மே ௧௮ தமிழீழத் தேசியத் துக்கநாள் மட்டுமல்ல; மனிதக குலத்திற்கே துக்க நாள் ஆகும். உலகம் தோன்றிய நாள் முதல் வாழ்ந்த வந்த இனத்தை வந்தேறிகள் பெருமபான்மையாக மாறி, வஞ்சகர்களின் துணையுடன் வஞ்சகமாகக் கொத்துக்குண்டுகளையும் அமிலக்குண்டுகளயும் ஏவுகணைகளையும் வன்கொடுமை முறைகளையும் கொண்டு கொன்றொழித்த அவல நாளை உலக மக்கள் அனைவரும் துயரத்துடன் நினைவுகூர்தல் வேண்டும். இருக்கின்ற தமிழ் ஈழ மக்களுக்கு அறம் வழங்கப்பட வேண்டும்! தமிழ் ஈழம் தனியரசாய்த் திகழ வேண்டும்! குற்றவாளிகள் எந்நாட்டவராயினும் தண்டிக்கப்பட வேண்டும்!
துயரத்தில் பங்கேற்கும்
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கொழும்பு, ஏப்.19- முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது.இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலங்கை அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது. முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால்; ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் ரத்த சாட்சியமாக இருக்கிறது. தமிழ் ஈழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழ் ஈழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன. உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்பக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழ் ஈழ தேசிய துக்க நாளையொட்டிய வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், கருத்தரங்குகள், ரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
மிகச் சரியான அறிவிப்பு; ஒவ்வொரு தமிழரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
By பா.இரா
4/19/2011 8:57:00 PM
4/19/2011 8:57:00 PM
தமிழீழம் அடைவதே இனபடுகொலளைகுள்ளன மக்களுக்கும் போரில் வீரமரணம் அடஈந்த மாவீரர்களுக்கும் நாம் செய்யும் கடமை
By thangaraj
4/19/2011 8:15:00 PM
4/19/2011 8:15:00 PM
தமிழீழம் அடைவதே இனபடுகொலளைகுள்ளன மக்களுக்கும் போரில் வீரமரணம் அடஈந்த மாவீரர்களுக்கும் நாம் செய்யும் கடமை
By thangaraj
4/19/2011 8:15:00 PM
4/19/2011 8:15:00 PM
நான் முழு முதலாக இந்த அரசை ஏற்கிறேன்.
By ராம்கணேஷ்
4/19/2011 6:41:00 PM
4/19/2011 6:41:00 PM
உரிதிரகுமார் ஏன் சிங்கள அரசுடன் இருக்கும் கேபியின் நடவடிக்கையை கண்டிப்பது இல்லை
By pillai
4/19/2011 5:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/19/2011 5:56:00 PM