இதில் ஒப்பந்தக்காரரைப்பாராட்டுவதற்கு ஒன்றும் இல்லை. இவர் இதற்கு முன்பும் கையூட்டு மூலம் பல ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பார்; இனியும் கொடுக்கத் தயங்க மாட்டார். பேரத்தில் சிக்கல் என்றதும் நல்லவர் ஆக மாறியுள்ளார். இவரை விட ஊழல் செய்தவர்களைப்பற்றி ஆதாரத்துடன் விழிப்புப்பணித்துறைக்குத் தகவல் தெரிவித்தும் ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஊழல்வாதியிடமே பணம் பெற முறையீடு உதவியாக இருந்ததுதான் கொடுமை. அதுபோல் அரசிடம் ஊழல்புரியும் சிலர் பற்றி ஆதாரங்களுடன்
முறையாகத் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, ஏதோ பாவம் இந்த இளநிலைப் பொறியாளர் மாட்டிக் கொண்டார். இவரை விடப் பெருச்சாளிகள் இவர் அலுவலகத்திலேயே இருந்திருப்பர். அவர்கள் இவரைப் பலிகடா ஆக்கியிருப்பர்.
முறையாகத் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, ஏதோ பாவம் இந்த இளநிலைப் பொறியாளர் மாட்டிக் கொண்டார். இவரை விடப் பெருச்சாளிகள் இவர் அலுவலகத்திலேயே இருந்திருப்பர். அவர்கள் இவரைப் பலிகடா ஆக்கியிருப்பர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சீர்காழி, ஏப்ரல் 21: சீர்காழியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது செய்யப்பட்டார். சீர்காழியில் மின்வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணி புரிபவர் ராமச்சந்திரன். இவர் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டுக்கு மேல் செல்லும் மின் இணைப்பு தொடர்பாக ஏற்கெனவே ரூ.10 ஆயிரம் பெற்றிருந்தாராம். மேலும் ரூ.15 ஆயிரம் கொடுத்தால்தான் விரைந்து பணி முடியும் என்று சொன்னாராம். அதன்படி, இன்று காலை அந்த தனியார் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தைப் பெற்றபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள்
By tamiliniyan
4/21/2011 4:31:00 PM
4/21/2011 4:31:00 PM
By Nour Ibraguime
4/21/2011 1:36:00 PM
4/21/2011 1:36:00 PM
By umakrishh
4/21/2011 1:16:00 PM
4/21/2011 1:16:00 PM
By Kanchi Thalaivan
4/21/2011 1:03:00 PM
4/21/2011 1:03:00 PM