புது தில்லி, ஏப்.20: வானியல் ஆர்வலர்கள் வியாழக்கிழமை இரவு எரிகற்களை பார்த்து மகிழும் வாய்ப்பைப் பெறலாம். இம்மாதம் 21 மற்றும் 22-ம் தேதி இவை விண்ணிலிருந்து பூமியை நோக்கி ஈட்டியைப் போல பாயும் என்று வானியல் ஆராய்ச்சியாளர் மிலா மித்ரா தெரிவித்துள்ளார். மணிக்கு இரண்டு கற்கள் வீதம் புவியில் விழுந்தவண்ணம் இருக்கும். இந்த விண்கற்கள் மிகுந்த ஒளியுடனும் புழுதியைக் கிளப்பியபடி விண்ணிலிருந்து கீழே பாயும். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் சில விநாடிகளில் இது மறைந்துவிடும். இது இம்மாதம் 26-ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒளி வெள்ளம் இல்லாத பகுதியிலிருந்து பார்க்க முடியும். மாலையிலேயே எரிகற்கள் விழுவது ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக