்களின்
வற்புறுத்தலினால்தான் அது வந்தது. ஆனால், பெற்ற குழந்தையை தாயே, கழுத்தை
நெறித்து சாகடிப்பது போல், இந்த ஆணையத்தின் செயல்பாட்டையும் காங்கிரஸ் ஆட்சி
முடக்கிப் போடவே துடித்தது.ஜெயின் ஆணையம் எப்படி எல்லாம் காங்கிரஸ் மைதானத்தில்
பந்தாடப்பட்டது என்ற விவரங்கள் அதிர்ச்சித் தரக்கூடியதாகும். “ராஜீவ் கொலையை
மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?” என்று கசிந்துருகி கண்ணீர் வடிக்கும்
காங்கிரஸ் கட்சியினர் இந்த விசாரணை ஆணை யத்தை முடக்கி, ராஜீவ் கொலையில் அன்னிய
சதியை மூடி மறைக்க எடுத்த முயற்சிகள் அதிர்ச்சியூட்டு பவையாகும். அந்த துரோகச்
செயல்பாடுகளை, அப்படியே பட்டியலிட்டுக் காட்டுகிறோம்.

நீதிபதி ஜெயின், தனது விசாரணையைத் தொடங்கு வதற்கு முன்பு, விசாரணைக்கான வரம்பை
நிர்ணயிக்க விரும்பினார். எனவே ஏற்கனவே ஜெ.எஸ். வர்மா, விசாரணை ஆணையத்தை
நியமித்து அரசு பிறப்பித்த மூல அறிக்கை அடங்கிய கோப்பை, உள்துறை அமைச்சகத்திடம்
கேட்டார். ஆனால். அந்த கோப்பே தொலைந்து போய் விட்டதாக அமைச்சகம் கூறிய பதில்,
நீதிபதியை அதிர்ச்சியடையச் செய்து விட்டது.

• நாடாளுமன்றத்தில், அரசின் அலட்சியத்தைக் கண்டித்து உறுப்பினர்கள்
கொந்தளித்தனர். நாடாளுமன்றமே குலுங்கியது. இதைத் தொடர்ந்து காணாமல் போன
கோப்பைத் தேடி கண்டுபிடிக்க கோப்பைத் தேடும் ஒரு ‘சிறப்புப் பிரிவு’
உருவாக்கப்பட்டது.

• கோப்புகளைத் தேடிப் பிடிக்க சிறப்புப் பிரிவு அமைத்த சம்பவம், அநேகமாக இதுவே
முதல் முறையாக இருக்கும். வலை வீசித் தேடக் கிளம்பிய சிறப்புப் பிரிவு பிரதமர்
அமைச்சகம், சட்ட அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்
தேடியும், கோப்பு கிடைக்காத நிலையில், அந்தக் கோப்பைக் கண்டுபிடிக்க
முடியவில்லை என்று நரசிம்மராவ் ஆட்சி அறிக்கை வெளியிட்டது.

• இதனால் ஒரு வருட காலம், ஆணையத்தின் பணி முடங்கியது. பிறகு, முதன்முதலாக பொது
மக்கள் கருத்து கேட்கும் பணியைத் தொடங்க, ஆணையம் முன் வந்தது. அப்போது, மத்திய
அரசின் வழக்கறிஞரே (அட்டர்னி ஜெனரல்) , ஜெயின் ஆணையத்தின் விசாரணை அதிகாரம்
பற்றிக் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வ விளக்கம் தருமாறு சட்ட
அமைச்சகத்திடம் நீதிபதி ஜெயின் கேட்டார்.

• ஆனால், நீதிபதிக்கு பதில் தருவதற்கு, சட்ட அமைச்சகம் எடுத்துக் கொண்ட கால
அவகாசம், மீண்டும் ஒரு வருடம். ஒரு வருடத்துக்குப் பிறகு, சட்ட அமைச்சகம் தந்த
பதிலில் ஏற்கனவே தமிழ் நாட்டில் சி.பி.அய். (சிறப்புப் புலனாய்வுக் குழு)
நடத்திய விசாரணையில் ஜெயின் ஆணையம் தலையிடக் கூடாது என்றும், சி.பி.அய்.
விசாரித்த நபர்களை ஜெயின் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்றும், அதற்கான அதிகாரம்
ஜெயின் ஆணையத்துக்கு இல்லை என்றும் பதில் தந்தது.

• ஜெயின் இதை ஏற்க மறுத்தார். ‘அன்னிய சதி’ பற்றி விசாரிக்கும்போது,
எல்லாவற்றையும் விசாரிக்கும் உரிமை தனக்கு உண்டு என்று 60 பக்கங்களில் விரிவான
ஆணையை ஜெயின் வெளியிட்டார். சி.பி.அய். செய்த தவறுகளை விசாரிக்கவும்,
சி.பி.அய். விசாரணைப் பணிகளை நேரில் பார்வையிடவும், தமக்கு அதிகாரம் உண்டு
என்றார் ஜெயின்.

• ஜெயின், தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய
அரசு, அதுவரை, ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்
என்று கேட்டது. இடைக்காலத் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயின் மறுத்து
விட்டார்.

• இதைத் தொடர்ந்து ஆணையத்தை நீதிமன்றம் வழியாக முடக்கும் முயற்சிகள்
மேற்கொள்ளப் பட்டன. டெல்லியைச் சேர்ந்த முஸ்டாக் அகமது என்ற வழக்கறிஞர் டெல்லி
உயர்நீதிமன்றத்தில், ஜெயின் ஆணையத்தை நியமித்த அரசு ஆணை செல்லாது என்று
‘பொதுநல’ வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ஏற்கனவே, சி.பி.அய். குற்றவாளிகளைக்
கண்டறிந்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டதால், ஜெயின் ஆணையம்,
மீண்டும் குற்றவாளிகளைக் கண்டறிய முற்படுவது நேர் எதிரான விளைவுகளை
உருவாக்கிவிடும். சி.பி.அய். கண்டறிந்தவர்கள் மட்டுமே குற்ற வாளிகள். ஜெயின்
ஆணையம், வேறு குற்ற வாளிகளைக் கண்டறிந்தால், வழக்கு விசாரணையை பாதிக்கும்”
என்று அவர் கோரியிருந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம்,
ஏற்கனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் மற்றும் சி.பி.அய்.
சாட்சிகளை வர்மா ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பிறகு வழக்கை
விசாரித்த உயர்நீதிமன்றம், 1995 நவம்பரில், டெல்லி வழக்கறிஞர் மனுவை தள்ளுபடி
செய்தது, ஜெயின் ஆணையத்தின் விரிவான விசாரணை அதிகாரத்தை உறுதிப் படுத்தியது.

• பதறிப் போன மத்திய காங்கிரஸ் ஆட்சி, முகமூடியைக் கிழித்துக் கொண்டு வெளியே
வந்தது. முஸ்டாக் அகமது என்ற வழக்கறிஞரின் தனி நபர் மனுவை மத்திய அரசே,
உச்சநீதி மன்றத்துக்குக் கொண்டு போனது. ஆக, ஒரு வழக்கறிஞரைப் பிடித்து, தனது
சார்பில், ‘பொது நல’ வழக்கைத் தொடர்ந்ததே, மத்திய அரசு தான் என்ற உண்மை
வெளிச்சத்துக்கு வந்தது. தனி நபர் தொடர்ந்த பொது நலன் வழக்கில் அரசு
மேல்முறையீடு செய்ததை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டது. அதன் பிறகு, மத்திய அரசே
தயாரித்துக் கொடுத்து தனி மனிதர் வழியாக தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவை
திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

• ஜெயின் ஆணையத்தின் விசாரணையில் ராஜீவ் கொலையில் தொடர்புடைய அரசியல்
பிரமுகர்கள் அம்பலமாகி விடுவார்களோ என்று அஞ்சி, அதை முடக்கத் துடித்தது
காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் உறுப்பினர்களின் வலியுறுத்த லால் வேறு வழியின்றி
அமைக்கப்பட்டஜெயின் ஆணையத்தை செயல்படவிடாமல் தடுக்க மேற்கொண்ட கடும் முயற்சிகள்
பலத்த சந்தேகங்களை மக்கள் மன்றத்தில் எழுப்பி நிற்கின்றன.

ஜெயின் ஆணையமோ விரிவான விசாரணையை நடத்தியது. 1987 ஆம் ஆண்டு முதல்
சந்திராசாமியின் சர்வதேச ரகசிய தொடர்புகள், வெளிநாட்டு வங்கிகளில் போட்ட பணம்,
சுப்ரமணியசாமி தொடர்புகள் பற்றி இந்திய உளவுத் துறை தயாரித்து வைத்திருந்த
ஆவணங்கள், ஜெயின் ஆணையத்திடம் வந்து சேர்ந்தன. அந்த ஆவணங்கள் அரசிடம்
சமர்ப்பிக்கப்படாமல் உளவுத் துறை வசமே இருந்தன. 1998 பிப்ரவரியில் ஜெயின்
ஆணையத்தின் செயலாளராக இருந்த டி.ஆர். லுத்ரா, மத்திய உள்துறை செயலாளர் பி.பி.
சிங் என்பவருக்கு அதுவரை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு போகாமல், உளவுத்
துறை, தன் வசம் ரகசியமாக வைத்திருந்த அந்த ஆவணங்களை, அரசுக்கு அனுப்பி
வைத்தார். 1991 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையம் 12 முறை கால நீட்டிப்பு
பெற்றிருந்தாலும், அரசுக்கு புதிய ஆவணங்கள் தரவுகள் கிடைத்துள்ளதால்
சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி, அன்னிய சதிகள் பற்றி கண்டறிய மேலும், ஓராண்டு
கால அவகாசம் தருமாறு ஆணையத்தின் சார்பில் அதன் செயலாளர் டி.ஆர். லுத்ரா அரசிடம்
கேட்டார். அப்போது குஜ்ரால் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி
நடந்து கொண்டிருந்தது.

காங்கிரஸ் குஜ்ரால் ஆட்சியில் பங்கேற்கவில்லை; வெளியிலிருந்து ஆதரவு தந்தது.
காங்கிரஸ் பலத்தை நம்பியே குஜ்ரால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய
நிலை! ஜெயின் ஆணையத்தின் விசாரணகள் தொடருவதை விரும்பாத காங்கிரஸ் தலைமை கால
நீட்டிப்புத் தரவேண்டாம் என்றே குஜ்ரால் ஆட்சியை மிரட்டியது; இல்லாவிட்டால்
ஆதரவைத் திரும்பப் பெற்று ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். எனவே, “கால
நீட்டிப்பு தரஅரசு விரும்பவில்லை; அடுத்த ஏழு நாட்களில் ஆணையம் இறுதி அறிக்கை
தந்தாக வேண்டும்” என்று 1998 பிப்.27 அன்று நள்ளிரவு உள்துறை அமைச்சகம் ஜெயின்
ஆணையத்துக்கு ஆணையிட்டது நீதிபதி ஜெயின் பதறிப் போனார்.

குஜ்ரால் அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நீதிபதி ஜெயினை தொலைபேசியில் அழைத்து,
“ஆணையம் விரிவான அறிக்கை தரத் தேவை யில்லை. மேலோட்டமான அறிக்கையை சமர்ப்
பித்தாலே போதுமானது. மேலோட்டமான அறிக்கை என்பதால் நாடாளுமன்றத்தில் வைக்கத்
தேவையில்லை. அது நேரடியாகவே அமைச் சரவைக்கு வந்து சேர்ந்து விடும். அத்துடன்,
செயல்பாட்டுக்கான அறிக்கையை (action taken Report) சமர்ப்பிக்க வேண்டிய
அவசியமும் இல்லை” என்று கூறினார்.

இறுதி அறிக்கை தயாரிப்பில் பரபரப்பாக இருந்த ஆணையத்தை சி.பி.அய். அதிகாரிகளும்
மிரட்டினர். ஏற்கனவே ஆணையத்தின் அறிக்கை ஊடகங்களில் கசிந்திருந்தன. அவை
காங்கிரசுக்கு எதிராகவே இருந்தன. கசிய விட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று, சி.பி.அய். அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். நீண்ட நேரம்
சி.பி.அய். அதிகாரிகளுக்கும் ஜெயின் ஆணையத் திற்குமிடையே கடும் வாக்குவாதம்
நடந்தது. ஜெயின் ஆணையம் கடும் நெருக்கடிகளை மிரட்டல்களை சந்திக்க
வேண்டியிருந்தது. அறிக்கை தயாரிப்புக்கு எதிராக, நீதிபதிக்கு தொலைபேசி
மிரட்டல்கள் வந்தன. நீதிபதியே உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்த
தொலைபேசி மிரட்டல்களைப் பதிவு செய்தார். இதே நீதிபதி 1997 ஆம் ஆண்டு அப்போதைய
உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவிடம், ஊடகங்கள் புடை சூழ, 2000 பக்க
அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலிருந்து நிர்ப்பந்தத் தால்
சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை முற்றிலும் முரண்பட்டதாகவே இருந்தது.
மிரட்டலுக்கு அஞ்சிய ஜெயின் தனது பரிந்துறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு
உள்ளனார். முதல் அத்தியாயத்தின் முதல் பக்கத்தில் ராஜீவ் காந்தி படத்தை அறிக்கை
தாங்கியிருந்தது. முதல் அத்தியாயம் முழுவதிலும் ராஜீவ் காந்தியின் பெருமைகளையே
ஜெயின் புகழ்ந்து தள்ளியிருந்தார். எந்த ஒரு விசாரணை ஆணையமும், இப்படி, தனிநபர்
புகழ் பாடிய முன் உதாரணங்கள் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் விரும்பியவாறே
அறிக்கை வடிவம் பெற்றது. ஒரு வாரம் கழித்து, நீதிபதி ஜெயின், அவரது சொந்த ஊரான
ஜோத்பூருக்குப் போனார். அங்கே எதிர்பாரத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சோனியா
காந்தி – நீதிபதி இல்லம் தேடி வந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எந்த ஜெயின் ஆணையத்தை கடமையை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ், அலைக் கழித்ததோ, அதே
விசாரணை ஆணையத்துக்கு சோனியாவின் பாராட்டும் நன்றியும் கிடைத்தது. வர்மா
ஆணையத்தின் பரிந்துரை முடக்கப்பட்டது. ஜெயின் ஆணையத்தின் பரிந்துரை மிரட்டலால்
வளைக்கப்பட்டது. இதுவே விசாரணை ஆணையங்களின் சோகமான முடிவு. இதே சோக முடிவைத்
தான் இந்திரா காந்தி கொலையை விசாரிக்க அவரது ‘தவப்புதல்வன்’ ராஜீவ் காந்தியால்
நியமிக்கப்பட்ட தாக்கர் ஆணையமும் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்திரா கொலை பற்றி விசாரிக்க நாடாளுமன்ற விதிகளின் கீழ் தாக்கர் ஆணையம்
நியமிக்கப் பட்டது. ஆணையமும் விசாரணை நடத்தி அறிக்கை தந்தது. ஆனால், பிரதமர்
ராஜீவ் அதை நாடாளு மன்றத்தில் வைக்க மறுத்தார். விசாரணை அறிக்கை யில்
அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவே முயன்றார். விதிகளை சுட்டிக்காட்டி
உறுப்பினர்கள் எதிர்த்தனர். உடனே ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத் தின் விதிகளையே
திருத்தி அறிக்கையை வெளி வராமல் தடுத்தார். ஆனாலும், ஆணையத்தின் முக்கிய
பரிந்துரைகள் ஊடகங்களில் கசிந்துவிட்டன. அந்த செய்திகள் அதிர்ச்சியூட்டு
பவையாகும்.

“இந்திரா கொலையில் அவரது இல்லத்துக் குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன. அரண்மனை
சூழ்ச்சி போன்ற (Palace Intrigue) பெரிய சதிகள் அடங்கியுள்ளன. இந்தக் கொலையில்
இந்திராவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. தவான் மீது சந்தேகம் எழுகிறது.
இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று பரிந்துரை கூறியது. (‘சண்டே’
ஆங்கில வார ஏடு 3.2.1991)

தாக்கர் விசாரணை ஆணையம் குற்றம் சாட்டிய ஆர்.கே. தவான், இந்திராவின் உதவியாளர்.
அவர் மீது எந்த நடவடிக்கையும் காங்கிரஸ் ஆட்சி எடுக்க வில்லை. ராஜீவ் சில காலம்
ஒதுக்கி வைத்திருந்தார். பிறகு சோனியாவின் செல்வாக்கு ஓங்கிய நிலையில் ஆர்.கே.
தவான், டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்
பட்டார். காங்கிரஸ் கட்சி அறிவித்த வேட்பாளர் பட்டியலில் முதலிடம்
பெற்றிருந்ததே ஆர்.கே. தவான் பெயர் தான். அதன் பிறகு, சீத்தாராம் கேசரி
காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில், ஆர்.கே. தவான், காங்கிரஸ் கட்சியின்
செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது இந்திராவின் ‘அரண்மனையில்’ இருந்த
அவரது ஒரே குடும்ப உறுப்பினர் சோனியாதான். அப்படியானால் தாக்கர் கூறிய
அரண்மனைச் சதி என்பதன் பெருள் என்ன? இதற்கும் ஆர்.கே. தவானுக்கும் உள்ள தொடர்பு
என்ன? குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை உயர் பதவியில் உட்கார வைத்து அலங்கரிக்க
வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இந்தக் கேள்விகள் அர்த்தம் பொதிந்தவை.

இந்திரா தனது வீட்டு வளாகத்தில் உள்ள அலுவலகம் வந்தபோது, வழக்கமாக அணியும்
குண்டு துளைக்காத கவசத்தை சம்பவம் நடந்த அன்று அணியாமல் வந்தார். அந்த செய்தி
‘அரண்மனைக்குள்’ இருந்தவர்களால் இந்திரா பாதுகாவலர்களில் ஒருவரான பென்சிங்
என்பவருக்கு தரப்பட்டதால், பாதுகாவலர் வயிற்றைக் குறி பார்த்து சுட்டார் என்று
கூறியது. தாக்கர் ஆணையம்! இந்திராவை சுட்ட அந்தப் பாதுகாவலரை, காவலாளிகள்
உயிருடன் பிடிக்காமல், உடனே சுட்டுக் கொன்று விட்டனர். உண்மைகள் மூடி
மறைக்கப்பட்டுவிட்டன. இந்திரா கொலையில் பொய்யாக வழக்கு தொடரப்பட்டு 5 ஆண்டு
காலம், சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு அரசாலே வழக்கை திரும்பப்
பெறப்பட்டவர் கிம்ரஞ்சித் கிங் மான். பென்சிங்கை சுட்டுக் கொன்றது ஏன் என்ற
கேள்வியை எழுப்பிய அவர், இந்திரா கொலையில் இத்தாலி நாட்டின் தொடர்பு
இருக்கிறது. அப்பாவிகள் தூக்கிலிடப்பட்டு விட்டனர். எனவே மறுவிசாரணை நடத்தப்பட
வேண்டும் என்றார். (‘தி இந்து’ 1.4.1990)

மத்திய காங்கிரஸ் ஆட்சி தனது அதிகாரத்தை உண்மைகளை மூடி மறைத்து குற்றவாளிகளைக்
காப்பாற்றவே முயன்றிருக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பன
சூழ்ச்சி யோடு குலைக்க தொடர்ந்து சதித் திட்டங்களையும், குழி பறிப்புகளையும்
அரங்கேற்றியே வந்திருக்கிறது. இந்த உண்மைகளை நமது தமிழின இளைஞர் களிடம்
விளக்கிடும் முயற்சியே இந்தத் தொடர்!

‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ என்ற நூலை உளவு நிறுவன ‘ஆசியுடன்’ எழுதிய
ராஜிவ் சர்மா விடுதலைப் புலிகள் மீது சுமத்திய வீண் பழிகள் அவதூறுகளுக்கு உரிய
தரவுகளோடு மறுப்பு எழுத வேண்டும் என்று தொடங்கப்பட்ட இந்தத் தொடர், அதன்
எல்லைகளைக் கடந்து, வேறு பல உண்மை களையும் உணர்த்திட முயன்றிருக்கிறது! இந்த
உண்மைகளை தமிழர்களிடம் கொண்டு சென்றால் இந்த கடும் உழைப்பின் நோக்கம்
முழுமையடையும்.

தொடரைத் தொடர்ந்து படித்து உற்சாகமூட்டிய தோழர்களுக்கு நன்றி தெரிவித்து
முடிக்கிறேன்.

(‘புலிகளுக்கு அப்பால்’ நூலை எழுதிய ராஜீவ் சர்மா, விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் மீது களங்கம் சுமத்தி, சேறு வாரி இரைத்தது உண்மை. ஆனாலும்,
புலனாய்வுத் துறை ஆதரவுடன் வெளி வந்த அந்த நூலில் பல ரகசிய ஆவணங்கள்
வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜெயின், வர்மா
ஆணையங்கள் தொடர்பாக பல வெளி வராத செய்திகளை ராஜிவ் சர்மா நூல் பதிவு
செய்துள்ளது. அதிலிருந்தே விசாரணை ஆணை யங்கள் தொடர்பான தரவுகள் இத் தொடரில்
பயன்படுத்தப்பட்டுள்ளன.)

(நிறைவு)

- விடுதலை க.இராசேந்திரன்,

பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

*http://www.periyarthalam.com/2011/09/16/congress-mkr-indragandhi-murd...<http://www.periyarthalam.com/2011/09/16/congress-mkr-indragandhi-murder/>

வியாழன், 17 பிப்ரவரி, 2011

suba.muthukumar murdered: தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை

நேற்று இந்தத்துயரச் செய்தியைப் படித்த பொழுதே நெஞ்சு கனத்தது. நாட்டு நலனில் ஈடுபாடு செலுததும் நல்லிளைஞர்,  இன நலனுக்கெனத் தன்னை இணைத்துக் கொண்ட  இனிய பண்பினர், இல்லறத்தில் ஓராண்டிற்குமுன்தான் அடியெடுத்து வைத்த நல்லறம் பேணுபவர், காட்டு விலங்கினரால் கடித்துக் குதறி மாய்க்கப்பட்டுள்ளாரே! அவரது குடும்பத்தினருக்கும் இயக்கத்தினருக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்கள். ஆனால்,
இந்த  இரங்கல்கள் இறந்தவரை மீள வரச் செய்யாதே! என்ன கொடுமை இது!
இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது எவ்வாறு? எப்போது?  ஈழத்தமிழர்கள உள்ளாக்கப்படும் கொடுமைகளுக்காக உயிர்க்கொடை ஈந்தான் வீரப்போராளி முத்துக்குமார்! இன்றைக்கு வஞ்சகர் செயல்களால்  தன்னுயிர்  ஈகம் செய்தான் இன்னொரு முத்துக்குமார்! முத்துக்குமார்கள் உயிரிழந்தது போதும்! கொடியவர்கள் கூண்டிற்குள் அடைபடும் நாள்  வரட்டும் விரைவில்! வருத்தத்துடனும் துயரத்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை

puzhalfront_muththukkumar001
தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார்.
ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவத்திற்கு தேவையான மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் காட்டில் இருந்தவர்.   இவருக்கு தமிழ் உணர்வாளர்களுடன் அதிக உறவு உண்டு.
இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கரு.காளிமுத்து என்பவரின் மகளை திருமணம் செய்தார்.
சமீபகாலமாக  ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தார்.     சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுவந்தார்.
சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர்.
கடந்த மாதத்தில் சீமான் உயிருக்கு சிலர் குறி வைத்திருப்பது தெரிந்ததும்,  சீமானுக்கு  பலத்த பாதுகாப்பு பணியை செய்து வந்ததும் முத்துக்குமார்தான்.
இந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்

புதன், 9 பிப்ரவரி, 2011

murder by embassy officer - america stops the pak.programme: தூதரக அதிகாரி விவகாரம்: பாக். நிகழ்ச்சிகளை அமெரி்க்கா நிறுத்திவைப்பு

தன் நாட்டுக் குடிமகன் கொலைக் குற்றம் செய்தாலும் அவன் பக்கம் நிற்கிறது அமெரிக்க அரசாங்கம். அப்படியானால் ௧௦௦ ஆயிரக்கணக்கான படுகொலைகள் புரிந்த துடன் தமிழ் மீனவர்கள் படுகொலைகள் புரிகின்ற சிங்களர்களுக்குச் சார்பாக  இந்திய அரசும் நிற்கிறது. அப்படியானால் இந்திய அரசு என்பது சிங்களவர்களுக்கானது என்பது நன்கு புரிகின்றது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தூதரக அதிகாரி விவகாரம்: பாக். நிகழ்ச்சிகளை அமெரி்க்கா நிறுத்திவைப்பு


இஸ்லாமாபாத், பிப்.8- பாகிஸ்தானில் இருவரை சுட்டுக் கொன்ற தூதரக அதிகாரியை விடுதலை செய்யும் வரை அந்நாட்டுடனான அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இந்த முடிவால், பாக். அதிபர் ஜர்தாரியின் அமெரிக்கப் பயணம், அமெரிக்கா-பாக். இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, பாக்.-ஆப்கன்-அமெரிக்கா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆகியவை பாதிக்கப்படும்.ஜனவரி 27-ம் தேதி லாகூரில் இரு பாகிஸ்தானியர்களை அமெரிக்கத் தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து, அவரை பாக். போலீஸார் கைது செய்தனர்.ஆனால், அவர் தூதரக பாஸ்போர்ட் உடையவர் என்பதால் ரேமண்டை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியது. இதற்கு பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளவில்லை. அவரை எங்கள் நாட்டின் சட்டப்படி தான் விசாரிப்போம் என்று பதில் தெரிவித்தது.அமெரிக்க அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டில் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனிடையே, ரேமண்ட் டேவிஸ் மற்றும் 3 அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.இந்நிலையில், தூதரக அதிகாரி விடுதலை செய்யப்படும் வரை பாகிஸ்தானுடனான நிகழ்வுகளை ரத்து செய்வதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 23 டிசம்பர், 2010

karuna is responsdible for the murder of 600 policemen : 600 காவல்துறையினர் கொலைக்குக் கருணாவே பொறுப்பு: இலங்கை அதிகாரி

அப்படி என்றால் அதற்குக் காரணமான கருணாவைப் பிடித்துத் தூக்கிலிடுங்கள். தமிழர்கள், சிங்களர்கள் இரு தரப்பாரின் உள்ளங்களும் குளிரும். வஞ்சகனுக்குக் கிடைக்கும் தண்டனையால் நீதித் தேவதை மனம் மகிழ்வாள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

600 போலீஸார் கொலைக்கு கருணாவே பொறுப்பு: இலங்கை அதிகாரி

First Published : 22 Dec 2010 03:30:35 PM IST

Last Updated : 22 Dec 2010 03:34:50 PM IST

கொழும்பு, டிச.22- விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 போலீஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அந்த அமைப்பின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான கருணாதான் காரணம் என்று இலங்கை காவல்துறை அதிகாரி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.1990-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என்றும், அச்சம்பவத்துக்கு புலிகள் தலைவர் பிரபாகரனும் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்தான் காரணம் என்றும் கருணா கூறியிருந்தார். ஆனால், அதற்கு கருணாதான் முழுப் பொறுப்பு என்று பொத்துவில் மஹாகலுகொல்ல காவல் நிலையத்தின் அப்போதைய பொறுப்பு அதிகாரியாக இருந்த அஜித் தர்மபால என்பவர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."அம்பாறை பஸ் நிலையத்திற்கு, விடுதலைப் புலிகளால் நிராயுதபாணியாக 600 போலீஸார் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். ஆனால், போலீஸார் அனைவரும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு கருணாதான் உத்தரவிட்டுள்ளார். இதற்கு போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன." என்று அஜித் தர்மபால கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.