சொல்கிறார்கள்
நரம்பியல் மருத்துவர் விஜயன்:
மூளையில் அதிக அளவில், "அமினாய்டு' புரதம் சுரப்பதாலேயே, "அல்சீமர்' எனும்
மறதி நோய் வருகிறது. பொதுவாக, அதிகப்படியான அமினாய்டு புரதத்தை, முதுகுத்
தண்டுவடம் வெளியேற்றி விடும். அதாவது, முதுகுத் தண்டிலிருந்து திரவத்தை
எடுத்து ஆராய்ந்து, அதில், அதிக அளவு திரவம் இருந்தால், மூளையிலிருந்து
கூடுதலான அமினாய்டு புரதம் இயல்பாக வெளியேறுகிறது என்று தெரிந்து
கொள்ளலாம். 30 அல்லது 40 வயதில் எவ்வளவு அமினாய்டு புரதம் முதுகுத்
தண்டுவடத்தில் இருக்க வேண்டுமோ, அதைவிடக் குறைவாக இருந்தால், மூளையில்
கூடுதல் திரவம் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். நச்சுத் தன்மையுடைய
இந்தப் புரதம், நரம்பு செல்களைப் பாதித்து மறதியை ஏற்படுத்தும். மரபியல்
காரணங்களால், மறதி நோய் வருபவர்கள், வெறும், 10 சதவீதம் தான். சர்க்கரை
நோய், அதிகக் கொழுப்பு, புகை பிடித்தல், சீரான ரத்த ஓட்டமின்மை போன்ற வேறு
காரணங்களால் வரும் மரபு நோயை, முன் கூட்டியே தெரிந்து, கவனமாக இருப்பதற்கு,
ஆராய்ச்சிகள் எந்த அளவு உதவும் என்று, இப்போது கூற முடியாது. நினைவாற்றல்
சோதனை மூலம், அல்சீமரை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் முறை, தற்போது
நடைமுறையில் உள்ளது. இதன் மூலம், நோய் வருமா என்பதை, ஐந்து ஆண்டுகளுக்கு
முன் கணிக்க முடியும். அதே நேரத்தில், மூளையில் சேரும் அதிகப்படியான
அமினாய்டு புரதத்தை, மருந்துகள் உதவியுடன் கரைக்கும் முயற்சி, சோதனை அளவில்
உள்ளது. இந்த மருந்துகள் நடைமுறைக்கு வருவதற்கு, குறைந்தது, 10 ஆண்டுகள்
ஆகலாம். அதுவரை, மறதி நோய் வரும் அபாயம் இருப்பவர்கள், குறிப்பிட்ட
இடைவெளியில், கவனமாக பரிசோதித்துக் கொள்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக