முதல்வருக்கு அதிகாரிகள் சரியான வழிகாட்டி, இது போன்ற வழக்குகள் தொடுக்கும் தவறான அறிவுரையைக் கைவிட வேண்டும். ஊடகங்களில் வந்த செய்திகளின்அடிப்படையில் திரு பழ.நெடுமாறன் பேசியுள்ளார். ஊடகங்கள் வந்த செய்தியின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்படுகின்றது. ஆனால், உண்மையில் முதல்வருக்கு இருக்கும் செல்வாக்குடன் ஒப்பி்ட்டால் பிந்தையவர் செல்வாக்கு மிக மிகக் குறைவே. முதல்வர் சார்பு ஊடகங்கள் அவற்றை வெளியிடாத சூழலில் மக்களிடம் சென்று சேரும் நிலையும் குறைவே! ஆனால், வழக்கு தொடுப்பதன் மூலம், இதன் தொடர்ச்சியாக வழக்காடுவதன் மூலம், வரும் செய்திகள்தாம் களங்கம் கற்பிப்பதாக அமையும். எனவே, அவர் கூறியது மெய்யோ பொய்யோ என்ற ஆராய்வே இல்லாமல் அவதூறு வழக்கினைத் தொடுக்காமல் இருப்பததான் நன்று. இதைவிடத் தனிப்பட்ட முறையில் அவருக்கு மடல் விடுக்கலாம். பயனேற்பட வாய்ப்பு உண்டு. (பிற அவதூறு வழக்குகளுக்கும் இது பொருந்தும்.)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, ஏப். 21: உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மீது முதல்வர் கருணாநிதி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் சார்பில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் சென்னையிலுள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: பழ. நெடுமாறன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி கடந்த 17-ம் தேதி வெளியானது. அதில் அவர், தேர்தல் ஆணையத்தை முதல்வர் கருணாநிதி வசைபாடுவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு அவர் பேசியுள்ளார். அவரது பேச்சு பொதுமக்கள் மத்தியில் முதல்வருக்கு அவமதிப்பை உண்டாக்கும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக