எதிர்க்கட்சி ஆகப் போவதால் நடத்தும் நாடகம் . என்றாலும் பாராட்டுகள். காங்.கிற்குப் பொறுப்பில்லை என மக்கள் நினைக்க மாட்டார்கள். தமிழ் நாட்டுக் காங். அடிமைத்தனததைத் தளர்த்தி மத்திய காங்.கிற்கு எதிராகக் குரல் கொடுப்பதாகவே எண்ணுவார்கள். ஈழத்மிழர் படுகொலைகளுக்கும் மீனவர் படுகொலைகளுக்கும் தமிழ் முதலான தேசிய இனங்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கும் காங்.கே காரணம் என்பதால் உரிய தண்டனையை அக்கட்சி பெறும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, ஏப்ரல் 18: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படுவதைக் கண்டித்தும், அண்மையில் மர்மமான முறையில் இலங்கைக் கடற்பகுதியில் இறந்து போன தமிழக மீனவர்கள் படுகொலையைக் கண்டித்தும் சென்னை, மயிலாப்பூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கைத் தூதரகம் அருகில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கைக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, மீனவர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் போலீஸார் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸார் சிலரை கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக