தீபச்செல்வனுக்கு ச் சிறந்த ஊடகவியலாளர் விருது
ஈழக்
கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு நெருக்கடிச் சூழலில் செய்தி
சேகரித்தமைக்கான 2011ஆம் சிறந்த ஊடகவியலாளர் விருதை இலங்கை பத்திரிகை
ஸ்தாபனம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் மவுனட்லெனியா விடுதியில்
நடந்த 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்தரிகையாளர் விருது வழங்கும்
நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.
வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக செயற்பட்டவர். யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை மற்றும் வளநிலையத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.
ஈழத் தமிழ் மக்களின் போராட்டக் குரலாக பரவலான கவனத்தை பெற்ற கவிதைகளை எழுதிய தீபச்செல்வன் தன்னுடைய கட்டுரைகள் மூலம் போருக்குப் பிந்தைய மக்களின் வாழ்க்கையையும் நிலத்திற்குப் போராடும் மக்களின் உணர்வுகளையும் தொடர்ச்சியாக குளோபல் தமிழ்ச் செய்திகள் உட்பட பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகின்றார்.
தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலை கல்வி கற்று வரும் தீபச்செல்வன் கடந்த ஆண்டு 2010ஆம் ஆண்டுக்கான விருதுகளில் நெருக்கடி சூழலில் இயங்கியமைக்கும் புகைப்படத்துறைக்குமான சிறந்த ஊடகவியலார் விருதுகளைப் பெற்றவர்.
இதுவரையில் நான்கு கவிதை நூல்களையும் இரண்டு கட்டுரை தொகுதிகளையும் எழுதியுள்ள இவர் மரணத்தில் துளிர்க்கும் கனவு என்ற ஈழக் கவிஞர்கள் கவிதைத் தொகுப்பையும் தொகுத்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக