தமிழ் மன்னரால் கட்டப்பட்ட கோயில் இது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
பாங்காக், ஏப்.22- எல்லையோரத்தில் அமைந்துள்ள இந்து கோயில் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த சர்ச்சையில், தாய்லாந்து - கம்போடியா படையினர் இடையே இன்று துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கித் தாக்குதல் நடைபெற்றது.இந்த மோதலில் மொத்தம் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3 பேர் கம்போடிய வீரர்கள்.பிரே விஹார் என்னும் இடத்தில் உள்ள 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்து கோயில் தங்களுக்குச் சொந்தம் என்று இருநாடுகளும் கூறி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், டா கிராபே என்னுமிடத்தில் உள்ள மற்றொரு இந்து கோயில் தொடர்பாக இன்று மோதல் ஏற்பட்டதாக, கம்போடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சும் சொச்சீத் தெரிவித்தார். இன்றைய மோதலில் தங்கள் தரப்பில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.இதனிடையே, சுரின் மாகாணத்தில் சர்ச்சைக்குரிய கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து, சுமார் 5 ஆயிரம் பொதுமக்களை வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக