திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மாணவியின் உடல் உறுப்புகள் தானம்



சேலம் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
சேலம், ஆக. 6-
 
சேலம் அழகாபுரம் கான்வென்ட் ரோடு மிட்டாபுதூரை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு 2 மகள்கள். இவர்களது மூத்த மகள் ஜஸ்வர்யா (21). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது தோழி பவித்ரா (21) வுடன் மொபட்டில் உடையாப்பட்டி பைபாசில் சென்றார்.
 
அப்போது அவர்கள் நாமமலை அடிவாரம் அருகே வந்த போது எதிரே வந்த டாரஸ் லாரியின் முன்பக்க சக்கரம் கழன்று மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவிகள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.  
 
இதையடுத்து அவர்களை அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஐஸ்வர்யாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அப்போது மாணவி ஐஸ்வர்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
 
இதையடுத்து அவரது பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து மாணவி ஐஸ்வர்யா சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  
 
அங்கு மாணவி ஐஸ்வர்யாவின் கல்லீரல், கிட்னி, இதய வால்வுகள், மற்றும் கண்கள் ஆகியவை தானமாக எடுக்கப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று பிற்பகல் சேலம் கொண்டு வரப்படுகிறது.
 
இதுகுறித்த மாணவி ஐஸ்வர்யாவின் பெற்றோர் கூறியதாவது:-
 
எங்களது அன்பு மகள் இறந்து விட்டாலும், அவள் மூலம் 4 பேர் உயிர் வாழ்கிறது. அவள் மறைந்தாலும் 4 பேரின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளாள் என்று கண்ணீர் பொங்க கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக