ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பாடகர் பி.பி.சீனிவாசு காலமானார்

பாடகர் பி.பி.சீனிவாசு காலமானார்

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
1930. செப்.22ம் தேதி தற்போதைய ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்தவர் பிபி.ஸ்ரீனிவாஸ். பனிந்திரஸ்வாமி, சேஷகிரியம்மா தம்பதிக்குப் பிறந்த ஸ்ரீனிவாஸின் முன்னோர்கள் பசலபுடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
கல்லூரியில் பி.காம் படித்துள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என எட்டு மொழிகளை அறிந்தவர். தெலுங்கு மொழியில் கஸல் போன்ற பாடல்களை அதிகம் பாடியுள்ளார். கீதா தத், சம்ஷத் பேகம், ஜிக்கி ஆகியோருடன் இணைந்து பாடல்கள் பல பாடியுள்ளார்.
ஆர்.நாகேந்திர ராவின் ஜாதக பலம் (ஜாதகம்) என்ற படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் திரைப்படப் பாடலில் பாடி அறிமுகமானார்.
ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் ஹிந்திக்கும் அறிமுகமானார். ஹரிச்சந்திரா என்ற மலையாளப் படத்தில் 1955ல்  அறிமுகமான பி.பி.ஸ்ரீனிவாஸ், பிரேம பாசம் படத்தில் பி.சுசீலாவுடன் டூயட் பாடல் பாடி அசத்தினார். பின்னாளில் கன்னட திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய ராஜ்குமாருக்கும், தமிழில் ஜெமினி கணேசனுக்கும் அதிக பாடல்கள் பாடி, இவர்களுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலே சரியாக வரும் என்ற அளவுக்கு திரையுலகில் பேசப்பட்டார். மேலும் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பின்னணிக் குரல் கொடுத்து, திரைப் பாடல்களை பாமர ரசிகர்களும் அதிகம் கேட்டு விரும்ப வைத்தார்.
கண்ணதாசன் எழுதிய காலங்களில் அவள் வசந்தம் பாடல், அடுத்த வீட்டுப் பெண் படப் பாடல் என இவரின் பாடல்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப் படுகிறது. பி.சுசீலா, எஸ்.ஜானகி, பி.பானுமதி, கே.ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் காலத்தால் அழியாதவை.
திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது, பக்திப் பாடல்கள், சுலோகங்கள், தோத்திரங்களும் இவர் அதிகம் பாடியுள்ளார். சாரதா புஜங்க ஸ்தோத்திரம், ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம்,  முகுந்த மாலை, ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்தோத்ரம், புரந்தரதாஸர் தேவநாமாக்கள் என இவர் பாடிய ஸ்தோத்திரங்கள் இன்றளவும் அன்பர்களால் கேட்டு ரசிக்கப்படுகின்றன.
சென்னையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை அண்ணாசாலையை ஒட்டிய உட்லேண்ட்ஸ் ஹோட்டல் திறந்த வெளி பகுதியில் (தற்போதைய செம்மொழிப் பூங்கா பகுதி) தினந்தோறும் வந்து, தன் நண்பர்களுடன் உரையாடிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். மாலை நேரங்களில் தன் வயதையும் மறந்து, இளம் நண்பர்களுடனும், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் என அனைவரிடமும் அமர்ந்து பேசிப் பொழுது கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த அனுபவங்களை வைத்து, ஹோம் அவே ஃப்ரம் ஹோம் என்ற ஒரு தொகுப்பையும் எழுதினார் ஸ்ரீனிவாஸ்.
பல்வேறு நாடக மன்றங்கள், இசை அமைப்புகளில் தலைமையும் பங்கேற்பும் கொண்டிருந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

மறைவுச் செய்தி

மறைவுச் செய்தி


இன்று(சித்திரை 1, ஏப்பிரல் 14)  வைகறையில் உறக்கத்தில்  திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் அவர்கள்  இயற்கை எய்தினார். அவரது பிரிவால் துயருறும், 
அவர் கணவர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் புகழ்பெற்ற இலக்கிய அமைப்பில் ஏறத்தாழ 45 ஆண்டுகளாகச் செயலராகச் செயல்படும்   பொறி.பக்தவத்சலம், அவர்கள் மக்கள், முனைவர் தாமரைக்கண்ணன், திருவாட்டி கல்யாணி சீனிவாசன், திருவாட்டி சுமதி சீனிவாசன்,  உற்றார் உறவினருக்கு இணையத்தமிழன்பர்கள் சார்பில் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.


முகவரி
19,  கோமதிபுரம் முதன்மைச் சாலை,  
(அரசு மேனிலைப் பள்ளி அருகில்) 
திருநின்றவூர்
பேசி : 9962493459 
             9941357869
            044 2634 1857

போற்றுவோம் அண்ணல் அம்பேத்காரை! Language policy of Ambedkar

உலகத் திருக்குறள் கலைச்சங்கமம் - முப்பெரும் விழா அழைப்பிதழ்



உலகத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு - தீர்மானங்கள்


Geneva resolution answerable to arson committed on Tamil press

Geneva resolution answerable to arson committed on Tamil press: Jaffna activist

[TamilNet, Saturday, 13 April 2013, 15:37 GMT]
Burning the press of Eezham Tamils in the island has more than three decades of history. The office and machinery of the Jaffna-based Tamil Daily Eezha Naadu was burnt down the very night the Jaffna Public Library was put to ashes in 1981. Arson was once again committed on Eezha Naadu while the IPKF of the New Delhi Establishment was occupying Jaffna. The Washington-New Delhi deception carried out in the name of Geneva resolution, allowing Sri Lanka to escape from genocide indictment and to continue with structural genocide, is answerable to the current attacks and arson committed on the press of Eezham Tamils in the island, said a new generation political activist in Jaffna.

Further comments from the activist in Jaffna:

After 2009, capture, or if capture not possible, attack on the press of Eezham Tamils is systematically carried out in Jaffna and Colombo.

Nowadays, not only the genocidal Establishment in Colombo, but also the abetting Establishments in Washington and New Delhi are actively engaged in capturing the media of Eezham Tamils and in buying journalists inside and outside of the island.

Meanwhile, China has agreed to help significantly upgrade Sri Lankan ‘cyber-warfare’ capabilities, The Indian Express reported last month.

The current series of attack and arson on the press of Eezham Tamils that tries to remain independent follows the ‘reconciliation’ preceptor Washington initiating an empty resolution at Geneva and New Delhi watering it down further.

The OHCHR could find itself ‘occupied’ in cataloguing such attacks, as it was destined by the Geneva resolution for the job of only counting ‘the trees’, the political activist in Jaffna said.

Chronology:

Torture is systemic in Sri Lanka, HK Court sends chilling message

Torture is systemic in Sri Lanka, HK Court sends chilling message

[TamilNet, Saturday, 13 April 2013, 10:02 GMT]
Giving additional impetus to world-wide protests of Tamils against the gross rights violations, including torture, on Tamil civilians by Sri Lanka security forces, and reinforcing that torture is endemic to Sri Lanka's oppressive state apparatus, and systemic across successive Sri Lanka governments, Hong Kong's appeals court granted asylum to two Tamil men, declaring that the men face torture and can claim "well-founded fear of persecution" if returned to Sri Lanka, reports from Hong Kong, a special administrative region of China, reveal. The two Tamils are believed to be the first and the second to win appeal cases since a new appeal process was set in place in 2009 in Hong Kong. The first man arrived in Hong Kong in 2003, at age 20. The names of the two were not made public due to security reasons, reports said.
PDF IconPaper: Well-founded fear of persecution
"While Sri Lankan obstructionism has temporarily paralyzed the formation of a post-Mu'l'livaaikaal tribunal to adjudicate the jus cogens norm violations perpetrated by the Rajapakse administration, the international crime of State-sponsored torture targeting Tamils fleeing racial persecution on the island continues to accrue recognition in the global corpus of Tamil asylum case law, from France to Canada and beyond," spokesperson for Tamils Against Genocide [TAG], a US-UK based activist organization that seeks legal redress for Tamil victims of war, said.

"In contradistinction to the fate of nearly 19 Tamil asylum seekers in UAE, Hong Kong has affirmatively enforced the principle of non-refoulement in their determination that a well-founded fear of future persecution via torture exists today in Sri Lanka, even though the asylum seekers entered Hong Kong in 2003," TAG added.

"The various methods of Sri Lankan torture as applied to Tamils in custody of the majority-Sinhala security establishment range from electrocution, asphyxiation by petrol fumes, to sodomy, and have been developed across multiple Presidential administrations, thereby satisfying the criteria for individual and state criminal responsibility," TAG further said.
Mark Daly, attorney for the first Tamil refugee
Mark Daly, attorney for the first Tamil refugee
Mark Daly - lawyer for the Tamil involved in the Hong Kong appeal, said the case "lends some credibility to the process". The Torture Claims Appeal Board had received 1,335 appeals by the end of last year, according to South China Morning Post. While it means he will no longer face repatriation, Daly said his client's rights in Hong Kong remained "minimal" and his future was still unclear.

"The independent appeal board was set up to hear a fair independent appeal. If the director of immigration rejected their claims, claimants have the right to appeal to this board. It is an important procedural safeguard," the paper quoted Daly as saying.

The appeal board - a panel of former judges and magistrates - is part of enhanced torture-screening mechanisms introduced by the government following a 2008 case in which the Court of First Instance ruled the then screening process failed to meet high standards of fairness.
Peter Barnes, attorney for the second Tamil refugee
Peter Barnes, attorney for the second Tamil refugee
Peter Barnes, the attorney for the second Eelam Tamil to be granted asylum, said, "[o]bviously, it's good news for him, but it's also good news for the system, which has finally recognised that there's a person who's in need of protection. I hope that now they've recognised one, they'll be prepared to recognise others who are equally deserving of protection," Barnes said.

Both attorneys are from the same law firm Barnes & Daly.

Hong Kong began applying the UN Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment. The first claim was approved in 2008.

Related Articles:
06.04.13   UAE Tamil deportees face torture, HRW raises alarm
28.02.13   UK High Court blocks Tamil deportations
23.07.12   Emerging logistics blueprint of Sri Lanka's White Van operat..


External Links:
UN: Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment
CMP: Hong Kong grants torture claimant protection; only the second ever
CMP: Sri Lankan first to win Hong Kong asylum under new appeal process


தீப்பெட்டியினும் சிறிய படப்பொறி




கோ-புரோ  ஃகீரோ 3  படப்பொறி  ஒரு  கருவூலம் - எல்.முருகராஜ்


தினமலர்.காமின் பொக்கிஷம் பகுதியில் போட்டோகிராபி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிவருவது அனைவரும் அறிந்ததே.இதில் வரும் உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர்களின் படங்கள் மற்றும் அவர்களது அரிய புகைப்படங்கள் பலருக்கு பாடமாக அமைந்துள்ளது.
அதைவிட முக்கியமாக வளரும் நமது இளம் புகைப்படக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் களமாக இந்த பொக்கிஷம் பகுதி அமைந்துவிட்டது,அதிலும் இப்போது விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்களின் படங்களை பகிர்ந்து கொள்ளும் முக்கிய தளமாக மாறி மாணவர்களுக்கு நன்மை தந்து வருகிறது.


இப்போது அதிகமாக பேசப்படும் வைல்டு லைப் போட்டோகிராபி பற்றி அதில் ஈடுபட்டுள்ள புகைப்படக்கலைஞர்களின் படங்கள் அதிகம் பதிவு செய்ததும் நமது களமே.


இப்படி புகைப்படக்கலையின் மேன்மைக்கான இந்த தளம் பற்றி அறிந்த சென்னையில் உள்ள முன்னணி புகைப்பட நிறுவனமாக போட்டோ டிரேட் நிறுவனம், புதிதாக அறிமுகமாகியுள்ள அமெரிக்க தயாரிப்பான கோ-புரோ ஹீரோ 3 என்ற கேமிராவை நம்மிடம் கொடுத்து இதன் திறனறிந்து தரும் பொறுப்பை வழங்கியது.


கோ-புரோ கேமிராவானது தீப்பெட்டி அளவைவிட குறைந்தது,இதில் தொடர்ந்து இரண்டரை மணி நேரத்திற்கு வீடியோ மற்றும் ஸ்டில் படங்களை பதிவு செய்யலாம். மழை, வெயில், புழுதிக்காற்று, கடல் என்று எந்த சூழ்நிலையிலும் வெளியில் வைத்து படமெடுக்கலாம், அதற்கேற்ப பாலிகார்பனேட் கவசமிடப்பட்டுள்ளது.


தலையில் மாட்டிக்கொள்ளலாம், மார்பில் தொங்கவிடலாம், மணிக்கட்டில் கட்டிக் கொள்ளலாம், சைசக்கிள் முதல் படகு வரை எதிலும் பொருத்திக்கொள்ளலாம்.


வழக்கமான கேமிரா போல் இல்லாமல் அல்ட்ரா வைடு கோணத்தில் படங்களை தேவைக்கேற்ப ஸ்டில்லாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கிறது. ஒரு வித்தியாசமான பார்வை பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு நல்ல கேமிரா.


விலை முப்பதாயிரத்திற்குள் என்பதால் இதனை பல்வேறு விதமான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். உதாரணமாக திருமண வீட்டில் மணமகன் கையில் இந்த கேமிராவை பொருத்தி விடுகிறார்கள், அவர் அக்னியில் மங்கல பொருட்களை தூவுவது மற்றும் மாங்கல்யத்தை எடுத்துச் சென்று முடிச்சு போடுவது போன்ற நினைத்து பார்க்கமுடியாத வித்தியாசமான கோணங்களில் படத்தை பதிவு செய்து தருகிறது.


மேற்கத்திய நாடுகளில் சினிமா எடுப்பவர்கள் விலை குறைவு என்பதால் அதிக எண்ணிக்கையில் வாங்கிக்கொண்டு பல கோணங்களில் வைத்து படமெடுத்து வருகின்றனர். ஒரு கார் ஏறி இறங்குவதை இந்த கேமிராவின் மீதே ஏற்றி இறக்கி பதிவு செய்கிறார்கள். கேமிரா போனாலும் வித்தியாசமான காட்சி கிடைத்துவிடுகிறது. இதேபோல அடித்து உடைப்பது, ஆகாயத்தில் இருந்து விழச் செய்வது, கடலலைச் சறுக்கு விளையாட்டில் பயன்படுத்துவது, கடலுக்கு அடியில் படம் எடுப்பது போன்ற பல விஷயங்களில் இந்த கேமிராவை பயன்படுத்துகின்றனர்.


இந்த கேமிராவை நான் பயன்படுத்தி எடுத்த படங்களை இங்கே பார்வைக்கு வைத்துள்ளேன்.


பாழடைந்ததும், தற்போது சீர்செய்யப்பட்டு வருவதுமான 126 வருட பாரம்பரிய பெருமைமிக்க சென்னை விக்டோரியா பப்ளிக் ஹால் பற்றிய புகைப்படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.


இந்த கேமிரா பற்றி மேலும் விவரமறிய தொடர்பு கொள்ளவும், சென்னை,போட்டோ டிரேட் எண்: 044-28547113.


வன்முறையைத் தடுக்க!


இரட்டிப்புமகசூல்!

விவசாயிகளுக்கு, அரசின் மானியத்தோடு, அதிக லாபம் தரும், மாம்பழ சாகுபடியின் புதிய முறையை கூறும், திரவியம்: நான், தென்காசி தோட்டக் கலையில், உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன். தொடர்ந்து மழையின் அளவு குறைவது, மா மரத்தில் ஏற்படும் பூச்சிகளின் தாக்குதல் போன்ற குறைகளை நீக்கவும், மா சாகுபடி பரப்பை அதிகரித்து, அதன் உற்பத்தியை பெருக்குவது என்ற நோக்கிலும், தேசிய தோட்டக்கலை இயக்கம், "மா அடர் நடவு' என்ற, புதிய மா சாகுபடி முறையை அறிமுகபடுத்தியுள்ளது.

இம்முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு, முதலாம் ஆண்டு, 24 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் ஆண்டு, 8,000 ரூபாயும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேரில், 100 மாங்கன்றுகளை மட்டுமே நட்டு வளர்க்க முடியும் என்ற நிலையை மாற்றி, 400 செடிகளை இம்முறையில் வளர்க்க முடியும்.

மா சாகுபடிக்கு, வடிகால் வசதியுள்ள செம்மண் ஏற்றது. அல்போன்சா, பங்கனபள்ளி, சேலம், மல்லிகா போன்ற மா ரகங்களே, தமிழகத்தில் அதிகம் பயிர் செய்யப்படுகின்றன. ஆடி முதல் மார்கழி வரை, மா கன்றுகளை நடவு செய்யலாம். வாங்கி வந்த மாங்கன்றுகளை உடனே நடவு செய்யாமல், நடவு செய்ய உள்ள நிலத்தின் மேல் மண்ணை, கன்று இருக்கும் பைகளில் இட்டு, நீர் தெளித்து, புதிய தளிர்கள் வரும் வரை, நிழலில் வைத்த பின்னரே, நடவு செய்ய வேண்டும்.
மாங்கன்றுகளுக்கு, தேவையான காலங்களில் உரமிடுவது, நோய் தாக்கிய மற்றும் காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு, சூரிய வெளிச்சமும், காற்றும், மரக் கிளைகளுக்கு கிடைக்கச் செய்வது, மா மரம் பூக்கும் தருணத்தில் வளர்ச்சி ஊக்கிகள் தெளிப்பது போன்ற செயல்களில், அதிக கவனம் தேவை.மாங்காய்கள், 80 சதவீதம் முற்றிய பின்னரே, அறுவடை செய்ய வேண்டும். ஏற்றுமதிக்கான மாங்காய்களை சேதமில்லாமல் பறிக்க வேண்டும். மற்ற முறைகளில் ஒரு ஹெக்டேருக்கு, 12 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும். ஆனால், இம்முறையில், 20 முதல், 25 டன் மாங்காய்களை, அறுவடை செய்து அதிக லாபம் ஈட்டலாம்.

வன்முறையை த் தடுக்கணும்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து, ஐ.நா., சபையில் பேசிய, 13 வயது மாணவி சொர்ணலட்சுமி: நான், சென்னை லிட்டில் பிளவர் கான்வென்டில், 9ம் வகுப்பு படிக்கிறேன். பிறக்கும் போதே கண் பார்வை இல்லாமல் பிறந்தேன். நான் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், தன்னம்பிக்கை மற்றும் உலக அறிவுக்கான கருத்துக்களை சொல்லியே, பெற்றோர் வளர்த்தனர். படிப்பது, கீ போர்ட் வாசிப்பது, செஸ் விளையாடுவது என, அனைத்திலும் கவனம் செலுத்தினேன்.

மொத்தம், 6,000 குழந்தைகள் உறுப்பினராக உள்ள, "தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி குழந்தைகள் பாராளுமன்றம்' என்ற குழந்தைகள் அமைப்பில் சேர்ந்தேன். உலகில் குழந்தைகளுக்காக செயல்படும் அமைப்புகளில், சிறந்த அமைப்பு என, 2009ம் ஆண்டு, "யுனிசெப்' வழங்கும், "சான் மெரினோ-யுனிசெப்' விருதை, எங்கள் அமைப்பு வென்றுள்ளது.
"தானே' புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் எண்ணத்தில், ஒவ்வொரு குழந்தைகளிடமும், ஒரு ரூபாய் வீதம் என, 7,000 ரூபாய் வசூல் செய்து, "தானே' புயலால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுத்தேன். இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின், குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எப்படி ஒழிப்பது என, ஆராய்வதற்கான கூட்டம், நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., சபை அரங்கில் நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, குழந்தைகள் பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினேன்.பின்லாந்தின், ஐ.நா., பிரதிநிதியான ஜோர்மா பவ்டு என்பவர், குழந்தைகள் பாராளுமன்றத்தை தங்கள் நாட்டிலும் அமைக்க முயற்சிப்பதாக கூறினார்.என் ரோல் மாடலாக, விவேகானந்தரை பின்பற்றுகிறேன். ஐ.ஏ.எஸ்., ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே, என் எதிர்கால லட்சியம்

த.நா.தேர்வாணையத் தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்விகள் :

த.நா.தேர்வாணை யத் தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்விகள் : அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_68946620130414002615.jpg

சென்னை:டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்குரிய பாடத்திட்டங்கள், சேர்க்கப்பட்டுள்ளன. குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளில் மீண்டும், தமிழில் இருந்து, 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது.

போட்டித் தேர்வு : தேர்வாணைய தலைவராக நடராஜ் பதவி வகித்தபோது, போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை, தற்போதைய காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்தார். பழைய பாடத்திட்டத்தின் கீழ், குரூப்-2 மற்றும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-4 தேர்வுகளில், தமிழ் மொழிப் பாடத்தில் இருந்து, அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.பாடத்திட்டம் மாற்றப்பட்டபோது, குரூப்-2 தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத்திட்டம், முற்றிலும் நீக்கப்பட்டன. இதற்கான, 200 கேள்விகளும், பொது அறிவு பாடத்திட்டங்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டன. "ஆப்டிடியூட்' என்ற புதிய பகுதியும், இதில் சேர்க்கப்பட்டது.பல லட்சக்கணக்கான தேர்வர் பங்கேற்கும், குரூப்-4 தேர்வில், மொழித்தாள் பகுதி கேள்விகள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட கேள்விகள், "ஆப்டிடியூட்' பகுதிக்கு ஒதுக்கப்பட்டது.இதேபோல், வி.ஏ.ஓ., தேர்விலும், மொழிப்பாட கேள்விகள் (தமிழ் அல்லது ஆங்கிலம்), 100ல் இருந்து, 30 ஆக குறைக்கப்பட்டன.
புதிதாக, கிராம நிர்வாகம் மற்றும், "ஆப்டிடியூட்' பகுதிகள் சேர்க்கப்பட்டன. தேர்வாணையம் மேற்கொண்ட இந்த புதிய நடவடிக்கைக்கு, கருணாநிதி, ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்வில், தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை, குறைக்கக் கூடாது என்றும், இதனால், கிராமப்புற தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், அவர்கள் தெரிவித்தனர்.

ஆலோசனை:இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி, சட்டசபையில், கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் பேசுகையில், "தேர்வாணைய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, தேர்வாணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்' என, தெரிவித்தார். "அரசின் ஆலோசனை குறித்து, பரிசீலனை செய்து வருகிறோம்' என, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணனும், அப்போது தெரிவித்திருந்தார்.கடந்த மாத இறுதியில், இது தொடர்பாக, தேர்வாணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த கூட்டத்திலும், தமிழ் பாடத்திற்கு, பழையபடி உரிய முக்கியத்துவம் அளிப்பது குறித்து, விவாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகையில், "பழைய பாடத்திட்டத்தில், மொழிப்பாடத் திட்டங்களுக்கு, எத்தகைய முக்கியத்துவம், எத்தனை கேள்விகள் இருந்தனவோ, அவற்றை, அப்படியே மீண்டும் சேர்க்க, ஆலோசிக்கப்பட்டு உள்ளது. எனினும், அடுத்த வாரத்தில் நடக்கும் மற்றொரு கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்பட்டு, உடனடியாக அறிவிக்கப் படும்' என, தெரிவித்தன.

மனம் மாறியது ஏன்?பழைய பாடத்திட்டங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என, பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தது குறித்து, தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ் சிறப்பு பேட்டி, "தினமலர்' நாளிதழில், மார்ச், 20ம் தேதி வெளியானது.அப்போது அவர் கூறுகையில்,"வி.ஏ.ஓ., பணிக்குச் செல்பவர்களுக்கு, தமிழ் இலக்கணம் மிகவும் அவசியமா; அல்லது, கிராம நிர்வாகத்தைப் பற்றியும், ஆறு, ஏரிகள், நில அமைப்புகள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமா?' என, கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.வி.ஏ.ஓ., பணிக்கு வருபவர்கள், கிராம நிர்வாகத்திறனை பெறுவது, மிகவும் அவசியம். இதற்காகத் தான், புதிய பாடத்திட்ட பகுதி சேர்க்கப்பட்டது. அதுவும், தமிழ் வழியில் தான் சேர்க்கப்பட்டன.மேலும், புதிய பாடத்திட்டம் குறித்து, தமிழக அரசிடம் ஆலோசிக்காமல், நடராஜ் வெளியிட்டு இருக்க மாட்டார். அப்படியிருக்கும்போது, அப்போது அனுமதி அளித்த தமிழக அரசு, இப்போது திடீரென, மனம் மாறியது ஏன்?"தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை' என, அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், புதிய பாடத்திட்டம், கிராமப்புற படித்த இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினால், அது, அரசியல் ரீதியாக, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தான், தமிழக அரசு, பின்வாங்கியதற்கு காரணம் என, கூறப்படுகிறது.