புதன், 20 ஏப்ரல், 2011

இலங்கைத் தமிழர்களுக்காக நெல்லை இளைஞர் தீக்குளிப்பு

தமிழகத்தையும் இந்தியாவையும் புரிந்து கொள்ளாமல் உயிர்க்கொடை அளித்துள்ளார் பொறியாளர் கிருட்டிணமூர்த்தி. மனித நேய உணர்வாளர்கள் இவ்வழிமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்த்தேசிய உணர்வாளர்கள்  சிங்களக் கொடுமைகள். இந்திய அரசின் ஒத்துழைப்பு முதலியவை குறித்து நாடு தழுவிப் பரப்புரை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் துயருற்றவர்களுக்கு அறம் வழங்கவும் தமிழ் ஈழம்ஏற்கப்படவும் வழி வகை காண வேண்டும். ௨. தமிழ் , ஈழம் தொடர்பான செய்திகளுக்கு முதன்மை கொடுக்கும் தினமணியே காலங்கடந்து செய்தியை வெளியிட்டதுடன் முதல் பக்கத்தில் இச்செய்தி வராமல் பார்த்துக் கொண்டது ஏன்? முறைதானா? 
துயரத்துடன்  இலக்குவனார் திருவள்ளுவன் 
தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

இலங்கைத் தமிழர்களுக்காக நெல்லை இளைஞர் தீக்குளிப்பு

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest+News&artid

சென்னை, ஏப்.19- இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்.சங்கரன்கோவில் அருகேயுள்ள சீகம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (25). பொறியியல் படிப்பு முடித்துள்ள இவர் ராஜஸ்தானில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், விடுமுறையி்ல் சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்றிரவு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், "இலங்கையில் சிங்களர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத்தர வேண்டும். இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான தனிநாட்டை பெற்றுத்தர வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.தகவல் அறிந்த மதிமுக பொதுச்செயலர் வைகோ, இன்று காலை சீகம்பட்டிக்குச் சென்று கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சங்கரன்கோவில் அருகே பொறியாளர் தற்கொலை

First Published : 20 Apr 2011 02:13:38 AM IST

சங்கரன்கோவில், ஏப். 19: சங்கரன்கோவில் அருகே பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.குருவிகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த சுந்தரேசபுரம் (எ) சீகம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி (24). பொறியியல் பட்டதாரியான இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தனது கிராமத்துக்கு வந்த அவர் திங்கள்கிழமை அதிகாலையில், மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து பாட்டிலில் நிரப்பி தன் உடலில் ஊற்றி தீவைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கிருஷ்ணமூர்த்தியின் அலறல் சப்தம் கேட்டு, அவருடைய தாய் சுப்புலட்சுமி ஓடிச்சென்று மகனின் உடலில் பரவிய தீயை அணைக்க முயன்றாராம். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.பின்னர், பலத்த தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி இறந்தார். மாலையில் அவரது ஊரில் இறுதிச்சடங்குகள் நடந்தன.போலீஸ் தரப்பு: இந்த சம்பவம் தொடர்பாக குருவிகுளம் போலீஸôர் வழக்குப் பதிந்தனர். கடந்த 20 நாள்களுக்கு முன்னர் ஊருக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, வேலைக்குப் போகமாட்டேன் என்று தனது பெற்றோரிடம் கூறியதாகவும், இதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடிதம்: இதனிடையே, இறுதிச் சடங்கு முடிந்து வீட்டுக்கு வந்தபோது, கிருஷ்ணமூர்த்தி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று அவரது உறவினர்களுக்கு கிடைத்தது. கையெழுத்திடாத அந்தக் கடிதத்தில், இலங்கை என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது."அன்று ராவணன் செய்த கொடூரமான செயலை இன்று சிங்களர் செய்துவிட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒருநிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தரவேண்டும்.இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான தனிநாடு என்ற ஒரு சிறப்பை பெற்றுத் தரவேண்டும். அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்க கூடாது. இலங்கைத் தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடிதத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கையெழுத்து இல்லை என்றாலும், அவரது கையெழுத்தையும், கடிதத்தில் உள்ள எழுத்துகளையும் சரிபார்த்தபோது இரண்டும் பொருந்துவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.வைகோ ஆறுதல்: இதற்கிடையே, மதிமுக பொதுச்செயலர் வைகோ செவ்வாய்க்கிழமை கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குச் சென்று, அவருடைய பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சங்கரன்கோவில் அருகே 
பொறியாளர் தற்கொலை

இத்துயரச் சம்பவத்தை நேற்று முதலில் மும்பையில் இருந்து வந்த குறுந்தகவல்  தெரிவித்தது. தொடர்ந்து பல குறுந்தகவல்களும் மின்னஞ்சல்களும் விரிவான துயரச் செய்தியை வெளிப்படுத்தின. தமிழ் உணர்வு மிக்க தினமணியில்   தொடர்ந்து விரிவான செய்தியைத் தேடினேன். காலங்கடந்து தலைப்பும் ஏதோ ஒரு தற்கொலை போல் வந்துள்ளதே. என்ன காரணம்?  இக்கருத்தைத் தினமணி வெளியிடாவி்ட்டாலும் என் வலைப்பூவில் இடம் பெறும்.  வேதனையில் கண்ணீர் வழிந்த எச் செயலும் செய்ய முடீயாமல் எங்களுக்கு ஏற்பட்ட உணர்வு தினமணிக்கும் வந்து செய்தி தள்ளிப் போனதா? தினமணி தன்னுடைய தமிழ் முகத்தை மாற்றிக் கொள்ள வேண்டா. தினமணி நேயர்கள் சார்பில்  உயிர்க்கொடை நல்கிய  போராளி, பொறியாளர் கிருட்டிணமூர்த்தியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவிப்பதுடன் வேறு யாரும் உயிர்க்கொடை முயற்சியில் , இறங்க வேண்டா என்றும் அன்புடன் வேண்டுகின்றேன். உயிர்ப்பறிப்புகளுக்கும் உயிர்க் கொடைகளுக்கும்  நாம் செலுத்தும் வணக்கமும் அஞ்சலியும் நன்றிக்கடனும் அறமும் தமிழ்  ஈழத் தனியரசை அமைக்கச் செய்வதுதான்.  
வீர வணக்கங்களுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக