தொடரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூன், 2013

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்குத் தொடரி


சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு அன்றாடம் தொடரி அறிமுகம்

சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஜூன் 22-ம் தேதியில் இருந்து தினசரி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது இணைப்பு ரயிலாக வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்:
ரயில் எண் 16185: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். ரயில் எண் 16186: வேளாங்கண்ணியில் இருந்து சென்னை இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.இந்த ரயில் (ரயில் எண் 16185/16186 ) சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டு நாகப்பட்டினம் வரை இயக்கப்படும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், திருபாதிரிபுலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

திங்கள், 28 ஜனவரி, 2013

இலண்டன் தொடரித்துறையில் தமிழ் thamizh in london railway

இலண்டன் மாநகர தொடர்வண்டி பருவ பயண அட்டையை புதுப்பிக்கவும் மற்றும் தொடர்வண்டி பயணச் சீட்டை பெறுவதற்கும் தானியங்கி இயந்திர சேவையில் தமிழுக்கும் இடம் உண்டு. மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

ஆனால் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகியும் தொடர்வண்டியில் செல்வதற்கு தமிழில் முன்பதிவு செய்ய முடியாது. தமிழில் பயணிகள் பெயர்களை பார்க்க முடியாது. தமிழில் அறிவிப்புகள் பார்க்க முடியாது. அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலம் தான். இங்கிலாந்து நாட்டை போல் இந்தியாவும் தனது மொழித் தீண்டாமைக் கொள்கையை கைவிட வேண்டும். அனைத்து இன மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும். அப்போது தான் உலகின் தொன்மையான தமிழ் மொழிக்கு விடுதலை கிடைக்கும்.

படம் உதவி : தீசன் ராமநாதன்

செவ்வாய், 30 அக்டோபர், 2012

தொடரி மொய்ப்பு! கேள்வி கேட்பார் இல்லையா?


தொடரியின் (இரயிலின்) கடும் கூட்டத்தை ப் பொருட்படுத்தாமல் உத்தரரப்பிரதேச மாநிலம் சந்துவாசு நகரில்  நீராட ச் செல்லும் பற்றர்கள் (பக்கதர்கள்.)