தற்போதைய செய்திகள்
மேரி கோம் : வென்றது வெண்கலம்,
மனமோ தங்கம்
தினமணி : First Published : 09 Aug 2012 05:59:39 PM IST
இம்பால்,
ஆக., 09 : குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை
மேரி கோம், தான் ஒலிம்பிக்கில் வெள்ளி அல்லது தங்கப் பதக்கம் வெல்லாதது
குறித்து நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.ஆனால் அவர் மன்னிப்புக் கோர எந்த அவசியமும் இருக்கவில்லை என்பது அவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.தனது
வீட்டில் சுமார் 40 மாணவ, மாணவிகளுக்கு குத்துச்சண்டை பயிற்சியை இலவசமாக
அளித்து வருகிறார் மேரி கோம். உணவு, தங்கும் இடம் என அனைத்தும் இலவசம்.
குத்துச் சண்டையில் ஆர்வமுள்ள மேரி கோம், ஒலிம்பிக் என்ற உச்சத்தை அடைய
அதிக சிரமப்பட்டார். ஆனால், தன்னைப் போல குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள ஏழைக்
குழந்தைகள் அவ்வளவு சிரமப்படக் கூடாது என்பதால் ஒரு அகாடமியை உருவாக்கி
இலவசமாக குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறார். மாணவிகளை தனது
வீட்டிலேயே தங்க வைத்துள்ள மேரி கோம், மாணவர்களை அருகில் வாடகை வீட்டில்
தங்க வைத்து பயிற்சி அளித்து வருகிறார்.இவர் வென்றது வெண்கலமாக இருந்தாலும், இவரது மாணவர்கள் நிச்சயம் தங்கம் வெல்வார்கள் என்று நம்புவோம்.
8/9/2012 9:45:00 PM
8/9/2012 9:45:00 PM
8/9/2012 6:54:00 PM