செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதம்சென்னையில்நடைபெறுகிறது.

இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதம்: இ.மா.தே.ச.





http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=80339
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை ஏராளமான இயக்கங்கள் மூலமாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாராவ் மஹாலில் நடைபெறுகிறது. மாநாட்டை எங்கள் அமைப்பின் அகில இந்திய தலைவர் அருணா ராய் தொடங்கி வைக்கிறார்.

மாநாடு நாளை (புதன்கிழமை) தொடங்கி 11-ந் தேதி (சனிக்கிழமை) வரை 4 நாட்கள் நடைபெறும். இதில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டு கொடியை ஏந்தி பாட்னாவில் இருந்து சீருடை அணிந்த 50 இளம்பெண்கள் ஊர்வலமாக ரெயிலில் சென்னை வருகிறார்கள். மாநாட்டில் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் அதிகரித்து வருகிறது. உணவுக்கு உத்திரவாதச் சட்டம் கொண்டு வரவேண்டும். பொது நவீன பொருளாதார கொள்கை, கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்படுகிறது. இது அனைத்து மாநில பிரதிநிதிகள் மூலம் அந்தந்த மாநிலங்களை சென்றடையும். 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் அலசி ஆராயப்படுகிறது.

மாநாட்டின் ஒரு பகுதியாக 9-ந் தேதி ஒரு முக்கிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், இலங்கையில் நடைபெற்ற போர் கொடுமையில் கணவனை தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த பிரச்சினை பற்றி பிரேசிலில் நடைபெற்ற மாதர் தேசிய சம்மேளனத்தில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹரியானா மாநிலத்தை ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண் சிசுக் கொலை என்பது மிகமிகக் குறைவுதான். தேசிய அளவில் தற்போது வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஆனிராஜா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக