வியாழன், 21 ஏப்ரல், 2011

compromise in I.P.L. crisis ? :ஐபிஎல் விவகாரத்தில் சமரசம்?: இலங்கை சூசகம்

இரண்டு மட்டை அமைப்பிற்கும் இடையே ஒரு மோதலும் இல்லை. இறுதி ஆட்டத்தைப் பார்க்க வந்த சிங்களத் தலைவர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் வரவேற்பு மரபிற்கிணங்க அலுவல்முறையல்லாத வருகையாளர்களாகக் கருதப்பட்டு உரிய மதிப்பு அளிக்கப்பட்டனர். ஆனால், அலுவல் முறையிலான மதிப்பு அளிக்கப்படவில்லை என்பதற்காகச் சிங்களம் முரண்டு பிடிக்கிறது. நாமோ  இனப்படுகொலை புரிந்தாலும் செங்கம்பள விரிப்பு கொடுத்து மரியாததை தருபவர்கள்!  இப்பொழுது இவ்வாறு புறக்கணித்ததாகக்  கருதிச் சிங்களம் ஊடலில் உள்ளது. அரசுகளிடையே உள்ள ஊடல் தீர்ந்தால் இந்தச் சிக்கலும் தீரும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



ஐபிஎல் விவகாரத்தில் சமரசம்?: இலங்கை சூசகம்

கொழும்பு, ஏப்.21: ஐபிஎல்லில் தற்போது விளையாடிவரும் வீரர்கள் மேலும் சில நாட்கள் விளையாட அனுமதிக்கப்படுவர் என்று இலங்கை அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.இதனால் பிசிசிஐக்கும், இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே ஏற்பட இருந்த மோதல் தவிர்க்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை அணி வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது.எனினும் அவர்களை மேலும் சில நாட்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்தியத் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது.இதுதொடர்பாக பிசிசிஐயிடம் இருந்து ஏராளமான இ-மெயில்கள் வந்தன. தேர்வுக் குழுவினரையும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தினரையும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன் என இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்த அளுத்கமகே தெரிவித்தார்.மே 10-ம் தேதி வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட வேண்டும். அதை ஒத்திவைக்கவும் பரிசீலிப்போம். பிசிசிஐக்கு சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது. அது தொடர விரும்புகிறோம். வீரர்களுக்கு புதிய தேதியை அறிவிக்க முயற்சி செய்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.ஐபிஎல்லில் தற்போது குமார் சங்ககரா, மஹில ஜெயவர்த்தன உள்ளிட்ட 11 இலங்கை வீரர்கள் விளையாடி வருகின்றனர்.அவர்கள் முன்னதாகவே நாடு திரும்புவது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்பட்டது. மே 21-ம் தேதி வரை அவர்கள் இந்தியாவில் இருப்பார்கள் என அணி உரிமையாளர்களும் எண்ணியிருந்தனர்.ஆனால் இலங்கை அணி வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அரசும், கிரிக்கெட் வாரியமும் பிடிவாதம் பிடித்துவந்தன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக