௧. வரவேற்கத்தக்க நலல முடிவு. ௨. செல்வாக்குள்ளவர் பட்டியலில் இடம்பெறக் குறுக்குவழியை அவர் நாடியிருக்க வேண்டா.உருவாவது நல்லவர் பட்டியலன்று. உண்மையிலேயே வஞ்சகர்களிடம் செல்வாக்கு இருப்பதால்தான் அவர்கள் ஆதரவுடன் இனப்படுகொலையைச் செய்த பின்பும் அதனைத் தொடர்ந்து வருகிறார். எனவே, செல்வாக்கு உள்ளவர்தான். ஆனால் மக்களிடையே செல்வாக்கு அற்றவர்;ஆன்றோர்களிடையே செல்வாக்கு அற்றவர்; சான்றோர்களிடையே செல்வாக்கு அற்றவர்;உலக மக்களிடையே செல்வாக்கு அற்றவர். அவரது கெட்ட காலம் தொடங்கி விட்டது. இனி போர்க்குற்றங்களுக்காகவும் இனப் படுகொலைகளுக்காகவும் உரிய தண்டனையைப் பெறுவார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கொழும்பு, ஏப்.22- உலகின் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இருந்து இலங்கை அதிபர் ராஜபட்சவின் பெயரை டைம்ஸ் பத்திரிகை திடீரென நீக்கியுள்ளது.வாசகர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில், அந்த பட்டியலில் அவரது பெயர் இதுவரை 4-ம் இடத்தில் இருந்தது.இந்நிலையில், அந்த வாக்கெடுப்பில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதற்கான பணியில் அதிபர் ராஜபட்சவின் ஊடகப்பிரிவு அலுவலகத்தில் தனிக் குழு ஒன்று செயல்பட்டதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இதனிடேயே போலி வாக்குகள் மூலம் ராஜபட்சவின் பெயர் முன்னணிக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், இன்று காலை பட்டியலில் இருந்தே அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழு எடுத்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் பிரபலமான பத்திரிகையின் பட்டியலில் ராஜபட்ச பெயரை முன்னணியில் இடம்பெறச் செய்ய அதிபரின் ஊடக அலுவலகமே மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் பட்டியலில் இருந்து பெயரை நீக்கவில்லையே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
பதிலளிநீக்கு