தண்டனை பெற வேண்டிய சிங்களம் திசை திருப்பப் பார்க்கிறது. சிங்களமும் துணைநின்ற துணை நிற்கும் அரசுகளும் தலைவர்களும் அதிகாரிகளும் முதலில் தண்டிக்கப்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
First Published : 21 Apr 2011 03:42:42 PM IST
Last Updated : 21 Apr 2011 04:24:48 PM IST
கொழும்பு, ஏப்.21: விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் தடை செய்யுமாறு இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்த போதிலும், புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்யவில்லை என்பதை இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.சமீபத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒடுக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளில் அதன் ஆதரவு அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்வது குறித்து அந்நாடுகளுடன் இலங்கை அமைச்சர்கள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.அடுத்தடுத்த வாரங்களில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான முறையில் இலங்கை அரசு கோரிக்கை விடுக்க உள்ளதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக