இப் பொ்ருண்மையில் முதன்மைக்கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றுமே பேசாமல் அமைதி காப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க. காங்.கின் ஒப்புதல் இன்றி வாய் திறக்க முடியாது. காங். கே கொடூரக் கொலைகளுக்கெல்லாம் வித்தாய் விழுதாய் ஊன்றுகோலாய், துணையாய், இருப்பமையயால் அதனால் ஒன்றும் சொல்ல இயலாது. அ.தி.மு.க. இப்பொழுதாவது தன்னுடைய அமைதியைக் கலைத்தது வரவேற்கத்தக்கது. இன நல அடிப்படையிலோ மனித நேய அடிப்படையிலோ இல்லாவிட்டாலும் கட்சி நலன் அடிப்படையிலாவது அக்கட்சி இதனைப் பெருமளவில் பரப்ப வேண்டும். அ.தி.மு.க இதனை அனைத்து இந்திய அளவில் பரப்புரை மேற்கொண்டு காங்.கைக் கவிழ்த்து சிங்களத்திற்கும் துணைநின்றவர்களுக்கும் தண்டனை கிடைக்கச் செய்து மத்திய அரசு தமிழ் ஈழத்திற்கு ஏற்பிசைவு வழங்கச் செய்ய வேண்டும். கடந்தகாலச் செயல்களுக்குக் கழுவாயாகவும் அமையும். நல்ல எதிர்காலம் அக்கட்சிக்கும் தமிழர்களுக்கும் அமையும் வாய்ப்பாகவும் அமையும். எனவே, அறிக்கையுடன் நின்றுவிடாது
அனைத்து இந்திய அளவிலும் பன்னாட்டுத் தூதர்கள் அளவிலும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும். தீவினை விதைத்தவர்கள் தீவினையை விரைவிலேயே துய்க்க வேண்டும்.
அனைத்து இந்திய அளவிலும் பன்னாட்டுத் தூதர்கள் அளவிலும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும். தீவினை விதைத்தவர்கள் தீவினையை விரைவிலேயே துய்க்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, ஏப்.22: இனப் படுகொலை நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெளிவாகக் கூறுவதால் இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் அவருடைய சகாக்களின் போர்க்குற்றங்களை விசாரிக்கும்வகையில் அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி. இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இது போன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் ஆளாகி உள்ள இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து, இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது!இலங்கை ராணுவத்திற்கும், எல்டிடிஈ-க்கும் இடையேயான போர் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, 27.4.2009 அன்று கருணாநிதி தன்னுடைய காலை உணவை முடித்துவிட்டு, இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி விட்டதாக அறிவித்தார். உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று மணி நேரத்திற்குள், தமிழர்களுக்கு எதிரான ஆயுதத் தாக்குதலை இலங்கை நிறுத்திக் கொண்டுவிட்டதாக தம்மிடம் இலங்கை அரசு தெரிவித்தது என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். உடனே கருணாநிதி மதிய உணவிற்காக வீடு திரும்பிவிட்டார்.ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை ராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த இளைஞரின் பிணம், இதே போன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டிவிடப்பட்டது. இந்தக் கொடூர காட்சிகளை பல இந்திய தொலைக்காட்சி சேனல்களும் ஒளிபரப்பின.இந்த கொடுஞ் செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தன்னுடைய மகள் கனிமொழி உள்பட தி.முக., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி. பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர்.என்னதான் கருணாநிதி நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன. தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்துமீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள். 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை ராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவித் தமிழர்கள் மாண்டு போவதற்கு காரணமாக இருந்தது. இதன் மூலம் வன்னிப் பகுதி மக்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை இலங்கை ராணுவம் கொடுத்தது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் குண்டு மழை பொழிவிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். ஊடகங்கள் மற்றும் போர் விமர்சகர்களை பயமுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையிலும், வெள்ளை வாகனங்களில் மக்களை கடத்துவது, மறைத்து வைப்பது உட்பட பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கையாண்டது.குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் தொடர்ச்சியான மூன்று இடங்களில் இலங்கை அரசு மிகப் பெரிய அளவில் குண்டு மழை பொழிந்திருக்கிறது ... மருத்துவமனைகள் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு இருக்கின்றன. வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் பீரங்கிகளால் தாக்கப்பட்டு இருக்கின்றன. மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் சில மருத்துவமனைகள் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டிருக்கின்றன. போர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தடுத்து அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இதன் மூலம் போர் பகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை, மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர்." ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை பட்டியலிட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை போர் முடிவிற்கு வந்துவிட்டது என்று கூறி 27.4.2009 அன்று தனது மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை கருணாநிதி முடித்துக் கொண்டதற்குப் பிறகும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை இனப் படுகொலைகள் நடந்துள்ளன என்று தெளிவாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது! இதன் மூலம் தமிழினப் பாதுகாவலர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதியின் வேஷம் கலைக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப் படுகொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த கருணாநிதி பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ராஜபட்ச மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்கை குறித்து சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள் வாய்மையற்றவை என்றாகிவிடும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதற்கு வழி வகுக்கும்.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்துகள்
அம்மா தாயே போர் நடக்கும் பொது என்ன கூறினீர்கள் . போர் என்றால் பொது மக்கள் சாகத்தான் வேண்டும். பெண்கள் கற்பு suraiyadthan செய்வார்கள். என கூறியது நினைவு இல்லையா. அல்லது ராஜீவ் காந்தி படு கொலைக்கு பிறகு சட்டசபையில் பிரபாகரனை கைது செய்து தூக்கில் இடவேண்டும் என தீர்மானம் போட்டது நினைவு இல்லையா. ராஜீவ் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம் என பிரபாகரன் கூறி மன்னிப்பு கோரிய பிறகும் தீர்மானம் போட்டது மறந்து விட்டதா. போர் நடந்த பொது இலங்கை தமிழர்களின் நலனைவிட தி மு கவை காங்கிரஸ் இடம் இருந்து பிரித்து தி மு க ஆட்சியை கலைப்பது தானே உங்கள் ஆசையை இருந்தது. அப்படி ஒன்று நடந்து இருந்தால் இன்று நீங்கள் காங்கிரஸ் கூடனியில் இருந்து இர்பிர்கள் என்பதுதானே உண்மை. உங்களுக்கும் சரி karunanithukum சரி உங்கள்ளுக்கு தேவை ஆட்சி அதிகாரம் . எப்படி வேண்டுமானாலும் பேசும் இர்ரடை நாக்கு உள்ளவர்கள். போதும் தாயே உங்கள் நடிப்பு.
By pothujanam
4/22/2011 9:24:00 PM
4/22/2011 9:24:00 PM
Jeya is enjoying lesbian fun with Sasi in the cool comfort at Kodanadu. why Dinamani is trying to project her as a hard working politician, everyday putting her photo in the front page and publishing her useles statements - written by somebody? Is Dinamani thinking its readers are only brahmins? Soon Dinamani has to close its business.
By jamil
4/22/2011 9:15:00 PM
4/22/2011 9:15:00 PM
தமிழர்களை கொன்று குவித்து முடிந்து விட்டது. இலங்கை அரசு தான் நீண்ட நாளை நினைத்ததை செய்து விட்டது. தமிழர்கள் இறந்து விட்டனர். அவர்கள் மீண்டும் எழ போவதில்லை. இனி யாரை தண்டித்து என்ன பிரயோஜனம். நாம் மன்னித்து விட்டு விடலாம். கடவுள் இதை பார்த்து கொள்வார். கடல் கடந்து சென்று இலங்கையில் குடியேறிய நம் சகோதரர்கள் இப்போது இல்லை. இவ்வுலகத்தில். ஜெயப்ரகாஷ், சிவகாசி.
By JEYAPRAKASH.
4/22/2011 8:52:00 PM
4/22/2011 8:52:00 PM
தண்டிக்கபட வேண்டியது இராஜபக்சே மட்டும் அல்ல, போருக்கு துணைபோன இந்திய அரசாங்கமும் தான். இந்திய அரசாங்கம் என்றால் இந்தியாவை நிர்வாகிக்கும் பிரதமரும், மறைமுகமாக ஆணையிட்ட சோனியா என்ற விதேசியும் தான். இத்தாலிகாரிக்கு தமிழர்களின் உயிர், மயிருக்கு சமம். தமிழ் பொது மக்களை எப்படி வாழ விடுவது? நாம் கொடுத்த வரிப்பணத்தில் ஆயுதங்களை வாங்கி நம் இனத்தையே அழித்து விட்டால் சண்டாளி. கேடு கெட்ட தமிழர்களே!!!!!! மீண்டும் அவளுக்கே ஓட்டுப் போட்டு, இருக்கிற தமிழக மக்களையும் அழித்துவிட உதவிடுங்கள்.... என்ன வெட்ககேடான விஷயம்!!! இந்தியாவில் இத்தாலிகாரியை விட்டால் வேறு யாருக்கும் தலைவர் ஆகும் தகுதியில்லையா ? 120 கோடி இந்திய மக்களும் முட்டள்களா? டெண்டுல்கர் சிக்ஸ் அடித்தால், இரவு முழுதும் வீதியில் ஆட்டம் போடும் தமிழ் இளைங்கர்களே, தமிழர்களை கொல்லும்போது என்னடா செய்துகொண்டிருந்தீர்கள் ? ஏன் வீதியில் இறங்கிபோராடவில்லை. என் போன்ற நாம் தமிழர், வைகோ, பழ.நெடுமாறன் ஐயா,........போன்றவர்கள்தான் சிறை சென்றோம்.. ஜெயாவுக்கு கூட தமிழர்கள் மேல் அக்கறை திடிரென வந்து விட்டது....நமக்கு ?????
By sathya
4/22/2011 8:46:00 PM
4/22/2011 8:46:00 PM
பாரபட்சம் இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம். இலங்கையில் மனித உரிமை மீறல் நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்ற ராசபட்சை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனை வாங்கி தருவோம். ~முருகன் சுப்பராயன் தனசெல்வன் நஞ்சுண்டாபுரம் இளவரசன் மும்பை
By மும்பை நண்பர்கள்
4/22/2011 8:01:00 PM
4/22/2011 8:01:00 PM
prabakaranai kaidhu seyya vendum,raja bakshevai muchandhiyila nirutha vendum.Idhu yenna ayirathil oruvan pada shooting nadakkudha. neenga irukkura idam kodanaadu estate adhuvum oru rubai sambalathula vaangunadhu. Unga kamedikku alavey illiya
By Murugan
4/22/2011 7:46:00 PM
4/22/2011 7:46:00 PM
This Jaya is 100% Chameleon (பட்சொந்தி) she change her color according to the circumstance.
By pugazhendhi s
4/22/2011 7:22:00 PM
4/22/2011 7:22:00 PM
ஜெயாவின் இந்த அறிக்கை பாராட்டுக்குறியது.அகில இந்திய அளவில் கூட ஜெயலலிதா காங்கிரஸ் எதிர்ப்பு அணியில் நிலையாக இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.ஏனெனில் மன்மோகன் சிங்கின் இந்த ஆட்சி காலம் இந்தியாவில் நடைபெற்ற ஆட்சிகளில் மிகவும் ஊழல் மிகுந்த ஆட்சி என பெயர் வாங்க போகிறது..
By வல்லம் தமிழ்
4/22/2011 7:20:00 PM
4/22/2011 7:20:00 PM
ஜாபர் , யுத்தத்தில் மக்கள் சாவது சாதாரணம் என்றால் , கார்கில் பகுதியில் பாகிஸ்தான் குண்டு போட்டு இந்திய குடிமகன் இறக்கும் பொழுது நீங்கள் அதை எப்படி பார்ப்பீர்கள் ? ஜாபர் ஒரு கருத்தை சொல்லும் பொழுது மிக அவதானமாக தெரிவிக்க வேண்டும் , பக்க சார்பு இல்லாமல் தெரிவிக்க வேண்டும் , உமக்கு விடுதலை புலிகள் மீது கோவம் இருக்கலாம் , அனால் மக்கள் மீது இருக்க கூடாது , மனித நேயம் முதலில் தேவை , சுயநலம் இருக்க கூடாது , இந்த உலகில் ஒரு சாதாரண மனிதன் இறந்தால் அது மன்னிக்க முடியாது , அது இந்தியனாகவோ அல்லது பாகிஸ்தான் ஆகவோ பார்க்க கூடாது , மனிதனை பாருங்கள் . இப்படி எல்லாம் கருத்தை தெரிவித்து விட்டு உம்மால் எப்படி சாதாரண மனிதனாக இருக்க முடியும் , என் தனிப்பட பார்வைக்கு நீர் ஒரு துவேசம் உள்ளவராகவே பார்கிறேன்.
By மனிதநேயன்
4/22/2011 7:17:00 PM
4/22/2011 7:17:00 PM
testing
By P .Padmanaabhan
4/22/2011 7:17:00 PM
4/22/2011 7:17:00 PM
நான் ஒரு இந்தியன் என சொல்ல வெட்க படுகிறேன் !!! இந்த கொலையில் இந்தியா பங்கு என்ன என்று சொல்ல வேண்டும் !!!
By ராம் Sethuraman
4/22/2011 6:59:00 PM
4/22/2011 6:59:00 PM
Sri Lankan Govt and President must be awarded for completely wipped out the International TERRORISM. Jai Rajapakshe.
By Maran
4/22/2011 6:53:00 PM
4/22/2011 6:53:00 PM
இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துதான் சரி !!!! இனி இலங்கை தமிழர்களின் நலன்களை எப்படி பாதுகாப்பது ,போர் குற்றவாளிகளை எப்படி தண்டிப்பது என்றுதான் பார்க்க வேண்டுமேதவிர ,"" இதுவரை நீ என்ன செய்தாய் ? இப்போதுதான் உனக்கு ஞாபகம் வந்ததா ? "" என்றெல்லாம் கேட்பதில் ஒரு பயனும் இல்லை .தமிழ் இன துரோகிகள கூண்டில் ஏற்றி ,தண்டனை வழங்க வேண்டும் .
By எல் சி நாதன்
4/22/2011 6:37:00 PM
4/22/2011 6:37:00 PM
நான் ஒரு இந்தியன் என சொல்ல வெட்க படுகிறேன் !!! இந்த கொலையில் இந்தியா பங்கு என்ன என்று சொல்ல வேண்டும் !!!
By ராம் Sethuraman
4/22/2011 6:35:00 PM
4/22/2011 6:35:00 PM
நான் ஒரு இந்தியன் என சொல்ல வெட்க படுகிறேன் !!! இந்த கொலையில் இந்தியா பங்கு என்ன என்று சொல்ல வேண்டும் !!!
By ராம் Sethuraman
4/22/2011 6:34:00 PM
4/22/2011 6:34:00 PM
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு இது ந்யுட்டனின் விதி அல்ல இறைவனின் விதி
By senthil
4/22/2011 6:26:00 PM
4/22/2011 6:26:00 PM
பழசை மறந்து யார் குத்தினாலும் அரிசி வந்தால் போதும் என்ற நிலை தமிலல்ருகு நல்லது.
By ராம் Chetty
4/22/2011 6:12:00 PM
4/22/2011 6:12:00 PM
என்னது காங்கிரசுடன் கூட்டணி இல்லையா.யெஹ் பன்னீரு இலங்கைதமிழருக்கு ஆதரவா அறிக்கை விடு,காங்கிரஸ் காரங்க தான வருவாங்க............................??????????????????????????????????????
By grh
4/22/2011 6:10:00 PM
4/22/2011 6:10:00 PM
SUDDENLY JAYAS COLOUR IS CHANGEING!NOW SHE STARTED LOVING TAMILS TOO!
By RAVISHANKER
4/22/2011 5:40:00 PM
4/22/2011 5:40:00 PM
migavum nandri. ithanai andu arasialil neegal kodutha mudal varaltru mukizatuvam vayntha itha arikkaaikku ulaga thamizar sarbil mikka nandri sagothari
By selva
4/22/2011 4:57:00 PM
4/22/2011 4:57:00 PM
அம்மணி இத்தனை நாளாக எங்கே போனீங்க ? உங்க இனப்பற்று புல்லரிக்க செயுது. போரின்போது ஒரு வார்த்தை கூட பேசாத ஆள் தானே நீங்கள். உங்களை கூட நாங்கள் நம்பவில்லை
By Ravichandran
4/22/2011 4:50:00 PM
4/22/2011 4:50:00 PM
இப் பொ்ருண்மையில் முதன்மைக்கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றுமே பேசாமல் அமைதி காப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க. காங்.கின் ஒப்புதல் இன்றி வாய் திறக்க முடியாது. காங். கே கொடூரக் கொலைகளுக்கெல்லாம் வித்தாய் விழுதாய் ஊன்றுகோலாய், துணையாய், இருப்பமையயால் அதனால் ஒன்றும் சொல்ல இயலாது. அ.தி.மு.க. இப்பொழுதாவது தன்னுடைய அமைதியைக் கலைத்தது வரவேற்கத்தக்கது. இன நல அடிப்படையிலோ மனித நேய அடிப்படையிலோ இல்லாவிட்டாலும் கட்சி நலன் அடிப்படையிலாவது அக்கட்சி இதனைப் பெருமளவில் பரப்ப வேண்டும். அ.தி.மு.க இதனை அனைத்து இந்திய அளவில் பரப்புரை மேற்கொண்டு காங்.கைக் கவிழ்த்து சிங்களத்திற்கும் துணைநின்றவர்களுக்கும் தண்டனை கிடைக்கச் செய்து மத்திய அரசு தமிழ் ஈழத்திற்கு ஏற்பிசைவு வழங்கச் செய்ய வேண்டும். கடந்தகாலச் செயல்களுக்குக் கழுவாயாகவும் அமையும். நல்ல எதிர்காலம் அக்கட்சிக்கும் தமிழர்களுக்கும் அமையும் வாய்ப்பாகவும் அமையும். எனவே, அறிக்கையுடன் நின்றுவிடாது அனைத்து இந்திய அளவிலும் பன்னாட்டுத் தூதர்கள் அளவிலும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும். தீவினை விதைத்தவர்கள் தீவினையை விரைவிலேயே துய்க்க வேண்டும
By Ilakkuvanar Thiruvalluvan
4/22/2011 4:29:00 PM
4/22/2011 4:29:00 PM
why this wolf bothering now after tamils in srilanka... according to when there is war., public will be killed is normal.... this is just to attack karunanidhi.. thats all... readers dont get surprised... this is just a drama....
By Jabar
4/22/2011 3:56:00 PM
4/22/2011 3:56:00 PM
Congress is mainly responsible for Tamil's killed in Srilanka, Next is DMK. Congress could have stopped it if it likes on that period. They didn't do that. Sonia also responsible for this killing along with karunanidhi & DMK. Only Vaiko & Nedumaran are talking for Lankan tamilians... Not even ADMK.. or Jayalalitha.
By murali
4/22/2011 3:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 4/22/2011 3:19:00 PM